Pages

Sunday, 1 November 2015

சிற்றிலக்கிய பதிப்பு வரலாறு



சிற்றிலக்கிய பதிப்பு வரலாறு

 

                                 முனைவர்.சி.வீரமணி,  உதவிப்பேராசிரிர்
                                  தமிழ்த்துறை சென்னை.4.

     தமிழ் சமூகத்தின் தலைமை சான்ற இலக்கண இலக்கிங்கள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உயிர்புடனும் துடிப்புடனும் தமிழார் தம் மனதைக் கவர்ந்துள்ளன. அவ் இலக்கியங்களை தொடார்ந்து நீதி நுhல்கள், காப்பியங்கள், பக்கி இலக்கியங்கள் முதலானவை பல்கிப் பெருகின. இக்காலத்தில் தமிழர் தம் ஆட்சி சிறப்புற்று விளங்கிய போதும் தமிழ் அரசர்களுக்குள் பகைமை உணர்வு மேலேங்கி தங்களுக்குள்ளே போரிட்டு கொண்டனர். இச்சமயத்தில் தமிழ் அரசார்களுக்கு உதவும் பெருட்டாக தமிழகத்துள் உட்புகுந்த வேற்று அரசர்கள் ஆட்சி அதிகாரங்களை தமதாக்கிக் கொண்டனர். அவர் தம் காலங்களில் அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு சிற்றிலிக்கியங்கள் தோன்றலாயின. அதனால் என்னவோ நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது, என்பன போன்ற பழமொழிகள் தோன்றலாயின. இவற்றுள் பள்ளு, குறம் போன்ற இலக்கியங்கள் தெருக்கூத்தாகவும் மேடை நாடகங்களாகவும் நடிக்கப் பெற்று மக்கள் மத்தியில் பரவலாயின.

     ஐரோப்பியர் வருகை இந்திய நிலப்பரப்பில் பல்வேறு நவீனச் செயற்பாடுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன. பதிப்பு என்ற தொழில் நுட்பத்தை அவர்கள் தமிழ்ச் சூழலில் கொணர்ந்தது சனநாயக அரசியல், முதலாளித்துவம் நகர மயமாக்கம், அனைவரும் கற்றல,ர் வெகுசனப் பண்பாட்டு உருவாக்கம், பகுத்தறிவு, மரபிற்கெதிரான பார்வை, சமய சார்பின்மை, அறிவியல் மீதான நம்பிக்கை, தனிமனித வாதம், அறிவொளிக்கால கருத்துக்களின் வெளிப்பாடு, மனிதாபிமான கருத்தியலின் வளர்ச்சி ஆகியனவற்றை விவாpக்கலாம்.       
     இந்தியப்புலத்தில் நடைபெற்ற ஐரோப்பியர் வருகை தவிர்க்க இயலாமல், இத்தகைய நவீனத்துவக் கூறுகளைப் பல்வேறு தளங்களில் கொணர்ந்துள்ளது. அதில் முதன்மையானதாக அளவீடுகளும் ஆவணப்படுத்தமும்
             

