- அணல் - தாடி, கழுத்து
- அனல் - நெருப்பு
- அணி - அழகு
- அனி - நெற்பொறி
- அணு - நுண்மை
- அனு - தாடை, அற்பம்
- அணுக்கம் - அண்டை, அண்மை.
- அனுக்கம் - வருத்தம், அச்சம்
- அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
- அனை - அன்னை, மீன்
- அணைய - சேர, அடைய
- அனைய - அத்தகைய
- அண்மை - அருகில்
- அன்மை - தீமை, அல்ல
- அங்கண் - அவ்விடம்
- அங்கன் - மகன்
- அண்ணம் - மேல்வாய்
- அன்னம் - சோறு, அன்னப்பறவை
- அண்ணன் - தமையன்
- அன்னன் - அத்தகையவன்
- அவண் - அவ்வாறு
- அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
- ஆணகம் - சுரை
- ஆனகம் - துந்துபி
- ஆணம் - பற்றுக்கோடு
- ஆனம் - தெப்பம், கள்
- ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
- ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
- ஆணேறு -ஆண்மகன்
- ஆனேறு - காளை, எருது
- ஆண் - ஆடவன்
- ஆன் - பசு
- ஆணை - கட்டளை, ஆட்சி
- ஆனை - யானை
- இணை - துணை, இரட்டை
- இனை - இன்ன, வருத்தம்
- இணைத்து - சேர்த்து
- இனைத்து - இத்தன்மையது
- இவண் - இவ்வாறு
- இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
- ஈணவள் - ஈன்றவள்
- ஈனவள் - இழிந்தவள்
- உண் - உண்பாயாக
- உன் - உன்னுடைய
- உண்ணல் - உண்ணுதல்
- உன்னல் - நினைத்தல்
- உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
- உன்னி - நினைத்து, குதிரை
- ஊண் - உணவு
- ஊன் - மாமிசம்
- எண்ண - நினைக்க
- என்ன - போல, வினாச்சொல்
- எண்ணல் - எண்ணுதல்
- என்னல் - என்று சொல்லுதல்
- எண்கு - கரடி
- என்கு - என்று சொல்லுதல்
- ஏண் - வலிமை
- ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
- ஏணை - தொட்டில்
- ஏனை - மற்றது
- ஐவணம் - ஐந்து வண்ணம்
- ஐவனம் - மலை நெல்
- ஓணம் - ஒரு பண்டிகை
- ஓனம் – எழுத்துச்சாரியை
- கணகம் - ஒரு படைப்பிரிவு
- கனகம் - பொன்
- கணப்பு - குளிர்காயும் தீ
- கனப்பு - பாரம், அழுத்தம்
- கணி - கணித்தல்
- கனி - பழம், சுரங்கம், சாரம்
- கணம் - கூட்டம்
- கனம் -பாரம்
- கண்ணன் - கிருஷ்ணன்
- கன்னன் - கர்ணன்
- கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
- கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி
- கணை - அம்பு
- கனை - ஒலி, கனைத்தல்
- கண் - ஓர் உறுப்பு
- கன் - கல், செம்பு, உறுதி
- கண்று - அம்பு
- கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை
- கண்ணல் - கருதல்
- கன்னல் - கரும்பு, கற்கண்டு
- காண் - பார்
- கான் - காடு, வனம்
- காணம் - பொன், கொள்
- கானம் - காடு, வனம், தேர், இசை
- காணல் - பார்த்தல்
- கானல் - பாலை
- கிணி - கைத்தாளம்
- கினி - பீடை
- கிண்ணம் - வட்டில், கிண்ணி
- கின்னம் - கிளை, துன்பம்
- குணி - வில், ஊமை
- குனி - குனிதல், வளை
- குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
- குனித்தல் - வளைதல்
- குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
- குனிப்பு - வளைப்பு, ஆடல்
- கேணம் - செழிப்பு, மிகுதி
- கேனம் - பைத்தியம், பித்து
- கேணி - கிணறு
- கேனி - பித்துப் பிடித்தவர்
- கோண் - கோணல், மாறுபாடு
- கோன் - அரசன்
- சாணம் - சாணைக்கல், சாணி
- சானம் - அம்மி, பெருங்காயம்
- சுணை - கூர்மை, கரணை
- சுனை - நீரூற்று
- சுண்ணம் - வாசனைப்பொடி
- சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
- சேணம் - மெத்தை
- சேனம் - பருந்து
- சேணை - அறிவு
- சேனை - படை
- சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
- சோனம் - மேகம்
- சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
- சோனை - மழைச்சாரல், மேகம்
- தண் - குளிர்ச்சி
- தன் - தன்னுடைய
- தணி - தணித்தல்
- தனி - தனிமை
- தாணி - தான்றிமரம்
- தானி - இருப்பிடம், பண்டசாலை,
- தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
- தானு - காற்று
- திணை - ஒழுக்கம், குலம்
- தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப்பயிர்
- திண்மை - உறுதி
- தின்மை - தீமை
- திண் - வலிமை
- தின் - உண்
- துணி - துணிதல், கந்தை
- துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
- தெண் - தெளிவு
- தென் - தெற்கு, அழகு
- நண்பகல் - நடுப்பகல்
- நன்பகல் - நல்லபகல்
- நணி - அணி (அழகு)
- நனி - மிகுதி
- நாண் - வெட்கம், கயிறு
- நான் - தன்மைப் பெயர்
- நாணம் - வெட்கம்
- நானம் - புனுகு, கவரிமான்
- பணி - வேலை, கட்டளையிடு
- பனி - துன்பம், குளிர், சொல், நோய்
- பணை - முரசு, உயரம், பரந்த
- பனை - ஒருவகை மரம்
- பண் - இசை
- பன் - அரிவாள், பல
- பண்ணை - தோட்டம்
- பன்னை - கீரைச்செடி
- பண்ணுதல் - செய்தல்
- பன்னுதல் - நெருங்குதல்
- பண்ணி - செய்து
- பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
- பண்மை - தகுதி
- பன்மை - பல
- பணித்தல் - கட்டளையிடுதல்
- பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
- பட்டணம் - நகரம்
- பட்டினம் - கடற்கரை நகர்
- பாணம் - நீருணவு
- பானம் - அம்பு
- புணை - தெப்பம்
- புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
- புண் - காயம்
- புன் - கீழான
- பேணம் - பேணுதல்
- பேனம் - நுரை
- பேண் - போற்று, உபசரி
- பேன் - ஓர் உயிரி
- மணம் - வாசனை, திருமணம்
- மனம் - உள்ளம், இந்துப்பு
- மணை - மரப்பலகை, மணவறை
- மனை - இடம், வீடு
- மண் - தரை, மண்வகை
- மன் - மன்னன், பெருமை
- மண்ணை - இளமை, கொடி வகை
- மன்னை - தொண்டை, கோபம்
- மாணி - அழகு, பிரம்மசாரி
- மானி - மானம் உடையவர்
- மாண் - மாட்சிமை
- மான் - ஒரு விலங்கு
- முணை - வெறுப்பு, மிகுதி
- முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை
- வணம் - ஓசை
- வனம் - காடு, துளசி
- வண்மை - வளப்பம், கொடை
- வன்மை - உறுதி, வலிமை
- வண்ணம் - நிறம், குணம், அழகு
- வன்னம் - எழுத்து, நிறம்
- வாணகம் - அக்கினி, பசுமடி
- வானகம் - மேலுலகம்
- வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
- வானம் - ஆகாயம், மழை
- வாணி - கலைமகள், சரஸ்வதி
- வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
- அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
- அழகு - வனப்பு
- அளகு - சேவல், பெண்கூகை
- அலகம் - திப்பிலி
- அளகம் - வெள்ளெருக்கு, நீர்
- அலகை - கற்றாழை, பேய்
- அளகை - அளகாபுரி, பெண்
- அழம் - பிணம்
- அலம் - கலப்பை
- அளம் - உப்பு
- அலத்தல் - அலட்டல், அலைதல்
- அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
- அலவன் - ஆண்நண்டு
- அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
- அழி - அழித்துவிடு
- அலி - பேடி, காகம், விருச்சிகராசி
- அளி - கருணை, கள், வண்டு
- அல்லல் - துன்பம்
- அள்ளல் - வாரி எடுத்தல்
- அழை - கூப்பிடு
- அலை - கடல், நீரலை, அலைதல்
- அளை - தயிர், நண்டு, புற்று
- அவல் - பள்ளம், உணவுப் பொருள்
- அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
- அல் - இரவு
- அள் - அள்ளி எடு, நெருக்கம்
- உலவு - நட
- உளவு - ஒற்று
- உழவு - கலப்பையால் உழுதல்
- உழி - இடம், பொழுது
- உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
- உலு - தானியப் பதர்
- உழு - நிலத்தை உழு
- உளு - உளுத்துப் போதல்
- உலை - கொல்லன் உலை, நீருலை
- உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
- உளை - பிடரி மயிர், சேறு, தலை
- உழுவை - புலி
- உளுவை - மீன்வகை
- எல் - கல், மாலை, சூரியன்
- எள் - எண்ணெய்வித்து, நிந்தை
- எலு - கரடி
- எழு - எழுந்திரு, தூண்
- ஒலி - சப்தம், நாதம், காற்று
- ஒழி - அழி, தவிர், கொல், துற
- ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
- ஒல் - ஒலிக்குறிப்பு
- ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
- கலகம் - போர், அமளி, இரைச்சல்
- கழகம் - சங்கம், கூட்டமைப்பு
- கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
- களங்கம் - குற்றம், அழுக்கு
- கலி - கலியுகம், பாவகை, சனி
- கழி - கோல், மிகுதி, உப்பளம்
- களி - மகிழ்வு, இன்பம்
- கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
- கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
- களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
- கல் - மலை, பாறை, சிறுகல்
- கள் - மது, தேன்
- கலம் - கப்பல், பாத்திரம்
- களம் - இடம், போர்க்களம், இருள்
- காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
- காளி - துர்க்கை, மாயை
- காழி - சீர்காழி (ஊர்)
- காலை - பொழுது, விடியற்பொழுது
- காளை - காளைமாடு, இளைஞன்
- காலம் - பொழுது, நேரம்
- காளம் - எட்டிமரம், சூலம்
- கிலி - அச்சம், பயம்
- கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
- கிளி - பறவை, வெட்டுக்கிளி
- கிழவி - முதியவள், மூதாட்டி
- கிளவி - சொல், மொழி
- குலி - மனைவி
- குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
- குளி -நீராடு
- குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
- குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
- குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
- குழை - குண்டலம், குழைந்துபோதல்
- குலவி - மகிழ்ந்திருத்தல்
- குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
- குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
- குலிகம் -சிவப்பு, இலுப்பை
- குளிகம் -மருந்து, மாத்திரை
- குவலை -துளசி, கஞ்சா
- குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்
- கூலம் - தானியம், கடைத்தெரு
- கூளம் - குப்பை
- கூலி - ஊதியம்
- கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
- கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
- கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
- கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
- கொலை - கொல்லுதல்
- கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
- கொல்லாமை - கொலை செய்யாமை
- கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
- கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
- கொள்ளி - கொள்ளிக்கட்டை
- கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
- கொள்ளை - திருடுதல், மிகுதி
- கோலம் - அழகு, அலங்காரம்
- கோளம் - உருண்டை, வட்டம்
- கோலை - மிளகு
- கோழை - வீரமற்றவன், கபம்
- கோளை - குவளை, எலி
- கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
- கோள் - கிரகம்
- கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
- கோழி - உறையூர், விட்டில், பறவை
- கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
- சலம் - நீர், சிறுநீர், குளிர்
- சளம் - பொய், துன்பம், வஞ்சனை
- சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
- சாளை - கடல்மீன்
- சாழை - குடிசை, குச்சு
- சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
- சுளித்தல் - முறித்தல், சினத்தல்
- சூலை - வயிற்று நோய்
- சூளை - செங்கல் சூளை
- சூல் - கர்ப்பம்
- சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
- சூள் - சபதம்
- சேல் - மீன்
- சேள் - மேலிடம்
- சோலி - ரவிக்கை, காரியம்
- சோழி - பலகரை
- சோளி - கூடைவகை
- தவளை - ஓர் உயிரி
- தவலை - பாத்திரம்
- தலம் - இடம், பூமி
- தழம் - தைலம்
- தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு
- தழை - தாவர உறுப்பு
- தலை - மண்டை
- தளை - விலங்கு
- தாலம் - உலகம், தேன்
- தாளம் - இசைக்கருவி, ஜதி
- தாலி - மங்கலநாண்
- தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
- தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு
- தாழ் - தாழ்தல், குனிதல்
- தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.
