- அணல் - தாடி, கழுத்து
- அனல் - நெருப்பு
- அணி - அழகு
- அனி - நெற்பொறி
- அணு - நுண்மை
- அனு - தாடை, அற்பம்
- அணுக்கம் - அண்டை, அண்மை.
- அனுக்கம் - வருத்தம், அச்சம்
- அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
- அனை - அன்னை, மீன்
- அணைய - சேர, அடைய
- அனைய - அத்தகைய
- அண்மை - அருகில்
- அன்மை - தீமை, அல்ல
- அங்கண் - அவ்விடம்
- அங்கன் - மகன்
- அண்ணம் - மேல்வாய்
- அன்னம் - சோறு, அன்னப்பறவை
- அண்ணன் - தமையன்
- அன்னன் - அத்தகையவன்
- அவண் - அவ்வாறு
- அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
- ஆணகம் - சுரை
- ஆனகம் - துந்துபி
Thursday, 14 May 2015
மயங்கொலி
தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்
பி.ஏ.. தமிழிலக்கியம் முதல் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு
முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 2
தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்
( இணையத்தில் கிடைப்பவை)
சிற்றிலக்கியங்கள் முதுகலை முதலாண்டு – முதல்பருவம்
அலகு-5
அ.சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(தால,வருகை)
ஆ.அபிராமி
அந்தாதி
ஆ.அபிராமி அந்தாதி
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும்
சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி
நாயகனுக்கும், அவன் ஒரு
பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு
விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி
எப்பொழுதும் என் சிந்தையுள்ளே
உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
1: உதிக்கின்ற
செங்கதிர், உச்சித்
திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
உதய சூரியனின் செம்மையான கதிரைப்
போலவும், உச்சித்திலகம்
என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற
மாணிக்கத்தைப் போலவும், மாதுள
மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும்
மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என்
அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும்,
மணம் மிகு குங்குமக்
குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச்
சிறந்த துணையாவாள்.
2: துணையும், தொழும் தெய்வமும்
பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
Subscribe to:
Posts (Atom)