              மலைகள், புவியியல் எல்லைகளை அளவிடல்
              மக்கள் தொகை கணக்கெடுப்பு
              அம்மைத் தடுப்பு ஊசி
              மொழிகள் கணக்கெடுப்பு, மொழியியல் உருவாக்கமும்
              மானுட இனங்களை ஆவனப்படுத்தி ஆராய்தல்- மானுடவியல்
              அச்சு தொழில் நுட்பம்
     இப்புள்ளிகளில் குவியும் நவீனத்தின் வருகைகளின் ஒன்றாகவே அச்சு தொழில் நுட்பம் அமைவதாயிற்று. ஆகவே அச்சாக்கம் என்னும் தொழில் நுட்பச் செயல்பாட்டின் வழியாக நவீனத்துவம் இந்தியாவிற்குள் வாசிப்பு பரவலாக்கம், சனநாயகப் பார்வை ஆகியவற்றை கொணர்ந்தது.
போர்த்துகீசியர் வருகை
     போர்த்துகீசிரியார்களின் தலைநகராக விளங்கிய லிஸ்பன் ஒரு துறைமுகப் பகுதியாகும். இங்கு கப்பல் கட்டுதல், கடலோடு வாணிகம் செய்தல் என்பன பரவலாக 17-ஆம் நுhற்றாண்டில் அமைந்திருந்தது. மாலுமிகள் செல்வந்தர்களாக அமைந்திருந்தனர். கடலோடி வாணிபத்தில் ஈடுபடும் மாலுமிகளுக்கு நாலில் ஒரு பங்கு லாபம் தருவதான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் புதிய நிலப்பகுதிகளிலிருந்து அரசுக்குப் புதிய வாசைன திரவியங்களும் பாpசாகக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு ஏற்ற பாpசுகள் அளிக்கப்பட்டன. இத்தகை சூழ்நிலையில் தான் வாஸ்கோடகாமா கேப்ரியல் எனும் கப்பலில் பயணம் செய்து கள்ளிக்கோட்டையை வந்தடைந்த வாஸ்கோகாமாவை சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் ஒரு வாரத்திற்குப் பின்னரே விடுவிக்கப்படாhர். மிகுந்த மன உளைச்சலோடு லிஸ்பன் சென்ற வாஸ்கோடகாமா இரண்டாம் முறையாக இருபது கப்பல்களோடு படையெடுத்து வந்து கள்ளிக்கேட்டையைத் தீக்கு இரையாக்கினான். அதன் பின் கேவா சென்று அங்கிருந்த பழங்குடி மக்களை அழித்து அழித்து ஒரு அரசினை நிறுவினான். இச்செயலின் காரணமாக போர்த்துகீசியாpன் வைஸ்ராயாக வாஸ்கோடகாமா நியமிக்கப்பட்டான். மூன்றாவது முறையாக வாஸ்கோடகாமா கெச்சிக்கு வந்த போது மரணமடைந்தார். இவாpன் கடல்வழிப் பயணம் பல மேலை நாட்டினருக்கு இந்தியாவிற்குள் வரும் புதிய வழிகளைக் காட்டிக்கொடுத்தன. இதன் விளைவாக டச்சுக்காரார்களும், டேனிஷ்காரார்களும் இந்தியாவிற்குள் நுழைந்தனர். டச்சு, டேனிஷ் நாட்டினர் இந்தியவிற்குள் நிறுவிய சில முதன்மையாக செயல்பாட்டினைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
     டச்சு (ஹாலந்து) நாட்டினாpன் மாலுமியாக கார்னியல் குட்மன் ஜவாவை 1595-97-ல் வந்தடைந்தார். ஐக்கிய கம்பெனி (1602) என்று பெயர் சூட்டப்பட்ட இக்கம்பெனியின் செயல்பாடுகளாவன.
1605-ல் மசூலிப்பட்டிணம்
1610-ல் பழவேற்காடு
1617-ல் சூரத், வங்காளம்
1638,58-ல் போர்த்துகீசியாpடமிருந்து கைப்பற்றப்பட்ட இலங்கை
1658-ல் துhத்துக்குடி
1669-ல் நாகப்பட்டிணம்,
1661-ல் கொல்லம்
1663-ல் கொச்சின் என்னும் இடங்களை கைப்பற்றி ஐக்கிய கம்பெனிகளை பரவலாக்கினர். இதே போன்று டேனிஸ்காரர்கள்(டென்மார்க்) 1620-ல் தரங்கம்பாடியை கைப்பற்றினர். பின்னர் இந்தியாவில் காணப்படும் பல்வேறு காலனிய போட்டிகளோடு தாக்கு பிடிக்க இயலாமல் 121ஃ2 இலட்ச ரூபாய்க்கு தங்களுடைய பகுதிகளை ஆங்கிலேயருக்கு விற்று விட்டு இடம் பெயர்ந்தனர்.     
     ஐரோப்பியார் வருகையை ஒட்டியே இந்திய நிலப்பரப்பில் பல்வேறு நவீன செயல்பாடுகள் தோன்றலாயின. அதன் ஒரு பகுதி தான் அச்சு தொழில் நுட்ப வளார்ச்சி. அச்சாக்கம் என்பது ஐரோப்பாவில் 15-ஆம் நுhற்றாண்டில் தொடங்கப்பட்டதாகும். குறிப்பாக, செர்மனியில் அச்சிடுதல் 1455-ல் தொடங்கப்பெற்றது. இது இத்தாலியில் 1465-லும் சுவிட்ஜர்லாந்தில் 1467-லும், பிரான்சில் 1470-லும், நெதார்லாந்தில் 1473-லும் ஸ்பெயினில் 1474-லும் பரவலாக்கம் பெற்றன. இதற்குப் பின்னார் ஐரோப்பாவில் உருப்பெற்ற மாற்றத்தைப் பற்றி கேம்பிரிச் ஆங்கில இலக்கிய வரலாறு பின்வருமாறு குறிக்கின்றன.
       அச்சாக்கங்கள் நிகழ்ந்த பிறகு பதினைந்தாம் நுhற்றண்டு இங்கிலாந்தில் இலக்கிய        ஆளுமைப் பெற்ற எழுத்தாளார்களுக்குப் பதிலாகப் பதிப்பாளார்கள் உருவாக்கத் தலைப்பட்டனார். இதன் பின்னார் தான் ஆக்ஸ்ஃபோhர்ட் பல்கலைக்கழகத்தில் 1478-லும் இங்கிலாந்தில், 1480-லுமாக அச்சகங்கள் உருவாயின. 
கல்லுhரிப் பதிப்புகள்
     சிதம்பரம் பண்டாரம் கல்லுhரி தமிழாசிரியர் ஆவார். யக்ஞவல்லியாpன் வீதாக்ஷரம் மீதான் விஞானேஸ்வரனின் உரையை மொழி பெயர்த்தார். தாண்டவராய முதலியார் கல்லுhரியின் மாணவராக இருந்து பின்னர் அதன் தலைமை ஆசிரியராக பதவி வகித்தவர். இவருடைய தலைமையின் கீழ் பெஸ்கியின் சதுரகராதி(1824), இலக்கண வினா விடை(1822), மராத்தி மொழிப்பெயர்ப்பான பஞ்சதந்திர கதைகள்(1826), கதாமஞ்சாp(1846), இலக்கண பஞ்சகம்(1835) ஆகிய நுhல்கள் தமிழ் மாணவர்களுக்கு என்று செய்யப்பட்டது.
     பிர்.நாணப்ப முதலியார் தஞ்சை தமிழ்வாணன் கோவை(1834), நேமிநாதம்(1836), நாலடியார்(1844), முதலியனவற்றைப் பதிப்பித்துள்ளார். இவை அனைத்தும் சென்னை கோட்டை கல்லுhரியில் இருந்து வெளிவந்தவை ஆகும். இத்தகைய நுhல்கள் தமிழ் பதிப்புகளை முன்னெடுப்பதற்கு முன்மாதிரியாக விளங்கின.      
     மேற்சுட்டிய அறிஞர்களின் பதிப்பு, சுருக்க நுhல் வரைதல் மொழி பெயார்த்தல் ஆகிய இவையாவும் கோட்டை கல்லுhரி மூடப்படும் இறுதி நாளான 21.7.1854 வரையில் நடைப் பெற்று வந்தன. இந்தியப் பதிப்பு வரலாற்றில் 1835-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு பிரித்தானியர்கள் பதிப்புரிமை சட்டத்தை வழங்கினர். இதற்குப் பின்னரே தமிழ் பதிப்புகள் முறையாக வெளிவரத் தொடங்கின. இத்தகைய நிலையில் 1835-க்கு முன்பாகவே பதிப்புகளை மேற்கொண்ட கல்வி நிறுவனமாக சென்னைக் கல்விச் சங்கமமும், சென்னைக் கோட்டை கல்லுhரியுமே அமைகின்றன. அவ்வகையில் இக்கல்லுhரி செயல்பாடுகள் முதன்மையான வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கின்றன.

இந்தியப் பதிப்புரிமைச் சட்டம்(1835)
     உலகலாவிய காலனியாதிக்கத்திற்கு எதிராக தேசிய எழுச்சிகள் மேலெழுந்தன. இதன் காணமாக இந்தியாவிற்கு 1930 முதற்கொண்டே குடியுரிமைகளை பிரித்தானியார் இந்தியர்களுக்கு வழங்க முன் வந்தனர். அவற்றைப் பின்வரும் புள்ளிகளாகத் தொகுத்தனர்.
  1831-இல் மாவட்ட செஷன் நீதிபதிகளுக்கு குற்ற விசாரணை உரிமை.
  1833-இல் இந்தியர்களுக்கு இந்திய அரசு பணி மறுக்கப்படலாகது என்ற அறிவிப்பு.
  1835-இல் பதிப்புரிமைச் சட்டம்.
     சார்லஸ் மெடகாப் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1835 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம் கொணரப்பட்டது. இச்சட்டத்தின் முழுவிவரம் 1835 ஆம் ஆண்டு வெளியான குழசவ. ளுவ. புநழசபந புயணநவந இல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.
     அச்சாக்கம் என்னும் தொழிற்நுட்பச் செயற்பாட்டில் ஐரோப்பியரே இந்தியர்களுக்கு முன்னோடிகளாக விளங்கினர். கல்கத்தா ஸ்கூல் ஆப் சொசைட்டி என்பது கேஸ்டிங் பிரபுவின் வழிகாட்டுதலின் போpல் 1817 இல் தொடங்கப் பெற்றது. சொசைட்டி பார்புலோமேட்டிங் கிறிஸ்டியம் நாலேஜ்(ளிஉம) 1726 இல் வேப்போpயில் தொடங்கப்பெற்றது. பென்சமின் ஷட்லஸ் என்பவரால் சோகனின் பிலிப் பேப்பாpக்ஸ் இதனுடைய தலைவராக அமைந்தார். மலபார் ஆங்கில அகராதி இங்கு பதிப்பிக்கப் பெற்றது. இந்தியாவில் அமைந்த சில அச்சகங்கள்

