Pages

Friday, 3 April 2015

நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில் 1



1. பாயிரத்தின் பெயர்களைக் கூறுக?
1)            முகவுரை 2) பதிகம் 3) அணிந்துரை 4) நூல் முகம் 5) புறவுரை 6) தந்துரை 7) புனைந்துரை ஆகிய ஏழும் பாயிரத்தின் பெயர்கள் ஆகும்.
2. நூன் முகம், புனைந்துரை பெயர்க்காரணம் தருக?
நூன் முகம்-நூலுக்கு முகம் போல அமைவதால் நூன்முகம் எனப்பட்டது.புனைந்துரை- இது ஒரு நூலில் உள்ள சிறப்பானச் செய்திகளை எடுத்துரைப்பது புனைந்துரை ஆகும்.
3. பாயிரம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பாயிரம்-            பாயிரம் என்பது ஒரு நூலின் வரலாறு ஆகும்.
வகை- பாயிரம் இரண்டு வகைப்படும்
அவை1)       பொதுப் பாயிரம்  2)            சிறப்புப் பாயிரம்
4. பொது பாயிரத்தின் ஐந்து வகை இலக்கணம் யாது?
1)            நூலினது வரலாறு
2)            நூலைக் கற்பிக்கும் ஆசிரியனது வரலாறு
3)            அவ்வாசிரியன் மாணவனுக்கு நூலை பாடம் சொல்லும் வரலாறு
4)            மாணவனது வரலாறு
5)            மாணவன் பாடம் கேட்டலின் வரலாறு
5. நூல்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
                நூல்கள் மூன்று வகைப்படும். அவை,
1)     முதல் நூல் 2)      வழி நூல்3)        சார்பு நூல்
6. முதல் நூலின் இலக்கணம் யாது?
         தெய்வத்தால் எழுதப்படுகின்ற நூலையே முதல் நூல் என்க. ஆனால்  இறைவனுடைய  அருளைப் பெற்றவர்கள் எழுதப்படுகின்ற நூல்கள் அனைத்துமே முதல் நூல் ஆகும். (உ.ம்) அகத்தியம்
7. வழி நூலின் இலக்கணம் யாது?
                கடவுள் அல்லது அவனுடைய அருளைப் பெற்றவர்கள் எழுதிய நூல்களில் பொருளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அன்னுhல் இருக்கவே தன் காலத்திற்கு ஏற்ற சில சில வேறுவாடுகளை உலகிலுள்ளோர் ஏற்றுக் கொள்ளப்படுவது ஆகும். இன்நூல் அழியா தன்மை பெற்று விளங்கும்.
(உ.ம்) தொல்காப்பியம்.
8. பின்னோர் வேண்டும் விகற்பம் கூறல் என்றால் என்ன?
இறந்தது விலக்கல்--     பழைய இலக்கணங்களாகி சில பிற்காலத்தில் வழங்கப்படாமல் (அ) ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தால் பழையவற்றை இறந்தது விலக்கல் என்ற உத்தியினால் விளக்குவர்.
எதிரது போற்றல்-   இக்காலத்தில் விளங்குகின்றவற்றிற்கு புதிய இலக்கணங்களை உருவாக்கி எதிரது போற்றல் என்னும் உத்தியினால் ஏற்றுக் கொண்டும் கூறுவது ஆகும். இவ்விரண்டையும் வழிநூல் இலக்கணம் என்றும் கூறலாம்.
9. சார்பு நூலின் இலக்கணம் யாது?
                முதல் நூல் மற்றும் வழி நூல் முதலானவை இருவகை நூல்களுக்கும் பொருள் முடிவால் ஓரளவு ஒத்தும் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இயற்றப்படுவதம் சார்பு நூல் ஆகும்.(உ.ம்) நன்னுhல்
10. பொன்னைப் போல் போற்றுவோம் எதனை?
                தனக்கு முன்னால் இருந்த ஆசிரியர்கள் இயற்றிய நூலின் பொருளை மட்டுமின்றி அவர்கள் இலக்கணத்தில் பயன்படுத்திய சூத்திரங்களின் சில வரிகளையும் பொன்னைப்போல காப்பாற்றுவோம் என்பதற்கு அடையாளமாக தமது நூலில் ஆங்காங்கே பயன்படுத்தி செல்வது வழிநூல், சார்பு நூலுக்குரிய அடையாளங்கள் ஆகும்.
 11. நூற்பயன் யாவை?
                ஒரு நூல் படிக்கப்படுபவரின் நலனுக்காகவும் சமுதாயத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்துவதற்காகவும் எழுதப்பட வேண்டும். ஒரு நூலானது நான்கு வகை பயன்களைக் கொண்டிருக்கும். அவை,1)            அறம் 2) பொருள் 3) இன்பம் 4) வீடு ஆகியவை.
12. எழுவகை மதம் யாது?
                1) பிறர் மதத்திற்குத் தான் உடன்படுதல்   2) பிறர் மதத்தை மறுத்தல்    3) பிறர் மதத்திற்கு உடன்பட்டு பின்பு மறுத்தல்    4) தானே ஒரு பொருளை எடுத்துக் கூறி அதனை வருமிடந்தோறும் நிலைநிறுத்துதல்   5) இருவரால் ஒன்றுக்கு ஒன்று முரணாக கொள்ளப்பட்ட இரண்டு பொருள்களுள் ஒரு பொருளில் துணிவு கொள்ளுதல்             6) பிறர் நூலில் உள்ள குற்றத்தை எடுத்துக் காட்டுதல்   7) பிறர் மதத்திற்கு உடன்படாமல் தன் மதத்தையே தான் கொள்ளுதல்
13. வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல் யாது?
வெற்றெனத் தொடுத்தல்-    பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைச் சேர்த்துக் கொள்ளுதல்    
