31) சீயகங்கன் சிறப்பு யாது?
சீயகங்கன் என்பவர் ஒரு குறுநில மன்னர். இவர் பவனந்தி முனிவரை ஆதரித்தார். சீயகங்கன் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
32) எழுத்திலக்கணத்தின் இலக்கணம் யாது?
எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி ஆகிய பத்தும் எழுத்திலக்கணத்தின் அக இலக்கணம் ஆகும்.
33) எழுத்து என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
மொழிக்கு முதல் காரணமாய்
அமைகின்ற அணுத்திரளின் காரணமாகிய ஒலியே எழுத்து எனப்படும்.
i) முதலெழுத்து
ii) சார்பெழுத்து என இரண்டு
வகைப்படும்.
34) சார்பெழுத்துக்கள் யாவை?
உயிர்மெய், ஆய்தம், உயிரளபடை, ஒற்றளபடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகர குறுக்கம், ஆய்த குறுக்கம் ஆகியப் பத்தும் சார்பெழுத்துக்கள் ஆகும்.
35) மாத்திரை என்றால் என்ன?
மாந்தருக்கு இயல்பாக உருவாகின்ற ஒரு கைநொடிப்பொழுதும், கண்ணிமைப் பொழுதும் ஒரு மாத்திரைக்குரிய அளவு ஆகும். உயிரளபடைக்கு மாத்திரை மூன்று. நெட்டெழுத்திற்கு மாத்திரை இரண்டு. ஐகார குறுக்கம், ஔகாரகுறுக்கம், ஒற்றளபடை என்பனவற்றிற்கு மாத்திரை ஒவ்வொன்று. மெய்யெழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பனவற்றிற்கு மாத்திரை அரை. மகர குறுக்கம், ஆய்த குறுக்கம் என்பனவற்றிற்கு கால் மாத்திரை.
36) பொதுப் பெயர், சிறப்புப் பெயர் என்றால் என்ன?
பொதுப் பெயர்
பல பொருளுக்கு பொதுவாய்
வழங்கப்படும் பெயர் பொதுப் பெயர் எனப்படும்.
சிறப்புப்
பெயர்
ஒவ்வொரு பொருளுக்கே
வழங்கப்படும் பெயர் சிறப்புப் பெயர் எனப்படும்.
37) அ,
இ, உ எவ்வகை எழுத்துக்கள்?
இவை சுட்டெழுத்துக்கள்
இவை சுட்டெழுத்துக்கள்
அ, இ, உம் முதல் தனிவரில் சுட்டே.
அ, இ, உ என்னும் மூன்று
எழுத்துகளும் மொழிக்கு முதலில் தனித்துச் சுட்டுப் பொருளைக் காட்டி வந்தால்
சுட்டெழுத்துக்கள் ஆகும்.
38) வினா எழுத்துக்கள் யாவை?
எ, யா, ஆ, ஓ, ஏ இவ்வைந்து எழுத்தும் வினா
எழுத்துக்கள் ஆகும்.
39) ஐ,
ஔ வின்
இனவெழுத்துக்கள் யாவை?
i)
‘ஐ’ யின் இனவெழுத்து ‘இ’
ii)
‘ஔ’வின் இனவெழுத்து ‘உ’ ஆகும்.
40) த,
ப, ற எவ்வாறு பிறக்கும்?
த
மேல்வாய்ப் பல்லின் அடியை
நாக்கு நுனி பொருந்த ‘த’பிறக்கும்.
ப
மேலுதடும், கீழுதடும் பொருந்த ‘ப’எனும் எழுத்துப் பிறக்கும்.
ற
மேல்வாயை நாவின் நுனி நன்றாக
பொருந்தின் ‘ற’
பிறக்கும்.
41) மெல்லின மெய் எவ்வாறு பிறக்கும்?
மெல்லின மெய்
ங, ஞ, ண, ந, ம, ன எனும் ஆறும் மெல்லின மெய் ஆகும்.
ங
நாக்கின் அடியும், மேல்வாயின் அடியும் பொருந்த ‘ங’ பிறக்கும்.
ஞ
நாக்கின் நடுவும், மேல்வாயின் நடுவும் பொருந்த ‘ஞ’ பிறக்கும்.
ண
நாக்கின் கடையும், மேல்வாயின் கடையும் பொருந்த ‘ண’ பிறக்கும்.
ந
மேல் வாய்ப் பல்லின் அடியை
நாக்கு நுனி பொருந்த ‘ந’ பிறக்கும்.
ம
மேல் உதடும், கீழ் உதடும் பொருந்த ‘ம’ பிறக்கும்.
ன
மேல்வாயை நாவின் நுனி நன்றாக
பொருந்தின் ‘ன’
பிறக்கும்.
42) எடுத்தல், படுத்தல் என்றால் என்ன?
எடுத்தல்
எழுத்துக்கள் பலவற்றிற்குப்
பிறப்பு ஒன்றாகக் கூறப்பட்டாலும், உயர்த்திக் கூறுதல் எடுத்தல்
எனப்படும்.
படுத்தல்
எழுத்துக்கள் பலவற்றிற்குப்
பிறப்பு ஒன்றாக கூறப்பட்டாலும், தாழ்த்திக் கூறுதல் படுத்தல்
எனப்படும்.
43) குற்றியலுகர வகை யாது?
i) நெடிற்றொடர் குற்றியலகரம் -
நாகு
ii) ஆய்த தொடர் குற்றியலுகரம் -
எஃகு
iii) உயிர்தொடர் குற்றியலுகரம் -
வரகு
iஎ) வந் றொடர்
குற்றியலுகரம் - கொக்கு
எ) மென் றொடர் குற்றியலுகரம்-வண்டு
எi) இடைத்தொடர்
குற்றியலுகரம்-வெய்து
இவ்வாறு
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
44) இயற்கை குற்றியலுகம், செயற்கை குற்றியலுகரம் விளக்குக?
i) இயற்கை குற்றியலுகரம்
குற்றியலுகரம் முப்பத்தாறு.
இம்முப்பத்தாறினிலும் குற்றியலுகரம் தானாக வரும். இதற்கு இயற்கை குற்றியலுகரம்
எனப்படும்.
ii) செயற்கை குற்றியலுகரம்
அசைச் சொல்லாகிய மியாவினில்
குற்றியலுகரம் உருவாக்கப்படுகிறது. எனவே இவை செயற்கை குற்றியலுகரம் எனப்படும்.
(உ.ம்) கேள்மியா
= கேண்+மியா
45) மொழிக்கு இறுதியில் வராத எழுத்துக்கள்
யாவை?
i) அ,
இ, உ, எ, ஒ, ஔ என்னும் ஆறும் தனித்து
நின்று மொழிக்கு இறுதியில் வராத எழுத்துக்கள் ஆகும்.
ii) வல்லின மெய்கள் ஆறும், ஙகர மெய்யும் சொல்லுக்கு இறுதியில் வராது.
46) வகரம் எவ்வாறு மொழி முதலாகும்?
உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம்முதல்.
வகரமெய், உ, ஊ, ஒ, ஓ என்னும் நான்கு உயிரும்
அல்லாத ஏனைய எட்டு உயிர்களுடன் சொல்லுக்கு முதலில் வரும்.
உ.ம். வடை, வீதி, வெல்
47) ஆய்த குறுக்கத்தின் இலக்கணம் யாது?
ல, ள வீற்று இயைபினால் ஆய்தம் அஃகும்.
லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சியினால் வருகின்ற ஆய்தம் தனுக்குரிய அரை
மாத்திரையிலிருந்து குறுகும்.
(உ.ம்) i) அல்+திணை= அஃறினை
ii)
முள்+தீது=
முஃடீது
48) உயிர்மெய் பொருளும், இலக்கணம் யாது?
உயிர்மெய்
உயிர் எழுத்து 12ம், மெய்யெழுத்து 18ம் சேர்ந்து (12 ஒ18) =216 (உயிர்மெய்) எனப் பெயர்பெற்றது.
49) போலி என்றால் என்ன? வகை கூறுக?
போலி
ஒரு சொல்லில் ஒரு எழுத்துக்கு
பதில் வேறொரு எழுத்து வந்தும், பொருள் மாறுபடாமல் இருந்தால்
அது ‘போலி’ எனப்படும்.
வகை
போலி மூன்று வகைப்படும்.
i) முதல் போலி
ii) இடைப் போலி
iii) கடைப் போலி ஆகியவை ஆகும்.
50) மெய்ம்மயக்கம் என்றால் என்ன?
ஒரு மெய் மற்றொரு மெய்யோடு
மயங்குதல் மெய்ம்மயக்கம் எனப்படும். இவை
i) உடனிலை மெய்ம்மயக்கம்
ii) வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என
இரு வகைப்படும்.
நன்னூல் தமிழ் இலக்கணங்கள் நியதிகள் மென்பொருள் நிரலாக்க மொழிகளில் எவ்வாறு கையாளப்பட்டு கணினி அல்லது கைபேசி செயலிகளில் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது தெரியவரின் இன்னும் அதிகம் நாடிவருவர்
ReplyDelete