1.அலிப்போர்- மேற்குவங்கம்
2.கல்கத்தா அச்சகம் 1700-1800 வரை இங்குதான் இந்தியாவிலேயே முதலில் வெளியான பெங்கால் கெசட் என்ற இதழ் வெளியானது.
3.இந்தியா செகியு+ரிட்டி பிரஸ்- நாசிக் மகாராஷ்டிரா
4.கோவா அச்சகம்-30 ஏப்ரல்,1556இல் தொடங்கப்பெற்றது. போர்ச்ர்சுக்கீசிய அரசர் கின்சான் ஐஐஐ அவர்களின் கட்டளையின் படியாக இந்தியர்களுக்கென பள்ளிகள் தொடங்கப்பெற்றன. இந்தகப்பள்ளிகளுக்குப் பாடபுத்தகங்களை அச்சிட முதல் அச்சகம் நிறுவவப்பெற்றது. பிராப்சஸ் சேவியர் தான் இதற்கு முதற் காரணமாக அமைந்தாhர். இவர் அப்போது கோவாவின் போர்ச்சிகீசிய வைஸ்ராயாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இதனைத் தொடர்ந்து தமிழ்ச் சூழலில் பல்வேறு பதிப்புக்குழுக்கள் செயற்படத் தொடங்கின. அவற்றின் பட்டியலைப் பின்வருமாறு காணலாம்.
           சென்னைக்கல்விச் சங்கம்(1812)
           மதுரைச் தமிழ்ச்சங்கம் (1901)
           பவானந்தர் கழகம்
           கரந்தைச் தமிழ்ச்சங்கம் (1922)
           சைவசித்தாந்த  சமாஜம
           சைவசித்தாந்த நுhற்பதிப்புக் கழகம(ர்1920)
           சென்னை மயிலைச் தமிழ்ச்சங்கம் (1940)
பதிப்புகள் இந்திய நிலப்பரப்பிலும் தமிழக நிலப்பரப்பிலும் கொணர்ந்த மாற்றங்கள் மிகப்பலவாகும். அவற்றுள்  குறிப்பிடத்தக்கவைகளாக பின்வருவனவற்றைக் காட்டலாம் மொழியில் இவை நிகழ்த்திய மாற்றங்களாக
         உரை நடை உருவாக்கம்,
         நிறுத்தக் குறிகளின் பயன்பாடு,
         புதின உருவாக்கம் இது கொணர்ந்த மௌனவாசிப்பு முறைமை
பாரம்பாpய மீட்பு நடைபெற்றது. சமூகவியல் பார்வையின் படி நின்று ஆராயும் போது அச்சு என்பதை அச்சு முதலாளியம் என்றே அழைப்பர்.
   ஐரோப்பிய நாடுகளிர்ல் தேசம், தேசியம் தேசிய எழுச்சி ஆகியவற்றின்              உருவாக்கத்தில் மிகப்பெரும் பங்குவகித்தது அச்சு முதலாளியம். நாவல்கள் பத்திரிக்கைகள் என்று ஆயிரக்கணக்கில் அச்சிட்டு பரப்பியத்தில்  தேசங்கள் என்ற பெரும் சமூகம் உருவாகக் காரணமாக அமைந்தன. வட்டார வேறுபாடுகள் நீங்கிய ஒரே படித்தான மொழிகள், தேசிய மொழிகள்  உருவாவதற்கு அச்சு முதலாளியம் முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்படி இந்தியாவில் தேசிய எழுச்சிக்கு மிகமுதன்மையாக பதிப்பு விளங்கியது. அதாவது தேசியம் என்ற நவீன கருத்தியலுக்கு பதிப்பு மிகப்பெரும் காரணமாக அமைந்தது.
சிற்றிலியக்கியப் பதிப்பு
    சிற்றிலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிப்பிட்ட பொருளமைதியோடு எழுந்தனவே. சிற்றிலியக்கங்கள் அனைத்தும் சிற்றின்பப் பொருளை விளக்குவதாக அமைந்திருப்பினும் அவற்றின் சில போpன்பப் பொருளை விளக்கும் தத்துவக் குழையாகவும் அமைந்துள்ளன. மாணிக்கவாசகப் பெருமான் இயற்றிய திருக்கோவையார்கோவை இலக்கியத்துள் தத்துவ சாயல் பெற்ற நுhலாகும். இதனை காமஞ்சான்ற ஞானப் பனுவல் என்று அறிஞர் குறிப்பிடுவர். 
    தமிழின் எழிலார்ந்த ஏற்றத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய சிற்றிலியங்களுள் பள்ளு இலக்கியமும் ஒன்று. இவ்விலக்கியம் பள்ளர்களின் வாழ்வியல் முறைகளை கதைப் போக்கில் விளக்கி கூறும் ஒரு வகை இலக்கியம். பள்ளு இலக்கியத்தின் மூலம் உழவர்களின் பழக்க வழக்கங்கள், ஒழுகலாறுகள், வேளாண்மை செயல்முறைகள், பள்ளர்களிடையே வழங்கும் சமுதாய கோட்பாடுகள், மரபுகள், அவர்கள் குடும்ப அமைப்பு முதலான பல்வேறு செய்திகளைப் பற்றி அறியமுடிகின்றன. இதனை யு னசயஅயவipழநஅ னநயடiபெ றiவா வாந டகைந ழக pயடயள  என்று கூறலாம்.
இலக்கண வித்து
    பள்ளு இலக்கியங்கள் பிற்காலத்தில் எழுந்தவை. இப்பள்ளு இலக்கியங்களின் எழுச்சிக்கு இலக்கண அடிப்படையில் தொல்காப்பியத்திலேயே தோற்றுவாய் அமைந்துள்ளது. நுhல்களுக்குரிய வனப்பு எட்டு எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. அவை அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன. இவற்றுள் புலன் என்பதற்கு விளக்கம் கூறும் தொல்காப்பியர்,
          சோp மொழியாற் செவ்விதிற் கிளந்து
          தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
          புலனென மொழிப புலனுணர்ந் தோரே(தொல்.செய்.233)
என்று விளக்குவார். சோp மொழியாவது பாடி மாற்றங்கள், தொழிலாளர், எளியோர், கீழ்வகுப்பினர் முதலிய மக்கள் பயிலும் வழக்குச் சொற்களைப்  பாடி மாற்றங்கள் என்பது குறிப்பிடுகின்றது. இதற்கு, வழக்குச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமல் பொருள் விளங்குவது புலனென்னும் செய்யுளாம் என்று இளம்பு+ரணார் உரை வரைந்துள்ளார் எனினும் சோp வாழ் மக்கள் பேசும் எளிய சொல் அமைப்புடன் கூடிய இலக்கியங்கள் புலன் என்னும் இலக்கண வகையினவாகும் என்பதைத் தொல்காப்பிய நுhற்பா மூலம் தெளியலாம்.
முக்கூடற் பள்ளு பதிப்பு
     முக்கூடற் பள்ளு எனும் சிற்றிலியக்கியத்தை முதன் முதலில் அச்சில் ஏற்றி சிறப்பித்தவர் விருத்தாசலம் தியாகராச கவிராயர் ஆவார். ஆவரைத் தொடர்ந்து
 மு.அருணாசலம் அவர்கள் சிறந்த ஆராய்ச்சி உரையுடன் கூடிய முக்கூடற்பள்ளை வெளியிட்டார். ஏப்ரல் 1960-ல் வித்வான்.ந.சேதுரகுநாதன் பதிப்பித்து பாரி நிலையத்தின் மூலம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து
மறுபதிப்பாக 2004-ல் புலியு+ர்கேசிகன் உரையைக் கொண்டு சென்னை பாரி நிலையம் வெளியிட்டது. இவ் வெளியீடுகள் அனைத்தும் நுhலின் நயத்தை நாடறிய செய்ய வேண்டும் மாணவர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக வெளியிடப்பது என்று பதிப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது.
   இந்நுhல் அட்டை பகுதி நீங்கலாக 168 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நுhலின் விவரம், பதிப்புரை என்ற பகுதியில் ஒரு பக்க அளவிலே பதிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொருளடக்கத்தையும் இறுதியில் பாட்டு முதற் குறிப்பு அகரதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வகராதியின் நோக்கம் எளிதில் கண்டறிய வேண்டும் என்ற உயாpய நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

திருக்குற்றால குறவஞ்சி  
   முத்தமிழின் ஒரு கூறான நாடக இலக்கியத்திற்கு இக்காலத்தில் சான்றாக விளங்கியவை குறவஞ்சி இலக்கியம். இவ்விலக்கியம் பாட்டுடை தலைவனை அவனது உலாவின் போது கண்டு காதல் கொண்டு வேதனையால் வாடி தவிக்கும் தலைவி ஒருத்திக்கு குற குலத்தைச் சோர்ந்த வஞ்சி ஒருத்தி குறி கூறுவதாக அமைந்துள்ளது. தமிழர்களின் பழமையான இலக்கியச் செல்வமான தொல்காப்பியத்தின் மூலம் குற மகள் ஒருத்தி குறி கூறும் மரபு போற்றப்படுகின்றது. 
    பாட்டியல் இலக்கணம் கூறும் நுhல்களுள் பன்னிரு பாட்டியல், தொன்னுhல் விளக்கம் ஆகியவற்றில் குறத்தி பாட்டு கூறப்பட்டுள்ளது.
    இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும்
    திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே (பன்னிரு பாட்டு-217)
 என்றும்,
     குறத்திப் பாட்டும் அதனோ ரற்றே (பன்னிரு பாட்டு-218)
     என்றும் பன்னிரு பாட்டியல் இரு நுhற்பாக்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன.