மற்றொன்று விரித்தல்-    சொல்லத் தொடங்கிய பொருளைச் சுருக்கி இடையிலே மற்றொரு பொருளை விரித்துச் சொல்லுதல்.
14. மதத்தினுள் வந்தன, உத்தியில் வந்தன 2 உதாரணம் தருக?
1) ஒருதலை துணிதல்-   இரு மாறுபட்ட கொள்கைகளில் ஒன்றைத் துணிந்து எடுத்துக் கொள்ளுதல்
2)  பிற நூன் முடிந்தது தானுடன் படுதல்-   பிற நூலிலே முடிந்த முடிவை தான் ஏற்றுக் கொள்ளுதல்                   
3) தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல்- தான் புதிதாகக் குறித்து வழங்குவதைப் பல இடங்களில் எடுத்துச் சொல்லுதல்
15) முறையின் வைப்பே, உலக மலையாமே-பொருள் தருக?
முறையின் வைப்பே -      படலம், ஓத்து முதலியவற்றை ஏற்ற முறைப்படி வைத்தல்
உலகமலை யாமே=    உயர்ந்தோர் கருத்து மாறுபடாமல் இருக்க வேண்டும்.
16) அழகியலும் வந்தன, உத்தியிலும் 2 உதாரணம் தருக?
1) சொற்பொருள் விரித்தல் 2) தொடர்சொற்புணர்தல்
அ) ஒரு பொருளை வெளிப்படையாக விளங்கும்படி சொல்லுதல்
ஆ) ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களை சேர்த்து வைத்தல் (உ.ம்) மலர், கொடி
2) ஓத்து முறை வைப்பே- இயல்களை காரண, காரிய முறைப்படி வைத்தல்
3) எடுத்துக்காட்டல்-    தான் சொல்லும் இலக்கணத்திற்கு தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டல்
17) இரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தல் பெயர்க்காரணம் தருக?
இரட்டுற மொழிதல்-                ஒரு வாக்கியத்தை இரண்டு பொருள்படக் கூறுதல் இரட்டுற மொழிதல் ஆகும்.
ஏதுவின் முடித்தல்-                முன்பு காரணம் விளங்காமல் கூறப்பட்ட ஒன்றை பின் காரணம் காட்டி முடிவு செய்தல்
18) உத்தி என்றால் என்ன?
Image result for உத்தி            
    i) ஒரு நூலால் உணர்த்தப்படும் பொருளை, நூல் வழக்கோடும் உலக வழக்கோடும் பொருந்துமாறு காண்பித்து ஏற்குமிடத்தை அறிந்து இவ்விடத்தில் இவ்வாறு சொல்லுதல் பொருந்தும் என நினைத்து தக்க படியாகச் செலுத்துதல் தந்திரவுத்தி ஆகும்.
ii) நூற் பொருத்தத்தை கூறுவது உத்தி எனப்படும்.
19) ஒத்து என்றால் என்ன?
                i) ஒரு சாதியாயுள்ள மணிகளை வரிசையாகப் பதித்து வைத்தாற் போல, ஓரினமாயுள்ள பொருள்களை ஒரு வழிப்படச் சொல்லுவது ஒத்து எனப்படும்.
ii) ஒத்து என்றால் இயல் என்றும் பொருள் உண்டு.
20) படலம் என்றால் என்ன?
                ஒரு வழிப்படாமல் பல்வேறுபட்ட பொருள்களினால் பொது வகையாகக் கூறினால், அது படலம் என்னும் உறுப்பு ஆகும்.
21) சூத்திரத்தின் இலக்கணம் யாது?
i)              சில வகை எழுத்துக்களால் ஆகிய வாக்கியத்தில் பலவகைப்பட்ட விரிந்த பொருள்களை செவ்வையாக அடக்கி அப்பொருளை விளங்கச் செய்வது சூத்திரம் ஆகும்.
ii)             குற்றமில்லாமையும், சொல்வலிமையும் பொருள் வலிமையும் ஆழமுடைமையால் பொருள் நுணுக்கங்களும் சிறந்து வருவன சூத்திரம் ஆகும்.
22) அரிமா நோக்கம், ஆற்றொழுக்கு விளக்குக?
Image result for சிங்கம் விலங்கு 
அரிமா நோக்கம்-      முன்னும், பின்னும் பார்க்கின்ற சிங்கத்தின் பார்வையைப் போன்றது சூத்திர நிலை.
i) ஆற்றொழுக்கு-   சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பொருளால் தொடர்ந்து நிற்கும் நிலைகள், இடையறாது ஒருமுகமாக ஓடுகிற் ஆற்று நீரோட்டத்தையும் போன்றது சூத்திரநிலை.
 23) விரிவு அதிகாரம் என்றால் என்ன?
i) விரிவு-      சொல்லில் மறைந்து நின்றவற்றை எடுத்துக் கூறுவது
ii) அதிகாரம்-       ஒரு அதிகாரத்தில் எடுத்துக் கொண்டப் பொருளை மற்றொரு இடத்திலும் பொருத்திக் காட்டுதல்.
24) முக்காண்டிகையுரை என்றால் என்ன?
                கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு ஆகிய மூன்றையும் கொண்டிருந்தால் அதற்கு முக்காண்டிகையுரை எனப்படும்.
25) ஐங்காண்டிகையுரை என்றால் என்ன?
                கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு ஆகிய மூன்றுடன் வினா, விடை ஆகியவற்றையும் சேர்த்துக் கூறுவது ஐங்காண்டிகையுரை எனப்படும்.
26) பத்துக் குற்றத்தில் மூன்று கூறுக?
                i) குறித்த பொருளை விளக்குவதற்கு வேண்டிய சொற்களில் குறைவுபடக் கூறுதல்.
                ii) குறித்த பொருளை விளக்குவதற்கு வேண்டிய சொற்களைக் காட்டிலும் மிகுதியாகக் கூறல்.
                iii) முன்ன சொன்ன பொருளையே பின்னும் கூறுதல்.

