Pages

Sunday, 1 November 2015

குழவி மருங்கினும் கிழவதாகும்,வைணவச் சிற்றிலக்கியங்கள்



குழவி மருங்கினும் கிளவதாகும் - .பிள்ளைத்தமிழ்


பேரா. ந. சேஷாத்திரி, த.து.தலைவர்
அ.ஆ.க.க. நந்தனம்
வழி பிள்ளைத்தமிழ்""
பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியாழ்வார், பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து தன்னை யசோதையாக மாற்றி ஆண்பிள்ளைக்குரிய 10 பருவங்களை உள்ளடக்கி பனுவல் செய்கிறார்.
செங்கீரை, சப்பாணி, தாலாட்டு, அம்புலி, சிறுதேர் உருட்டல், காப்பு, நீராட்டம் என்று பல்லகை பருவச் செயல்பாட்டில் பனுவலை விரித்துக் காட்டுகிறார். இவர்தம் மகளாகிய ஆண்டாளோ, கூடிடுகூடல, சிற்றில்வந்து சிதையலே, ஏர்தழுவல், பிருந்தாவனத்து நிலை, குடமாடிக் கூத்தம் என்று விவரித்துக் கண்ணனின் அனுபவத்தைப் பெறுகிறார். இறைவனை முன்னிட்டு வந்த பிள்ளைத்தமிழ் பிற்காலத்தில் இறையடியாளர்களை முன்னிட்டு தோன்றலாயிற்று. அதனடிப்படையில் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இராமனுஞ்சர் பிள்ளைத்தமிழ், வடக்கு திருவீதிப் பிள்ளைத்தமிழ், திருவாய்மொழி பிள்ளைத் தமிழ் தேசிகர். பிள்ளைத்தமிழ் என்று பல்வேறு இலக்கிய வடிவங்கள் வைணவ அடியாளர்களால் படைக்கப்பட்டுள்ளது.
திருப்பள்ளியெழுச்சி

இறைவனைத் துயில் எழுப்பி நம் மனத்துறை இறைவனைக் காண்பதற்காகச் சரியை, கிரியை, ஞானம் யோகம் என்ற நான்கு நிலைப்பாட்டில் உணர்ந்து உணர்த்தி உள்வாங்கிக் கொள்கிற பொருளை இலக்கிய வடிவமாகத் தருவது திருப்பள்ளியெழுச்சியாகும்.
நம்மாழ்வார் மனத்தை நோக்கி ஆணையிட்டு இறைவனைக் காணச் செய்கிறார். மனம் விழிப்புக் கொண்டதால்தான் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கட்டுக்குள் வரும் என்பதால் நம்மாழ்வார்,
""உயர்வர உயர்நலம் உடையவன் எவன்அவன்
மயர்வரு மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வரு அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர்அரு சுடரடி தொழுது எழுதி மனனே""
என்று குறிப்பிட்டுக் காட்டுவதில் மன எழுச்சியும் மனவிழிப்பும் ஆன்மாவைத் தெளிவாக்கி உணர வைக்கும். எனவேதான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அரங்கனைத் துயில் எழுப்ப திருப்பள்ளியெழுச்சி என்கிற பாசுரம் இசைக்கிறார்.
""கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தன்
கரைஇருள் அகன்றது காலையும் பொழுதாய்
மதுவருந்தி ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிர் தீட்டமும் பிடியொடு முகசும்
அதிர்தளில் அலைகடல் போன்றுள்ளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே""
இதில் வைணவ மெய்நெறியாகிய குருதொடர்பினை மையப் படுத்தி மெய்ஞானம் அஞ்ஞானம் என்கிற அறியாமையை விரட்டல் ஆதிமூலம் ஆகிய மனத்துள்ளல் அறிவின் அழுத்தமாகிய ஆனவக்களி இவை அடையாளப்படுத்தப்பட்டு விளைக்கி வைப்பதற்கான நெறிக்கோட்பாட்டை வலியுறுத்துவதால் எழுச்சியும் வீழ்ச்சியும் விழுமங்களாகக் கிடைக்கின்றன.
திருப்பள்ளியெழுச்சி என்றவுடன் பள்ளி கொண்ட எண்ணங்கள் துள்ளியெழுவது ஆனால் மேன்மை பொருந்திய எண்ணங்கள் எழுந்தால்தால் உள்ள முரணும் உடனும் அழிய வழிவகை செய்யும் இத்தகு நிலைப்பாட்டில் நாதமுனி திருப்பள்ளியெழுச்சி, திருவாய்மொழிப்பிள்ளையின் திருப்பள்ளியெழுச்சி போன்றவை இன்றைக்கும் தென் மாவட்டங்களில் வழக்கத்திலுள்ளது.
வைணவச் சிற்றிலக்கியங்கள் திருமாலையும் திருமால் அடியார்களையும் மையப்படுத்தி வெளிப்பட்டாலும் வைணவ மெய்நெறிக் கோட்பாடுகளைச் சமூக அமைப்பு சார்ந்து செயலாக்கம் பெறச் செய்கிறது யுக்தியில் கால சுழற்சி மாற்றத்திற்கு உட்பட்டு கருத்தாளுமையுடன் பெருத்த இலக்கிய வளம் கொண்டதாகச் சிற்றிலக்கியத்துறை வளர்ச்சி அடித்தளமாக உள்ளது.
உலைக்கு ஒரு இலக்கியம் என்றாலும் மனத்தை இலக்கிய எண்ணத்தோடு கட்டிவைப்பது வைணவ சிற்றிலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.
எளிமையான மொழி வழங்களும் இசை இழைவும் கற்பனை பண் அமைவும் காலச் சூழலின் தாள மாற்றமும் உரையாடலாய் மெய்ப்பாட்டோடு வெளிப்படும் பாங்கு மேலும் சிறப்பிற்கு உரியது சைவத்தில் ஒதுவாமூர்த்தி அமைந்தது போல் வைணவத்தில் அறையர் அபிநயம் காட்டி பாசுரம் இசைப்பது வைணவச் சிற்றிலக்கியத்தின் உயிர்நாடி. பகல் பத்து விழாவில் இன்றைக்கும் திருவரங்கத்தில் அறையிர் திருநெடுந்தாண்டகம் இசைத்து கருணை விழிகளின் பொழிவை மெய்ப்பாட்டோடு இசைப்பார். திருக்குருங்குடி, திருக்குருகூர், திருவைகுண்டம், திருக்கோவலூர் போன்ற தென் மாவட்டமாகிய ஒன்பது திருத்தளங்களில் தென் மாவட்ட சமூக வழக்காற்றை மெய்யியல் நெறியோடு வெளிப்படுத்தி வளம் சேர்ப்பது வைணவச் சிற்றிலக்கியம்.

வைணவச் சிற்றிலக்கியங்கள்

பேரா. ந. சேஷாத்திரி, த.து.தலைவர்
அ.ஆ.க.க. நந்தனம்
சிற்றிலக்கியம்
தமிழரின் முன்னோடி இலக்கண நுhலாக விளங்கி பெருமை சேர்த்து வரும் தொல்காப்பியப் பொருளதிகாரம். செய்யுள் மரபு என்கிற இயலில் 40, 42-ம் நுhற்பாலில்,
""அங்கம், முதுசொல்"" என்று குறிப்பிடும் இடத்தில் இலக்கிய வகைகளை பட்டியலிடுகிறார். அதில் சிறுநிகழ்வுகளையும் மையப்படுத்தி வருகிற சொல்லால் சுட்டப்படும் இலக்கிய வெளிப்பாட்டை பிரபந்தம் என்று குறிப்பிட்டு வகை செய்கிறார். அவை 96 என்றும் நுhற்றுக்கும் மேற்பட்ட வகை என்றும் பின்னர் வந்த இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக்கம் செய்கின்றன. சிற்றிலக்கியம் என்பது குறுகிய கால குறிப்பிட்ட நிகழ்வு தருகிற துய்க்க, தூண்டுகிற உணர்வியலை நிலைக்கு ஏற்ப வகைகொண்டு வெளிப்படுத்துவதாகும்.
""தூது, உலா, கலம்பகம், பரணி,
தாண்டகம், மடல், அந்தாதி, பிள்ளைத்தமிழ்,
குறவஞ்சி, திருவெழுக்கூற்றிருக்கை,
மாலை மணம் பரப்புமே""
என்ற 19-ம் நுhற்றாண்டில் வந்த தனிப்பாடல் ஒன்று பறைசாற்றும்.