திருக்குற்றால குறவஞ்சிப் பதிப்பு  
       திரிகூடராசப் கவிராயசப்ப கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றால குறவஞ்சி என்னும் நுhல் காலத்தால் மட்டுமட்டுமின்றி சுவையாலும் நடை நயத்தாலும் முதன்மை பெற்று விளங்குகிறது. இந்நுhலினை திருக்குற்றால நாதசுவாமிக் கோயில் முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டனர். ஆயினும் சென்னை பல்கலைக்கழகத்தார் இதனை வித்வான் தேர்வுக்கு பாடமாக அமைத்துள்ளனர். அதனால் உரையுடன் வெளியிடுதல் நலம் எனக் கருதி தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர் குழுத் தலைவர் பெருநாவலர், திரு.பு.சி.புன்னைவனநாத முதலியார் அவர்களையும், செல்லுhர் செ.ரெ.ராமசாமிப்பிள்ளை அவர்களையும் கொண்டு பொழிப்புரையும், விளக்கவுரையும் எழுதவித்து நன்முறையில் கண்கவர் தோற்றத்துடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுhற்பதிப்புக் கழகத்தார்ஆகஸ்டு 1955-ல் முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டனர். இதன் மறுபதிப்பாக ஏப்ரல் 1957-ல் வெளிவந்தன. இந்நுhல் கெட்டியான அட்டையைக் கொண்டும் அட்டைப் பகுதி நீங்கலாக 176 பக்கங்களைக் கொண்டுள்ளது. பதிப்புரை ஒரு பக்க அளவே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகமும், திருகுறும்பலாப்பதிகப் பாடல்களும் அச்சிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து திருகுற்றால தலச் சிறப்பு, நுhலாசிரியர் வரலாறாக ஜந்து பக்கத்திற்கும் கழக புலவர்களின் முன்னுரையாக 18 பக்கத்திற்கு செறிவான ஒரு முன்னுரை கொடுக்கப்பட்டுள்ளது. நுhலின் இறுதிர்யில் செய்யுளின் நுhற் குறிப்பு அகர வாpசையும், இந்நுhலாசிரியர் இயற்றிய நுhல் பாடல்களுள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளது படிப்பவாpன் மனதைக் கவரும் வண்ணமாக அமைந்துள்ளது.
நந்திக் கலம்பகம்
     கலம்பக இலக்கியத்துள் கிர்.பி.ஒன்பதாம் நுhற்றாண்டில் எழுந்த நந்திக் கலம்பகமே காலத்தால் முந்திய கலம்பக இலக்கியம.ர் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் கி.பி. (825-850) மீது இயற்றப் பெற்றது இந்நுhல். இம் மன்னன் கி.பி.832-ல் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னனையும், அவனுக்குத் துணையாக வந்த சேர,சோழரையம் தௌர்ளாற்றில் வென்று தௌர்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவன். நந்திவர்மன் தன்மீது இயற்றப்பெற்ற நந்திக் கலம்பகத்தாலேயே உயிர் நீத்தான் என்பது வரலாறு. நந்திவர்மனைக் கொன்றுறொழிக்க முற்பட்ட அவனது மாற்றாந் தாயின் மகன் ஒருவன் புலமை மிக்கவன். அவன் நந்தியைத் தலைவனாக வைத்து அவனுக்குத் தீது உண்டாக்கும் நிலையில் அவன் மீது அறம் வைத்து இக் கலம்பகத்தை இயற்றினான் என்றும் அந்நுhலின் பாடலொன்றை நகர்ச் சோதனையின் போது கேட்டு மகிழ்ந்த நந்தி மன்னன் அப்பாடல்கள் தன்னுயிரை அழிக்க எழுந்தவை என்பதை அறிந்தும், நுhல் வழங்கும் தமிழ் இன்பத்தை நுகர்வதையே தன் உயிரினும் மேலாக எண்ணினான் என்றும், நந்திக் கலம்பகத்தின் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்து, பாடலின் சுவையை உண்டு மகிழ்ந்த நந்தி மன்னன் இறுதிப் பாடலை ஈமச் சிதையின் மேலிருந்து கேட்ட வண்ணம் உயிர் துறந்தான் என்றும் இவ்வரலாறு கூறப்படுகிறது.
இலக்கண வித்து