27) நிலம், மலை யாருக்கு உவமை?
Image result for நிலம் மலை             
   நிலம், மலை நல்லாசிரியருக்கு உவமையாகும்.
நிலம்         i) பிறரால் அறியப்படாத உருவரப்பரப்பின் பெருமையும் தன்மேல் பொருந்திய சுமைகளால் கலங்காத வலிமையும், தன்னைச் சார்ந்த மக்கள் தோண்டுதல் முதலிய குற்றங்களை செய்தாலும் பொறுக்கின்ற பொறுமையும் பருவ காலத்தில் உழவர் செய்யும் முயற்சியின் அளவுக்கு ஏற்ப அவர்களுக்கு பயனை தருவது நல்ல நிலத்தின் சிறந்த குணங்கள் ஆகும்.
மலை                i) அளவிடாத கல்விப் பெருமையுடையவன் ஆசிரியன். நெடுந்தொலைவில் உள்ளவராலும் காணப்படும் உயர்ச்சியும் ஆசிரியருக்கே உரியது.
                ii) மழை பெய்யாமல் வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர்வளம் கொடுக்கும் கொடையும் மலைக்குள்ள குணம் ஆகும்.
                iii) இவ்வாறு நிலம், மலைஆகிய இரண்டும் நல்லாசிரியனுக்கு உவமையாகும்.                                                                     
28) கழற்குடம், பருத்தி குண்டிகை யாருக்கு உவமை?
Image result for பருத்தி                கழற்குடம், பருத்தி குண்டிகை ஆகியவை இரண்டும் ஆசிரியர் ஆகாதவருக்கு உவமை ஆகும்.
29) நெய்யறி, எருமை யாருக்கு உவமை
                Image result for எருமை



 நெய்யறி, எருமை ஆகியவை கடைமாணாக்கருக்கு உவமை ஆகும்.
30) சிறப்புப் பாயிரம் செய்வதற்கு உரியவர் யார்?
                i) தன்னுடைய ஆசிரியன்
                ii) தன்னுடன் பாடங் கேட்டவன்
                iii) தன்னுடைய மாணாக்கன்
                iஎ) தன் நூலுக்கு தகுதியான உரையை செய்தவன் ஆகியோர், இந்நால்வரில் ஒருவர் சிறப்பு பாயிரம் செய்வதற்கு உரியவர் ஆவர்கள்.

No comments:

Post a Comment