Pages

Thursday 14 May 2015

மயங்கொலி


, ன பொருள் வேறுபாடு
  • அணல் - தாடி, கழுத்து
  • அனல் - நெருப்பு
  • அணி - அழகு
  • அனி - நெற்பொறி
  • அணு - நுண்மை
  • அனு - தாடை, அற்பம்
  • அணுக்கம் - அண்டை, அண்மை.
  • அனுக்கம் - வருத்தம், அச்சம்
  • அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
  • அனை - அன்னை, மீன்
  • அணைய - சேர, அடைய
  • அனைய - அத்தகைய
  • அண்மை - அருகில்
  • அன்மை - தீமை, அல்ல
  • அங்கண் - அவ்விடம்
  • அங்கன் - மகன்
  • அண்ணம் - மேல்வாய்
  • அன்னம் - சோறு, அன்னப்பறவை
  • அண்ணன் - தமையன்
  • அன்னன் - அத்தகையவன்
  • அவண் - அவ்வாறு
  • அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
  • ஆணகம் - சுரை
  • ஆனகம் - துந்துபி

தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்



பி.ஏ.. தமிழிலக்கியம் முதல் பருவம் - (20132014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 2
தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்
 ( இணையத்தில் கிடைப்பவை)

சிற்றிலக்கியங்கள் முதுகலை முதலாண்டு – முதல்பருவம்

லகு-5

        அ.சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

           (தால,வருகை)

       ஆ.அபிராமி அந்தாதி

 ஆ.அபிராமி அந்தாதி

 

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
 

கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
 
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

Tuesday 12 May 2015

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்

 (2013-2014 கல்வியாண்டு முதல்)

அலகு-5
        அ.சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
           (தால,வருகை)
       ஆ.அபிராமி அந்தாதி

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் தாலப் பருவம்


1.      வெண்ணந் துரறி வயிறுளைந்து
          
வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
      
வெண்ணித் திலத்தை அரித்தெடுத்து
          
வெள்வாய்க் களமர் கரைகுவிக்க
      
வண்ணம் துவர்என் றுவமிக்கும்
          
வாய்ஓ திமம்நீர் குடைந்தெழுந்து
      
மற்றக் குவியல் மேல்இவர்ந்து
          
மருவி முதிரா வெயில்காயக்
      
கண்ணந் துறஉண் டெழுதரும்அக்
          
களமர் மராள முட்டையினைக்
      
கதிர்நித் திலமென் றுறக்குவித்தோம்
          
கடையேம் மயங்கி எனநாணும்
      
தண்ணம் துறைசேர் குன்றத்தூர்த்
          
தலைவா தாலோ தாலேலோ
      
சகலா கமபண் டிததெய்வச்
          
சைவா தாலோ தாலேலோ

    [ அ. சொ. ]  நந்து-சங்கு, உரறி-ஒலித்து, உளைந்து-நொந்து, வீற்று வீற்றா-வரிசை வரிசையாக, கருஉயிர்த்த-தன் கருவை ஈன்ற, நித்திலத்தை-முத்தை, அரித்து-சல்லடை கொண்டு சலித்து, களமர்-உழவர், வண்ணம்-நிறம், துவர்-பவழம், ஓதிமம்-அன்னம், குடைந்து-முழுகி, இவர்ந்து-ஏறி உட்கார்ந்து, மருவி-பொருந்தி, கள்-கள்ளை, நந்துற-செருக்குற, மராள-அன்னத்தின், கதிர்-ஒளியுடைய, கடையேம்-கடைப்பட்டவராயினோம், நாணும்-நாணுதற்குக் காரணமான, தண்ணந்துறை-குளிர்ந்த நீர்க்கட்டம், சகல ஆகம பண்டித-எல்லா ஆகமங்களையும் பயின்ற அறிஞரே.
விளக்கம் :  தால் என்பது நாக்கு.  அந்நாக்கை அசைத்து ஓசை எழுப்பிக் குழந்தைகளை உறங்க வைக்க முயலுவதால் இப்பருவம் தாலாட்டுப் பருவம் எனப்பட்டது.  இஃது எட்டாம் மாதத்தில் நிகழ்த்தும் செயல்.   “ எட்டாம் திங்களில் இயல் தாலாட்டும் “ என்பது பிங்கலந்தை.
    முத்துக்கள் பிறக்கும் இடம் பலவாகும்.  இதனை,

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்


அலகு-2

ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் - மதுரைக் கலம்பகம்

 
குமர குருபரரின் மதுரைக்கலம்பகம் காப்பு ஒன்றும், பாடல்கள் 102ம் கொண்டு அமைந்துள்ளது. மதுரைச் சொக்கநாதரின் பெருமைகளையும் திருவிளையாடல்புராண வரலாறுகளையும் இந்நூல் நயமுற எடுத்துரைக்கிறது.

சிற்றிலக்கியங்கள் முதுகலை முதலாண்டு – முதல்பருவம்



(2013-2014 கல்வியாண்டு முதல்)
அலகு-3 அழகர் கிள்ளை விடுதூது
 பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய

அழகர் கிள்ளை விடுதூது

உள்ளடக்கம்
காப்பு
கிளியின் சிறப்புகள் (1-66)
உள்ளம் கவர்ந்த அழகரின் சிறப்புரைத்தல் (67-96)
இறைவனின் தசாங்கம் உரைத்தல் (97-123)
அழகரின் பெருமை உரைத்தல் (124-139)
அழகரை வணங்கி பேறு பெற்றவர் (140-142)
கோடைத் திருவிழாபற்றி விவரித்தல் (143-165)
தலைவி அழகரைக் கண்டு காமுற்றது பற்றி உரைத்தல் (166-171)
அழகர் காதலால் துயர் செய்வதாய்க் குற்றம் சாட்டுதல் (172-184)
அழகர் சோலைமலை திரும்பிவிட்டார் எனக் கூறல் (185-187)
கிளியிடம் தலைவி தன் விரக வேதனை உரைத்தல் (188-209)
அழகர் இருக்கும் இடம் (210-213)
அழகர் அவையில் இருப்போர் (214-229)
தூதுரைக்க வேண்டிய வேளை (230-235)
மாலை வாங்கிவர வேண்டல் (236-239)

காப்பு


தெள்ளு தமிழ்அழகர் சீபதி வாழ்வார் மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகுஊரத் தானேசங்கு ஊர்கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம் கூர்.

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்



 (2013-2014 கல்வியாண்டு முதல்)
அலகு-4 குமரேச்சதகம்

குருபாத தாசர் அருளிய "குமரேச சதகம்"


காப்பு

பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.

அவையடக்கம்

திருக்கயிலாய ஞான உலா முதுகலை முதலாண்டு – முதல்பருவம்,



சிற்றிலக்கியங்கள் (2013-2014 கல்வியாண்டு முதல்) 
(அரசு கலைக் கல்லூரி சேலம்-7 மாணவர்களுக்குரியது) முதுகலை முதலாண்டு – முதல்பருவம், 
சேரமான் பெருமாள் நாயனார்

பெரியபுராண அடியவர்களில் ஒருவரும், சேரமன்னரும்,
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பருமான சேரமான் பெருமாள்
பாடிய மூன்று பனுவல்கள் அடுத்துப் பதினொராம்
திருமுறையுள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை