Pages

Sunday, 1 November 2015

திணைமாலை நூற்றைம்பதும் சிற்றிலக்கிய மாலை இலக்கியங்களும்



திணைமாலை நூற்றைம்பதும் சிற்றிலக்கிய மாலை இலக்கியங்களும்
[.கதிரவன், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா 678104]

ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பாடுதல் மாலை எனப்படும்.
மாலை என்னும் சொல் மாலா என்னும் வடசொல்லிலிருந்து தோன்றியது என்பர். இஃது தவறு. மாலுதல் என்னும் வினைக்கு மயங்குதல் என்று பொருள். பகலும் இரவும் மயங்கும் பொழுது மாலை எனப்படுவதும் பலவாகிய பூக்கள் ஒன்றாக மயங்குமாறு இறுக்கிக் கட்டப்படுவது மாலை எனப்படுவதும் மாலை தமிழ்ச்சொல்லே எனக்காட்டும்.

96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28   உள.
அவை அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன.
எண்மாலை, ஏகமணிமாலை, ஏகதசமாலை, ஐம்மணிமாலை என வேறு சில மாலைகளும் சுட்டப்படும்.
Rounded Rectangle: நாம மாலை
 புகழ்ச்சி மாலை
 பெருமகிழ்ச்சி மாலை
 தாரகை மாலை
 அங்க மாலை
 கேசாதிபாதமாலை
பாதாதிகேசமாலை
 அனுராக மாலை
 வருக்க மாலை
 மெய்க்கீர்த்தி மாலை



இந்த மாலைகளை நால்வகையாகப் பகுத்து நோக்கலாம்.








 




Ø   




Ø  இரட்டைமணிமாலை வெண்பா, கலித்துறை என மாறிமாறி தலா 10 பாடல்கள்
பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருபான்
மற்றை யிரட்டைமணி மாலையாம் (வெண்பாப்பாட்டியல்)

வெண்பா விருத்தம் வியப்புற விருபஃ
தெண்பட வுரைப்பது மிரட்டை மணிமாலை

இருபது வெண்பாக் கலித்துறை இயையின்
வருவது இரட்டை மணிமாலை யாகும் (இலக்கணவிளக்கப்பாட்டியல்)
Ø  இணைமணிமாலை இரண்டு வெண்பா, இரண்டு கலித்துறை என மாறிமாறி 100 பாடல்கள் /
வெண்பா, கலித்துறை என மாறிமாறி 100 பாடல்கள்


ஏய்ந்த விருபா விருபதுவெண் பாவகவல்
ஆய்ந்த விரட்டை மணியிருபான்ஏய்ந்தசீர்
வெண்பா கலித்துறையா மேவிய நான்கானூ
றொண்பா விணைமணியா மோர் (வெண்பாப்பாட்டியல்)

Ø  மும்மணிமாலை   வெண்பா, கலித்துறை, அகவல் விருத்தம் என மாறிமாறி தலா 10 பாடல்கள்

Ø  நான்மணிமாலை   வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என மாறிமாறி தலா 10 பாடல்கள்

மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா
முன்னியமுப் பான்மும் மணிமாலை மன்விருத்தம்
நாட்டிய நாற்பது நான்மணிமாலையாம்
ஈட்டியவந் தாதியோ யேய்ந்து
      (வெண்பாப்பாட்டியல்)

வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என மாறிமாறி தலா 10 பாடல்கள்
வெண்பாக் கலித்துறை விருத்த மகவல்
பின்பேசு மந்தா தியினாற் பதுபெறின்
நான்மணி மாலை யாமென நவில்வர்
(இலக்கண விளக்கப்பாட்டியல்)

Ø     கலம்பக மாலை  கலம்பகத்துக்குரிய உறுப்புகளுள் ஒருபோகு, அம்மானை ஆகிய உறுப்புகள் நீக்கி வெண்பாவை முதலாகக் கொண்டு பாடுவது
Ø                  பன்மணிமாலை  கலம்பகத்துக்குரிய உறுப்புகளுள் ஒருபோகு, அம்மானை, ஊசல் ஆகிய உறுப்புகள் நீக்கி வெண்பாவை முதலாகக் கொண்டு பாடுவது

கூர்ந்தொருபோகு
ஊச லொழித்தாற் கலம்பகப்பா வொண்மாலை
பேசிய பன்மணியாம் பின்பு (வெண்பாப்பாட்டியல்)

அவற்றுள்
ஒருபோ கம்மானை யூச லின்றி
வருவது பன்மணி மாலை யாகும் (இலக்கண விளக்கப் பாட்டியல்)

Ø  நவமணிமாலை வெண்பா முதலாக ஒன்பது வகைப்பாக்களில் தேவர்களுக்குக் காப்புப் பாடுவது
வெண்பா முதலா வேறோ ரொன்பது
நண்பாக் கூறல் நவமணி மாலை (இலக்கண விளக்கப் பாட்டியல்)

Ø  நாம மாலை      அகவலடியும் கலியடியும் கலந்த வஞ்சிப்பாவால் ஆடவனைப் புகழ்ந்து பாடுவது  .
Ø  புகழ்ச்சி மாலை  அகவலடியும் கலியடியும் கலந்த வஞ்சிப்பாவால் பெண்டிரைப் புகழ்ந்து பாடுவது
Ø  தாரகை மாலை   வகுப்பு என்னும் யாப்புவகையால் 9 பாக்களால் தூசிப்படையைப் புகழ்ந்து பாடுவது
Ø  தாரகை மாலை   வகுப்பென்னும் யாப்புவகையால் 9 பாக்களால் கற்புடை மங்கையரைப் புகழ்ந்து பாடுவது
ஓதுசந்தத் தாலுரைத்தல் ஒண்தா ரகைமாலை
கோதிலாக் கற்பிற் குலமகளைநீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை.
                                                            

Ø  பெருமகி்ழ்ச்சிமாலை    கற்புடைய பெண்களின் பெருமையைப் பாடுவது
Ø  வருக்கமாலை    உயிர் எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் எழுத்துக்கு எட்டகவல்கள் பாடுவது.
மன்னகவ லெட்டாய் வருக்கவெழுத் தான்வருமேல்
முன்வருக்க மாலை மொழி

Ø  தானைமாலை    ஆசிரியப் பாவால் தானையைப் புகழ்ந்துரைப்பது
Ø  வஞ்சிமாலை     படைமேலெடுத்துச் சேறலைப் பாடின் வஞ்சிமாலை
Ø  வாகைமாலை    வெற்றியைப் பாடின் வாகைமாலை


படைத்திறஞ் சொல்லின் பகர்தானை வஞ்சி
எடுத்துமேற் சேறல் இயம்பின்அடுத்தமைந்த
வெற்றியுரை வாகையாம் வேந்தன்பா வொன்றினால்
உற்றுரைத்து மாலைப்பே ரோது (வெண்பாப்பாட்டியல்)
Ø  நொச்சிமாலை
Ø  காஞ்சிமாலை
Ø  உழிஞைமாலை
Ø  தும்பைமாலை
Ø  அங்கமாலை     ஆண்பெண் உறுப்புக்களை வெண்பாவாலும் வெளிவிருத்தத்தாலும் புகழ்ந்துபாடுவது
நிறுத்த வெளிவிருத்த நீடுறுப்பில் வந்தால்
குறித்தங்க மாலையாக் கொள்க (வெண்பாப் பாட்டியல்)
அங்கமாலைதேவர்களை எனில்  அடிமுடியாய் கால் முதல் தலை வரையும் மனிதர்களை எனில் முடியடியாய்த்  தலை முதல் கால் வரையும் வர்ணித்துப் பாடுவது அங்கமாலை. வெளிவிருத்தம். மாறாக திருநாவுக்கரசர் தன் திருவங்கமாலையில் முடியடியாய் தலைமுதல் கால் வரை மனித உறுப்புகள் எவ்வாறு இறைவனை வழிபடவேண்டும் எனப் பாடியிருக்கிறார்.
Ø  பாதாதிகேசமாலை கலிவெண்பாவால் பாதம் முதல் கேசம்வரை வர்ணித்துப் பாடுவது
Ø  கேசாதிபாதமாலை கலிவெண்பாவால் கேசம் முதல் பாதம்வரை வர்ணித்துப் பாடுவது
Ø  பல்சந்த மாலை  பல்வேறு சந்தங்களில் நூறு பாடல்கள் பாடுவது பல்சந்தமாலை
பத்தாதி நூறந்தம் பல்சந்தமாலையாம்

வெண்பாவை முதலாகக் கொண்டமைவது மாலையின் முதன்மைப் பண்பாகக் கொள்ளப்படுகிறது.

ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்

ஆனால் ஒருபோகு, அம்மானை உறுப்புகள் நீங்க வெண்பாவை முதலாவதாகக் கொண்டு பதினாறு உறுப்புகள் அமைய அந்தாதித்தொடையில் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பக மாலை எனப்படுகிறது

இன்னும் பன்மணிமாலை ஓர் சிற்றிலக்கியமும் கலம்பகத்தோடு தொடர்புடையது. கலம்பகத்தின் 18 உறுப்புகளுள் அம்மானை, ஊசல், ஒருபோகு ஆகியன தவிர்த்து எஞ்சிய 15 உறுப்புகளைக் கொண்டமைவது பன்மணிமாலை எனப்படும். மேலும் வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக் கடைமுடிவிலே வெள்ளை விருத்தம் ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம் என இப்படி நூறு பாடல்கள் பாடப்படுவது பன்மணிமாலையென்று வழங்கப்படும்.
வெண்பா, கலித்துறை, ஆசிரியவிருத்தம் என வெண்பாவை முன்வைக்கும் முறைவைப்பில் தலா 10 பாடலகள் பாடப்பட்டால் மும்மணிமாலை எனவும் ஆசிரியவிருத்தம், வெண்பா, கலித்துறை என வெண்பாவை இரண்டாமிடம் தள்ளும் முறைவைப்பில் தலா 10 பாடல்கள் பாடப்பட்டால் மும்மணிக்கோவை எனவும் அழைக்கப்பெறுதலை ஒப்புநோக்குக.

மேலும் எட்டு பாடல்களைக் கொண்ட தொகுப்பு அட்டமங்கலம் எனவும் பத்து பாடல்களைக் கொண்ட தொகு ப்பு தசப்பிராற்துவம் எனவும் பெயர்பெறும்நிலையில் ஒன்பது பாடல்களைக் கொண்ட தொகுப்பு நவமணிமாலை எனப்பெயர்பெறக்காரணம் முன்னவை இரண்டும் ஆசிரிய விருத்தத்தால் அமைவதும் பின்னது வெண்பாவால் அமைவதும் கொண்டேயாம்.

வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரியவிருத்தம் வகுப்பு என்னும் ஐந்தும் முறையே மாறிமாறிவர நூறுபாடல்கள் பாடுவது அலங்காரபஞ்சகம் என்றழைக்கப்படுகிறது. ஐவகைப்பாவும் தலா பத்துப்பத்து பாடப்பட்டிருந்தால் இவ்வகைமை ஐமணிமாலை எனப்பெயர்பெற்றிருக்கும் எனத்தோன்றுகிறது.
ஒருபாஒருபஃதும் இருபா இருபஃதும் மாலைவகையினவாகவே கொள்ளப்பெறவேண்டும். ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாவகையில் அந்தாதித்தொடையில் பத்துபாடல்கள் பாடுவது ஒருபா ஒருபஃது எனப்பெயர்பெறுகிறது. வெண்பா, ஆசிரியப்பா மாறிமாறி அமைய பப்பத்து பாடல்கள் அந்தாதித்தொடையில் அமைத்துப் பாடுவது இருபா இருபஃது எனப்படுகிறது.

வெண்பா அந்தணப்பா எனவும் ஆசிரியப்பா அரசர்ப்பா எனவும் கலிப்பா வணிகர்ப்பா எனவும் வஞ்சிப்பா சூத்திர ர்பா எனவும் பாட்டியல் நூல்கள் வருணப்பாகுபாடு செய்கின்றன. இவ்வருணப்பாகுபாட்டின் நீட்சியே அந்தாதித்தொடையில் அமைந்த இலக்கியங்களை மாலை எனவும் கோவை எனவும் பிரித்துக்கொள்ளச் செய்கின்றன எனலாம்.

புறப்பொருள் வெண்பாக்களில் பேசும் இலக்கணநூலும் புறப்பொருள் வெண்பா மாலை எனப்பெயர்பெற்றிருத்தலையும் வெண்பாக்களாலேயே பாட்டியல் பேசும் வெண்பாப்பாட்டியல் வச்சணந்தி மாலை எனப் பெயர்பெற்றிருத்தலையும் காண்க.

பிற்காலத்து மாலை இலக்கியங்கள் பல கட்டளைக்கலித்துறையில் மட்டும் பாடப்பட்டமை வெண்பா புலவர்க்குப் புலி என்பதாலோ என எண்ணத்தோன்றுகிறது.

மாலை வகைமை இலக்கியங்களை ஒருங்கிணைத்து நோக்க
·         மாலை இலக்கியங்கள் புறம் சார்ந்தவை.
என்னும் கருதுகோளைப் பெறமுடியும். மாலை இலக்கியவகைமையின் அமைப்பினைப் பெற்று அகம் பேசுவன கோவை வகைமையன எனப் பிரித்தறிய முடியும்.
மாலை என்னும் இலக்கியவகைமை அந்தாதித்தொடையில் அமையும். முதல் பாடலின் இறுதி எழுத்தோ அசையோ சொல்லோ அடியோ அடுத்த பாடலின் முதல் எழுத்தாகவோ அசையாகவோ சொல்லாகவோ அடியாகவோ அமையப் பாடுவது அந்தாதி எனப்படும். மாலை இலக்கிய வகைமையில் இறுதிப்பாடல், முதற்பாடலுடன் மண்டலிக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும் என்று விளக்கமளிக்கப்படுகிறது.
ஆயின் மாலை இலக்கியங்கள் பலவும் அந்தாதிதொடையில் அமைந்திருக்கவில்லை என்பதைப் பார்க்கமுடிகிறது.
அங்கமாலை, பாதாதிகேசமாலை, கேசாதிபாதமாலை, வருக்கமாலை ஆகிய வகைமைகளும் திருவள்ளுவமாலை, திணைமாலைநூற்றைம்பது போன்ற நூல்களும் அந்தாதித்தொடை பெற்றிருக்கவில்லை.
மாலைநூல்களில் முதல்நூல் எது?
திருமூலரின் திருமந்திர மாலையும், காரைக்கால் அம்மையாரின் இரட்டை மணி மாலையும், அப்பரின் அங்க மாலையும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையும், பலரும் சேர்ந்து இயற்றிய திருவள்ளுவ மாலையும் எனப் பல மாலைகள் காலத்தால் மூத்தவை.” என்கிறார் நாஞ்சில்நாடன்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தலையாயதாய் அமையும் திருக்குறளுக்கு இயற்றப்பட்டுள்ள திருவள்ளுவமாலை திருக்குறளின் அரங்கேற்றத்தன்றே எழுதப்பட்டது என்பது உண்மையெனக் கொண்டால் அதுவே முதல் மாலையாக அமையும்

திருவள்ளுவமாலையில் அசரீரி முதல் அவ்வை வரை பாடியதாய் 55 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிவபெருமானான இறையனாரே தமிழ்ச்சங்கத் தலைவராய் இருந்தவர் எனினும் அசரீரி பாடலும் நாமகள் பாடலும் அவர் பாடலுக்கு முன்னமைக்கப்பட்டுள்ளமையும் பலகாலத்து சங்கத்தில் வாழ்ந்திருந்த புலவர்கள் பல்லோர் ஒரு காலத்து இருந்து பாடிய தாய்க் கூறப்படுகின்றமையும் திருவள்ளுவமாலை இயற்றப்பட்ட காலத்தை ஐயுறச் செய்யும்.  இந்நூல் சங்கப் புலவர்கள் பெயரால் பிற்காலத்து ஒருவராலோ பலராலோ எழுதிச் சேர்க்கப்பட்ட நூல் என்று தமிழாய்வாளர் பலரும் கருதுகின்றனர். அதுவே பொருத்தமுடைத்து எனலாம். எனில் திருவள்ளுவமாலை முதல் மாலையாயிருக்க வாய்ப்பில்லை.

பதினெண் கீழ்க்கணக்கில் அமைந்திருக்கும் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை முதல் மாலை இலக்கியம் எனக்கொள்ளலாமா?

இந்நூல் ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் 'திணைமாலை' என்றும், 150 பாடல்களைக் கொண்டமைவதால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந் நூல்பெயர் பெற்றுள்ளது. அந்தாதித்தொடையில் அமையவில்லை. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம், என்னும் வரிசையில் திணைக்கு 30 பாடல்களைக் கொண்டமைந்ததாய் இந்நூல் தொடக்கத்தில் இருந்திருக்கவேண்டும். ஆனால் பாலை, மருதம் ஆகிய திணைகள் தவிர எஞ்சிய மூன்றும் 31 பாடல்களைக் கொண்டிருக்கின்றன. ஆக 153 பாடல்கள் உள. நூல்பெயர் நோக்கும்போது மூன்று பாடல்கள் மிகை என சாமிசிதம்பரனார் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் 3892 பாடல்களே உடைய திவ்யப் பிரபந்தத்தை நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என அருகமை ஆயிரத்தோடு கணிதவகையில் முழுமையாக்கிக் கொண்டு குறிப்பிடுவது போல 153 பாடல்கள் என்பதை அருகமை பத்தோடு முழுமையாக்கிக்கொண்டு 150 என குறிப்பிட்டிருக்கலாம் எனவும் கொள்ளலாம்.

ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. நூற்றைம்பது என்னும் எண்வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறை. அங்ஙனமாகவும், குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. இதனால், இந் நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மிகுதியான மூன்று பாடல்களுக்கும் பழைய உரை உள்ளது. எனவே, உரைகாரர் காலத்திற்கு முன்பே இப் பாடல்கள் நூலகத்து உள்ளமை தெளிவு. ஏனைய திணைமொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது என்னும் நூல்கள் எல்லாம் குறித்தபாடல் அளவுக்கு விஞ்சாமல் அமைவுற்றிருக்க, இந் நூலில் மட்டும் மூன்று பாடல்கள் மிகுதியாகக் காணப்பெறுதல் ஐயுறத் தக்கது ஒன்றே.

பெயரில் மாலை எனக்கொண்டிருப்பினும் இது மாலை வகைமை இலக்கியமல்ல. திணைமாலை நூற்றைம்பது ஒரு கோவை வகைமையைச் சார்ந்த நூலாகும் எனக்கொள்ளலாம்

இலக்கண நூல்கள் கூறும் அகப்பொருள் செய்திகளுக்கு எடுத்துகாட்டுக்களாக இலக்கியம் படைக்கும் முயற்சியில் புலவர்கள் ஈடுபட்டதன் விளைவே கோவை இலக்கியம் எனலாம். சான்றுகளாகப் பாண்டிக்கோவை, தஞ்சை வாணன் கோவை என்ற நூல்களைக் கூறலாம். பாண்டிக்கோவை என்ற நூல் இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது. தஞ்சை வாணன் கோவை என்ற நூல் நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது. அதைப்போல திணைமாலை நூற்றைம்பது என்னும் இந்நூல் தொல்காப்பிய அகத்திணையியலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக அமைந்தது எனலாம்.
முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை ஈடிலா இன்தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து
என அமையும் திணைமாலை நூற்றைம்பது நூலின் சிறப்புப்பாயிரம் இதனை அரண்செய்யும். இப்பாடலுக்கு பொருளுரைப்போர் காமத்தை வெறுத்தவர்கள் விரும்பும்படியாக கணிமேதாவியார் திணைமாலை நூற்றைம்பது செய்தார் எனப் பொருளுரைக்கின்றனர். களவியற் கொள்கையைப் புரிந்துகொள்ளமுடியாது வெறுத்தோரும் தம் வெறுப்பினை விட்டொழிக்குமாறு இனிய தமிழில் இணையான சான்றுச்செய்யுட்களை தேர்ந்து முடித்துத்தந்தார் கணிமேதாவியார் என்று பொருள் கொள்ளுதலே சாலச்சிறந்தது.
திருஅங்கமாலை
திருநாவுக்கரசர்

11
திருவிரட்டைமணிமாலை
காரைக்காலம்மையார்
கட்டளைக்கலித்துறை, வெண்பா
20
சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை
கபிலதேவநாயனார்
வெண்பா, கட்டளைக்கலித்துறை
37
மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை
கபிலதேவநாயனார்
வெண்பா, கட்டளைக்கலித்துறை
20




திருமாலை
தொண்டரடிப்பொடியாழ்வார்


சகலகலாவல்லிமாலை
குமரகுருபரர்


திருவாரூர் நான்மணிமாலை
குமரகுருபரர்


மதுராபுரி அம்பிகா மாலை
குலசேகரபாண்டியன்


திருக்குற்றாலமாலை
திரிகூடராசப்பக்கவிராயர்


நால்வர்நான்மணிமாலை
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்


திருவரங்கத்துமாலை
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
கட்டளைக்கலித்துறை
111
மகரநெடுங்குழைக்காதர்பாமாலை
நாராயண தீட்சதர்
கட்டளைக்கலித்துறை
103
பழநி இரட்டைமணிமாலை
பெயர் தெரியாது
வெண்பா, கட்டளைக்கலித்துறை

கயற்கண்ணிமாலை
உவேசா
கட்டளைக்கலித்துறை
காப்பு + 100
அங்கயற்கண்ணிமாலை
உவேசா
தரவுகொச்சகக் கலிப்பா
58
களக்காட்டு சத்தியவாசகர் இரட்டைமணிமாலை
பெயர் தெரியாது
வெண்பா, கட்டளைக்கலித்துறை
காப்பு + 20
திருக்காளத்தி இட்டகாமிய மாலை
பெயர் தெரியாது
நேரிசை வெண்பா + கட்டளைக்கலித்துறை
காப்பு+46 (கிடைத்தன)
வடிவுடை மாணிக்கமாலை
வள்ளலார்



No comments:

Post a Comment