தூது
சங்க இலக்கியங்களில் ஒத்த தலைவன், தலைவிடத்தில் ஏற்படும் ஊடலால் பிரிவு ஏற்பட அவ்வூடலைத் தீர்க்கும் வாயிலாக கருத்துப் பரிமாற்றத்துக்குத் தோழி பாங்கன், பாங்கி, விரலியர், பாணர், செவிலி என்று தூதுக்குரிய நபர்கள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு தூதுப்பொருள் உணர்த்தப்பட்டு சிக்கல் தீர வழி ஏற்படுத்தும். இது அகத்தூது, புறத்தூது என்று வகைநெறி வகுக்கப்பட்டு சிறப்பான முறையில் கையாளப்பட்டமை தமிழருக்குரிய சிறப்பாகும். காதல்வயப்பட்ட தலைவி தோழியையோ பறவை, விலங்கு, மேகம், மொழி என்று ஊடகத்தை வழியாகக் கொண்டு தூது அனுப்புவர். இத்தகு தூது நிகழ்வு ஓர் இலக்கியமாக வெளிப்படுவது தூது இலக்கியமாகக் கொள்ளப்பட்டது. அவற்றில் அழகர் கிள்ளைவிடுதூது, தமிழ்விடுதூது, புகையிலை விடுதூது, மேகம் விடுதூது என்று பல்வேறு தூது சிற்றிலக்கியங்களை நாம் பயின்று இன்புற்று இருக்கிறோம்.
அழகர் மலையில் உள்ள இறைவன் மீது கொண்ட காதலால் தலைவி தான் வளர்த்த கிளியைத் தூதாக அனுப்பி கைக்கூடுமானால் தன் மாலையோடு மனத்iயும் தர உறுதியளிக்கிறான். தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியலில் 30, 32 நுhற்பா.
""தூதே துவளறு சூல் நிரை சொல்லே"" என்றும்,
""துகில் அணை மேனி சோர்வுறா எண்ணம்"" என்றும் தூதின் நிலைப்பாட்டை, மனக்கிளர்ச்சியோடு கூட்டிப் பொருள் கொள்ள வைக்கிறது.
""எங்கனையோ அன்னமீர்காய்
என்னமுனிவது நீர் நங்கல்கோல
திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின் சங்கினோடும், நேமினோடும்
தாமரைக் கண்ணினோடும், செங்கனிவாய்
ஒன்றினோடும் செல்கிறது என் நெஞ்சமே""
என்று நம்மாழ்வாரின் திருக்குருங்குடிப்பதிகம்.
""வெண்ணில மேலாப்பூ விரித்தாற்போல் மேங்காள்""
என்ற ஆண்டாளின் நாச்சியார் திருமொழி திருவேங்கடப் பதிகம்.
இப்படி தூது இலக்கியங்கள் காலத்திற்கேற்ப அகம், புறம் சார்ந்து வெளிப்பட்டுள்ளன. தூது செல்பவரின் சிறப்பு. தூதினால் நிகழும் நிகழ்வின் விளைவினைப் புறத்தூது செயல்பாட்டில் காணமுடியும். பாண்டவர்களுக்குத் தூதாகக் கண்ணபிரான் நடந்தது, அதியமானின் பெருமையை தொண்டைமானுக்கு ஔவை புறநானூற்றில் 97வது பாடல் குறிப்பிடுவதில் புறத்தூது சிறப்பை உணர முடியும்.
அந்தாதி
ஒரு செய்தியை மையமாகக் கொண்டு ஒரு பாடலின் ஈற்றுச்சொல் அடுத்தப் பாடலின் துவக்கமாக வைத்துப் பயின்று வருகிற இலக்கியம் அந்தாதி ஆகும். முடிவாகவும், தொடக்கமாகவும் ஒரு சொல் அமைவதற்கு சிறப்பு பொருள் கையாளப்படுகிறத் தன்மையே இவை கட்டளைக் கலித்துறை பாவினாலோ, வெண்பாவினாலோ, அந்தாதி பாடப்படும். இவை ஆன்மீகம், சமூகம், அரசியல் சார்ந்து பெருமைக்குரிய இலக்கிய வகையாக விளங்கியுள்ளது. 12ம் நுhற்றாண்டில் கம்பன் எழுதிய சரஸ்வதி அந்தாதி 30 பாடல்களைக் கொண்டது. கலைமகளின் பெருமை, உருவம், அவளின் அருள் இவற்றினை மையப்படுத்தி வந்ததாக வெளிப்படுகிறது. ஆனால் சிற்றிலக்கிய வகையில் வந்த எல்லா அந்தாதிகளும் சமூகம் சார்ந்தோ, ஆன்மீகம் சார்ந்தோ வெளிப்பட்டதைவிட மொழியின் சிறப்பு சார்ந்து வெளிப்பட்டதை விட மொழியின் சிறப்பு சார்ந்து வெளிப்பட்டமை அதிகம். வைணவ சிற்றிலக்கியங்களில் அந்தாதி 60 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. இவை முதல் ஆழ்வார் மூவர் பாடிய மூன்று திருவந்தாதிகளும், பக்திசாரன் என்ற திருமழிசை ஆழ்வார் பாடி நான்முகன் திருவந்தாதியும், மணவாள மாமுனிகள் அருளிச் செய்த திருவாய்மொழி நுhற்றந்தாதியும் திருவரங்கத்து அமுதனார் வழங்கிய ராமானுச நுhற்றந்தாதியும் நாலாயிர திவ்யபிரபந்தத் திரட்டில் உள்ள அந்தாதி நுhல்கள் ஆகும். இவை திருமாலின் பெருமைகளைச் சொல்லுவதோடு சமூகத்தில் மனிதமனம் தழுவிய சலனத்தையும் சங்கதியிட்டு வெளிப்படுத்தியுள்ளது. இவற்றை,
""கைதைசேர் பூம்பொழில்சூழ்
கச்சிறகர் வந்துதித்த பொய்கைப் பிரான்
கவிஞர் போரேறு
வையத்த வியலர்கள் வாழ, அருந்தமிழ்
நுhற்றந்தாதி""
என்ற பொய்கை ஆழ்வாரின் வாக்குமூலம்.
""என் பிறவி தீர இறங்கினேன் இன்னமுத""
என்ற பூதத்தாழ்வாரின் வாக்குமூலம்.
""சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள்
காரார் கனிமுகிலை காணப்புக்கு""
என்ற பேயாழ்வாரின் வாக்குமூலமும் அந்தாதியின் மையநோக்கை வலியுறுத்துகிறப் பாங்கினை உணரலாம்.
பிள்ளைப் பெருமான் அய்யங்கார் அஷ்டப்பிரபந்தம் என்கிற நுhற்திரட்டினை வழங்கியுள்ளார். அதில் திருவரங்கக்கலம்பகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
தாண்டகம்
பன்னிருபாட்டியல் என்கிற இலக்கண நுhல் தாண்டகம் என்கிற இலக்கியத்திற்கு பின்வருமாறு வரையறை செய்கிறது.
24 எழுத்துக்களையும் அசை, மூன்றும் துள்ளலோசை உடையதாகவும் அசைக்குறியீட்டோடு எழுத்து எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட்டும் மனநிலை தடத்தை வலியுறுத்துவது திருமங்கை ஆழ்வாரின் திருக்குறு தாண்டகம். திருநெடுந்தாண்டகம் வைணவ சிற்றிலக்கியத்தின் சிறப்புக்குரியதாகும். திருக்குறுந்தாண்டகத்தில் 20 பாடல்களையும் திருநெடுந்தாண்டகத்தில் 30 பாடல்களையும் உள்ளடக்கிப் படைத்துள்ளார். அனுமனின் பெருமை, திருமாலைப் பகைத்தவர்களின் பெருமை, மானிடர் ஆன்மநிலை, மறையின் உட்பொருள் இவை யாவும் உலகியல் பயன்பாட்டில் உள்ள செயல்பாடுகளை எடுத்துக்காட்டடாக கொண்டு விளக்கப்படுகிற தன்மையில் தாண்டகம் பெருமைக்குரியதாக அமைகிறது. இவரின் தொடக்கமே,
""நிதியினைப் பவளத்தூணை,
நெறிமையாள் நினைய வல்லார்.""
என்ற முதல் பாடலின் வரியும்,
""இருபன் உண்ட நீரும்
போதரும் கொள்க""
என்ற 5வது பாடலின் வரியும்,
""உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசை நெறியன்று உன்னும்""
என்ற 10வது பாடலின் வரியும்,
""பேசினார் பிறவி நீத்தார்
பேருளான் பெருமைப்பேசி
ஏசினார் உய்ந்து போனார்""
என்ற 15வது பாடலின் வரியும் இவர்தம் தாண்டக அனுபவத்தைப் பண் அமைவுக்கு ஏற்ப வெளிப்படுவதிலிருந்து உணரலாம்.
மடல்
தலைவன் கொண்ட காதலை வெளிப்படுத்தி மணம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தலைவியின் மீது கொண்டுள்ள அன்பை ஊரார் அறியும் வண்ணம் குதிரையில் தீட்டி பனையால் ஆன குதிரையின் மீது ஊர்ந்து வெளிப்படுவது மடல் என்று குறிப்பிடப்பட்டது. எத்தகு நிலையிலும் ஆண்மக்கள் மடல் ஏறுகிறேன் என்று அச்சுறுத்தலாமே அன்றி மடல் ஏறுதல் முறை அன்று. அத்தகு அடிப்படையில் பரகாலநாயகி ஆகிய திருமங்கை மன்னன் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு இலக்கியங்களைப் படைத்துப் பெருமை சேர்க்கிறார்.
""ஊரார் துடியேன் உலகறிய ஒண்ணுதளிர்
சீரார் முளைத்தடங்கல் சேரளவும்
பார் எல்லாம் அன்று ஓங்கி
நின்று அளந்தான் நின்ற திருநரையூர்
மன்னோர் ஊர்வன் மடல்""
என்ற பாடலினால் மடல் இலக்கிய வளமையை உணர்ந்துகொள்ள முடியும்.
திருமங்கை மன்னனின் மடல் இலக்கியங்கள் கண்ணிகள் என்கிற ‘பா’ வகையால் அமைந்தது ஆகும். இதில் திருமாலின் திருத்தலம் திருமாலின் திருவிளையாடல் திருமாலின் அவதாரம் மையப்படுத்தப்பட்டு இலக்கியத் திறன் சார்ந்ததாக வலம் வருகிறது. இவரின் தனிச்சிறப்பாகச் சிலாரூபம் கொண்ட அச்சாவதார பெருமையில் ஈடுபடும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக இவர்தம் படைப்பு அமைகிறது. எனவே இவை திருமங்கை மன்னனின் நாற்கவித்திறத்தை வெளிப்படுத்துவது சிறப்புக்குரியது. இவரே சித்திரக்கவி பாடுவதில் ஆல்லவர் என்கிற திறனைத் திருவழக்கூற்றிருக்கை என்கிற இவர்தம் படைப்பு தேர்வடிவ வெளிப்பாட்டினை உணர்த்துகிறது.
""சீபார் திருவேங்கடமே திருக்கோவலுடரே
மதில்கச்சி ஊரகமே பேரகமே
ஆர்ஆனும் ஆழ்ந்த அரங்கம்""
இவை நில வடிவியலையும், கோவில் கட்டட அமைப்பையும் மனநிலைப்பாட்டையும் ஒருங்கிணைத்துத் தரவல்லதாக அமைகிறது.
கலம்பகம்
அகம் என்றால் மனம், கலம் என்றால் தானியங்களைப் பகுத்து எடுக்கிற இடம என்று கலம்பகத்தை வரையறை செய்வார்கள். 12 அலகு கொண்ட தானிய அளவுகோலை கலம்பகம் என்று குறிப்பிடுவார்கள். அப்படி 12 செய்யுள் உறுப்புகளை உள்ளடக்கி பாடப்படுகிற ‘பா’ வகைக கலம்பகம் ஆகும். இத்தகு கலம்பகம் பாடப்படுகிற தலைவன் தலைமைப் பொருள் இவையெல்லாம் ஈமக்கடன் செய்யும் மேடையமைத்து அதன்மேல் அமர புலவன்பாடஉயிர்வதை, உடல் சிதைவு, வடிவச் சிதைவு என்ற நிலைப்பாடு தோன்ற துயரநிலைப்பாட்டில் மொழிகளுக்குக் கிடைக்கும் ஓர் அற்புத இலக்கிய வகை கலம்பகமாக கிடைக்கிறது.