    கலம்பகத்தில் பயின்று வரும் உறுப்புக்கள் பல. புயம், வகுப்பு, தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி,  மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், துhது, குறம், பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், கீரையார், யோகினியார், திருவடி வகுப்பு முதலிய பல்வேறு உறுப்புக்களும் கலம்பக இலக்கியங்களல் பயின்று வருகின்றன. இவற்றுள் புயவகுப்பு, திருவடிவகுப்பு, வண்டு, அம்மானை, பாண், கைக்கிளை, ஊசல், ஊர், மறம், காலம், தழை, இரங்கல், களி, கார், துhது, குறம் முதலான பல உறுப்புக்களுக்குரிய இலக்கண வித்துக்களைத் தொல்காப்பியத்தில் காணலாம்.
உறுப்புக்களின் இலக்கணம்
    இனி இவ்வுறுப்புக்களுக்குரிய இலக்கணத்தைச் சுருக்கமாகக் காண்போம்.
    புயம்:- பாட்டுடையத் தலைவனுடைய தோளின் வனப்பையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடுவது புயம்.
    அம்மானை:- அம்மானை என்பது மூன்று பெண்கள் பாடிக்கொண்டே காய்களை வைத்து ஆடும் ஒருவகை ஆட்டம். இந்த ஆட்டத்தின் பெயரால் பெயார் பெற்றுள்ளது இவ்வுறுப்பு. ஒருத்தி தலைவனைப் புகழ, மூன்றாமவள் இருவரும் ஏற்புடைய விடையைக் கூறுவதாகப் பாடுவது அம்மானை.
    ஊசல்:- பெண்கள் ஊஞ்சல் ஆடிக் கொண்டே பாடுவதாக அமைந்த உறுப்பு ஊசல்.
    மடக்கு:- நுhலின் இடையிடையே சொல், சீர் ஆகியன மீண்டும் பொருள் வேறுபாட்டுடன் அமையுமாறு பாடுவது மடக்கு என்னும் உறுப்பாகும்.
    களி:- கட்குடியர் கள்ளைச் சிறப்பித்துப் பாடுவதாக அமைவதற்குக் களி என்னும் பெயர் உரியது.
    மறம்:- ஓர் அரசன் மறவர் மகளைத் தனக்கு மணம் பேசுமாறு ஒரு துhதனை அனுப்ப, அத்துhதனிடம் மணவினை மறுத்தும் அரசனை இகழ்ந்தும் பேசுவதாகப் பாடுவது மறம் என்னும் உறுப்பு.
     சித்து:- ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாக்கும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் தங்கள் ஆற்றலைப் புகழ்ந்து ஒரு தலைவனிடம் பாடுவதாக வருவது சித்து.
    காலம்:- பொருள் வயிற் பிரிந்த தலைவனை எண்ணி வாடும் தலைவி, கார் காலத்தால் தனக்குண்டாகும் துன்பங்களைப் பாடுவதாக அமைவது காலம் என்பது.
     மதங்கி:- இசைக்கும் கூத்துக்கும் உரிய ஒருவகைச் சாதியார் மதங்கர் எனப்படுவர். இச்சாதிர்க்குரிய பெண் பாலொருத்தி இருகைகளிலும் வாளேந்திச் சுழற்றி ஆட, அம்மங்கையின் எழில் கண்டு ஒருவன் பாராட்டிப் பாடுவதாக  வருவது மதங்கியார் என்னும் உறுப்பு.
     கைக்கிளை:- ஒருதகைர் காமம் தோன்ற, காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என நான்கு வகையும் அமையப் பாடுவது கைக்கிளையாகும்.
     சம்பிரதம்:- சாலவித்தை வல்லார் தம் ஆற்றலைக் கூறுவதாக அமைவது சம்பிரதம்.
     பாண்:- ஊடல் கொண்ட தலைவியிடம் சேர என்னும் தலைமகள் தலைவியின் கோபத்தைத் தணிக்கப் பாணனைத் துhது அனுப்புவதாகப் பாடுவது பாண் என்னும் உறுப்பு.
     தழை:- தலைமகள் அணிதற்குத் தலைவன் தழையுடை ஏந்தி வந்து, தோழியிடம் குறையிரந்து கொடுத்து, அதனைத் தலைவி ஏற்றுக் கொள்ளும்படிச் செய்யுமாறு வேண்ட, தோழியும் அதனைத் தலைவியிடம் தந்து தலைவியின் விருப்பத்தைத் தலைவனுக்குக் கூறுவதாக அமைவது தழை என்னும் உறுப்பாகும்.
     இரங்கல்:- தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவாற்றாது கடல், கழி, கானல் முதலியவற்றை நோக்கி இரங்கிப் பாடுவதாக வருவது இரங்கல் என்னும் உறுப்பு.
    ஊர்:- பாட்டுடைத் தலைவன் வாழும் ஊரின் பெருமை தோன்றப் பாடுவது ஊர்.
    குறம்:- தலைவி விரும்பிய  தலைவனுடன் சேரும் வாய்ப்பினைக் குறமகள் ஒருத்தி. குறிபார்த்து உரைப்பதாக வருவது குறம்.
    துhது:- தலைவனைப் பிரிந்த தலைவி தலைவனிடம் தன் காதற் கருத்தை உரைக்குமாறு அஃறிணைப் பொருள், பாங்கி முதலியோரைத் துhது விடுப்பதாக வருவது துhது.
     இவற்றுள் அம்மானை, ஊசல் என்பன மகளிர் ஆடல்ககளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த உறுப்புகள்.
     
     காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், துhது, வெறிவிலகல் ஆகிய உறுப்புக்கள் அகப்பொருள் துறைகளை கொண்டு அமைந்தவை.
    
      புயம், பாதவகுப்பு என்பன பாட்டுடைத் தலைவனின் அங்கச் சிறப்புக்களைப் போற்றும் வகையில் எழுந்த உறுப்புகள்.
      களி, மறம், ஆற்றுப்படை, பள்ளு என்பன புறத்துறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த உறுப்புகள்.
    நந்திக் கல்பகத்தின் ஆசிரியர் யார் என்றுத் தொpயவில்லை. இந்நுhலினை சோ. அருணாச்சலதேசிகர் அவர்களின் அரிய உரையமைப்பைக் கொண்டு சென்னை பாரி நிலையம் 1955-ஆம் ஆண்டு வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்தனர். இதற்கு முன்பே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் 1927-ஆம் ஆண்டு இந்நுhலை அச்சிட்டு வெளியிட்டனர். ஆனால் சில பாடல்களுக்கு சாpயான பாடபோதம் இல்லை என்று உரையாசிரியர் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். பதிப்புரை ஒரு பக்க அளவே கொடுக்கப்பட்டுள்ளது வியப்பே. அதனை அடுத்து பொருளடக்கம் என்ற பகுதியும், உரையாசிரியர் முன்னுரை ஐந்து பக்க அளவிற்கும், இந்நுhல் உரை செய்வதற்கு எடுத்தாளப்பட்ட நுhல்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சில குறிப்புகள் என்ற தலைப்பில் 16 பக்க அளவில் நுhலின் சிறப்பும், பாட்டுடைத் தலைவன் வரலாறும் போன்ற தலைப்புகளில் படிப்பவாpன் எண்ணத்தைக் கவரும் வண்ணம் செய்திருப்பது போற்றுதற்குரியது.
     இச்செய்திகளைத் தொடார்ந்து பல்லவ அரசப் பரம்பரையின் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கலம்பகம் அட்டைப் பகுதி நீங்கலாக அதிகமாகக் காணப்படும் செய்யுள்கள் என்ற தலைப்பில் 22 பாடல்களும், சில பிரதிகளில் அதிகமாகக் காணப்பட்ட செய்யுட்கள் என்ற தலைப்பில் 3 பாடல்களும் கொடக்கப்பட்டுள்ளன. நுhலின் இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பவர் எளிமையாகப் பாடல்களை படிப்பதற்கு துணைசெய்கின்றன.   
பதிப்பும் குறிப்பும் 
     நுhல்களைப் பதிப்பிக்கும் போது தாம் எடுத்துக்கொண்ட முயற்சி, அப்போது ஏற்பட்ட இடையு+று, உதவி செய்தோர், பதிப்பிக்கக் கிடைத்த முயற்சியின் விவரம் ஆகியவற்றைப் பதிப்புரையில் குறிப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். முக்கூடற்பள்ளு, திருக்குற்றாலக் குறவஞ்சி, நந்திக்கலம்பகம் ஆகிய பதிப்புகளில் இத்தகைய பதிப்புக் குறிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமே. ஒரு நுhல் இரண்டாவது முறையாக மறுபதிப்பு செய்யும் பொழுது அந்தப் பதிப்பில் மாற்றங்கள், மூல திருத்தம், புதிய பாடல்கள் அல்லது மறுபதிப்பிற்கான அவசியம் என்ன என்பனவற்றையாவது குறிப்பிட வேண்டும். இக்குறிப்புரைகள் பொரும்பாலான சிற்றிலக்கியப் பதிப்புகளில் இடம்பெறவே இல்லை என்பது எண்ணத்தக்க ஒன்றாகும்.
     பதிப்புரை என்ற பகுதியில் இந்த நுhல் எதற்காகப் பதிபிக்கப்படுகிறது என்றும் இதற்குமுன்  எத்தனை பதிப்புகளை இந்நுhல் பெற்றுள்ளது என்றும் அவற்றை யார்யார் எந்தெந்தக் காலக்கட்டங்களில் பதிப்பித்து வெளியிட்டனர் என்ற குறிப்புகள் இடம்பெற வேண்டும். மாறாக இப்பதிப்புப் பகுதியில் அந்நுhல்  வெளிவருவதற்கு அல்லது பதிப்பிப்பதற்குப் பெரும் தொகை கொடுத்த கொடையாளாpன் புகழ் மட்டுமே பேசப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் இந்நுhலைப் படிப்பவர்க்கும், பதிப்பிக்க முன் வருபவருக்கும் இந்நுhலின் பதிப்பு வரலாறு தொpயாது. முதல் பதிப்பை மூன்றாம் நான்காம் பதிப்பாகப் பிறழ எண்ணத்தோன்றும், ஆகவே அவற்றிற்கு இடம் கொடுக்கக் கூடாது கூடுமானவரை பதிப்புரையில் பதிப்புக் குறிப்புகளைப் பதிவு செய்தால் பதிப்பின் பயன்மேலும் சிறப்படைந்து எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமையும்.

No comments:

Post a Comment