கையறு, தூது, புகழ், கீர்த்தி என்ற 12 உறுப்புகளால் 100 பாடல்களால் பாடப்படும் இதில் முதன்முதலாக வந்தது நந்திக்கலம்பகம். நந்திவர்ம பல்லவனைப் பகைவர்கள் போரில் வெல்ல முடியாமல் புலவனை வைத்துத் தந்திரமாக ‘பா’ வினால் வென்றார்கள் என்று குறிப்பிடுவர். ஆனால் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில் தன் ஆன்மாவை பனையம் வைத்துத் திருவரங்கனைப் பாடுகிறார்.
""காவிரி, கொள்ளிட மாலை சூழ்
திருவரங்கத் தருலனை கொல்லும் மாயோன்
நெற்றிதரள்சேர் திரு ஆழியான்
திருக்கலமபாதம் துணை நெஞ்சே""
என்ற பாடலால் நெஞ்சத்தை உய்விக்க வல்லவன் அரங்கன் என்று பிள்ளைபெருமாள் ஐயங்கார் குறிப்பிடுகின்றார். தன் மனக்கிடப்பாட்டைத் திருவரங்களுக்குச் சொல்ல முயலுகிற போது,
""அலைசீர் திருமுகமும், ஆழிகையொடு
சங்கும்
பஞ்சியசென்னியமும், அரவு அடி நிழலே""
என்று தவளையாகத் தன்னையும் உலகியல் செயல்பாடுகளை அரவின் நிழலாக்கி அரங்கனைப் பற்றுகின்றனர்.
""வினையை அடைந்தது மாயை உலகு
விழிகள் அடைந்தன திருவெண்காங்களிர்
திருக்கரம் அடைந்தது திருவைகுந்தம்
திருமேனி அடைந்தது, தன்மைச் சோதி
யானும் கலியும், எவ்விடம் புகுவோம்
திருவரங்கத்தானே""
என்று விளம்புவது கையறு நிலைப்பாட்டினை வளிக்கவல்லதாக உள்ளது இப்படி கர்மம், யோகம், ஞானம், பக்தி வைராக்கியம் போன்ற செயல்பாடுகளை உறுப்புகளாக வைத்துத் திருவேங்கட கலம்பகத்தில் எடுத்துரைக்கிறார். அனந்தாழ்வானின் மலர் செடி வைத்துப் பராமரிக்கிற தொண்டினையும் திருமலை நம்பி, நாமசங்கீர்த்தனம் என்ற பொய்மொழித் தொண்டினையும் ஆகாச ராசனின் தொண்டைமான் சக்ரவர்த்தியின் பொருள் செலவழிப்புத் தொண்டினையும் ராமானுசர் என்கிற வைணவ ஆச்சாரியாரின் சமய செயல்பாட்டு விளக்கத் தொண்டினையும், திருவேங்கட கலம்பகத்தில் எடுத்துரைக்கின்றார்.
மாலை
ஆண்கள் அணிவது தார் ஆகும். பெண்கள் அணிவது மாலை என்றும் கண்ணி என்றும் வழங்கப்படும். இருந்தாலும் புருசோத்தமாக விளங்குகின்ற திருமாலை பிராட்டியுடன் சேர்த்துப் புகழ்ந்து அணி செய்வது மாலை ஆகும். இது எண்ண மாலை, அந்திமாலை, கண்ணினுள் நின்று ஆடும் நீலமாலை நித்திலம்சூல், நித்தியசூரிமாலை என வைணவத்தின் மாலை பலவிதமாக மலர்கிறது. அடியார்க்கு அடியாராக இருந்த விப்ர நாராயணர் தொண்டரடி பொடியாக ஆழ்ந்து வெளிப்படத்தியது. திருமாலை, ராமனின் பக்தியிலும், கிருஷ்ணனின் பக்தியிலும் ஆழ்ந்து அடியார்க்கு அடியாராக அரங்கன் கோயில் முற்றத்தில் ஆழ்ந்த குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலை என்று இலக்கியம் வெளிப்பட்டாலும் வேதாந்த தேசிகர் என்கிற பெரியவர். தேவராச பெருமானை நோக்கி பாடிய அத்திகிரி அருளாளாப் பெருமாள் மாலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிற்காலத்தில் வந்த சில அடியார்கள் திருவேங்கட மாலை திருமாலிடும் சோலைமாலை என்று பல்வேறு திருத்தலங்களை அடையாளப்படுத்துகின்ற திருத்தலங்களை மாலை இலக்கியங்களாகத் தொகுத்துள்ளனர்.

No comments:

Post a Comment