- துலக்கம் - ஒளி, தெளிவு
- துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
- துலம் - கோரை, கனம்
- துளம் - மாதுளை, மயிலிறகு
- துலி - பெண் ஆமை
- துழி - பள்ளம்
- துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு
- துலை - ஒப்பு, கனம்
- துளை - துவாரம், வாயில்
- தூலி - எழுதுகோல், எழுத்தாணி
- தூளி - புழுதி, குதிரை
- தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
- தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்
- தெல் - அஞ்சுதல்
- தெள் - தெளிவான
- தோலன் - அற்பன்
- தோழன் - நண்பன்
- தோலி - பிசின், ஒருவகை மீன்
- தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
- தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
- தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
- தோள் - புயம், வீரம்
- நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
- நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
- நலி - நோய்
- நளி - குளிர்ச்சி, பெருமை
- நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
- நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
- நல் - நல்ல
- நள் - இரவு, நடு, நள்ளிரவு
- நாலம் - பூவின் காம்பு
- நாழம் - இழிவுரை, வசவு
- நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
- நாலி - முத்து, கந்தை ஆடை
- நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
- நாளி - கல், நாய்
- நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
- நாழிகை - வட்டம், கடிகாரம்
- நால் - நான்கு
- நாழ் - குற்றம், செருக்கு
- நாள் - காலம், திதி
- நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
- நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
- நீல் - நீலம், காற்று
- நீள் - நீளம், ஒளி
- பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
- பழம் - கனி, முதுமை
- பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
- பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
- பலி - பலியிடுதல், பலியுயிர்
- பழி - குற்றம்
- பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
- பாழ் - வீண், வெறுமை
- பீழை - துன்பம்
- பீளை - கண் அழுக்கு
- புலி - காட்டு விலங்கு
- புளி - புளியமரம், புளியங்காய்
- புலை - புலால், ஊன், கீழ்மை
- புழை - துளை, வாயில், நரகம்
- புகல் - அடைக்கலம்
- புகழ் - பெருமை
- புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
- புள் - பறவை
- பூலம் - புற்கட்டு
- பூளம் - பூவரசு
- பூழை - துவாரம், கோபுரவாயில்
- பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
- பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
- பாழி - கொடுத்தல், ஈதல்
- பாளி - வரப்பு, எல்லை
- பாலிவு - அழகு, நிறைவு
- பாழிவு - பொழிதல், மேன்மை
- போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
- போளி - இனிப்புப் பண்டம்
- பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
- பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்
- மலம் - அழுக்கு, பாவம்
- மழம் - இளமை, குழந்தை
- மலை - குன்று, பொருப்பு, வெற்பு
- மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
- மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
- மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
- மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
- மாளிகை - அரண்மனை, கோயில்
- மாலை - அந்திப்பொழுது, பூமாலை
- மாழை - மயக்கம், இளமை, அழகு
- மாளை - புளியம்பட்டை
- மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
- மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
- முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
- முழை - குகை
- முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
- முழி - விழி (விழித்தல்)
- முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
- மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
- மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
- மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
- மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
- மெல்ல - மென்று தின்பது
- மெள்ள - மெதுவாக
- மாலி - மொளலி கிரீடம்
- மாழி - மேழி, கலப்பை
- மாளி - துணிமூட்டை
- வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
- வளம் - வளமை, அழகு
- வலவன் - திருமால்
- வளவன் - சோழன், வேளாளன்
- வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
- வளன் - செழுமை, வளப்பன்
- வழப்பம் - வழக்கம், இயல்பு
- வளப்பம் - வளமை, செழிப்பு
- வலி - நோய், வலிமை, துன்பம்
- வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
- வளி - காற்று
- வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
- வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
- வளை - கை வளையல், எலி வளை
- வல் - வலிமை, விரைவு, திறமை
- வள் - ஒலிக்குறிப்புச் சொல்
- வல்லம் - வாழை, ஓர் ஊர்
- வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை
- வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
- வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்
- வலு - வலிமை, பலம், பற்று
- வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
- வளு - இளமை, இளைய
- வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
- வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
- வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
- வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
- வாழை - வாழைமரம்
- வாளை - வாளை மீன்
- வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
- வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
- வாள் - போர்வாள், நீண்டகத்தி
- விலா - விலா எலும்பு
- விழா - திருவிழா, கொண்டாட்டம்
- விளா - இளமை, வெண்மை, நிணம்
- விழி - கண், கருவிழி
- விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று
- விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
- விழை - விரும்பு, ஆசைப்படு
- விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
- விலக்கு - விலக்கி விடு, தவிர்
- விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
- விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
- விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
- வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
- வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
- வேலம் - வேலமரம், தோட்டம்
- வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
- வேல் - வேலாயுதம்
- வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
- வேலை - பணி, கடல்
- வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
- அர - பாம்பு
- அற - தெளிய, முற்றுமாக
- அரவு - பாம்பு
- அறவு - அறுதல், தொலைதல்
- அரம் - ஒரு கருவி
- அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
- அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்
- அறி - அறிந்துகொள்
- அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
- அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
- அரன் - சிவன்
- அறன் - தர்மம், அறக்கடவுள்
- அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
- அறிவை - அறிவாய்
- அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை
- அறுகு - குறைந்து போதல்
- அக்கரை - அந்தக் கரை
- அக்கறை - ஈடுபாடு
- அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
- அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
- அரைதல் - தேய்தல்
- அறைதல் - அடித்தல், சொல்லுதல்
- அப்புரம் - அந்தப் பக்கம்
- அப்புறம் - பிறகு
- அர்ப்பணம் - உரித்தாக்குதல்
- அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
- அரு - உருவமற்றது
- அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு
- அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
- அறுமை - நிலையின்மை, ஆறு
- ஆரு - குடம், நண்டு
- ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
- ஆர - நிறைய, அனுபவிக்க
- ஆற - சூடு ஆற (குறைய)
- ஆரல் - ஒருவகை மீன்
- ஆறல் - சூடு குறைதல்
- இரத்தல் - யாசித்தல்
- இறத்தல் - இறந்துபோதல், சாதல்
- இரகு - சூரியன்
- இறகு - சிறகு
- இரக்கம் - கருணை
- இறக்கம் - சரிவு, மரணம்
- இரங்கு - கருணைகாட்டு
- இறங்கு - கீழிறங்கி வா
- இரவம் - இரவு
- இறவம் - இறால் மீன்
- இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
- இறவி - இறத்தல்
- இரவு - இரவு நேரம், யாசித்தல்
- இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
- இரை -ஒலி, உணவு
- இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
- இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
- இறு - ஒடி, கெடு, சொல்லு
- இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
- இறும்பு - வண்டு, சிறுமலை
- இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
- இறுப்பு - வடிப்பு
- இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
- இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
- இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
- இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
- இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்
- இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
- உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
- உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
- உரவோர் - அறிஞர், முனிவர்
- உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
- உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
- உறி - உறிவெண்ணெய், தூக்கு
- உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
- உறு - மிகுதி
- உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்
- உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
- உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
- உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
- உரைப்பு - தங்குதல், தோய்தல்
- உறைப்பு - காரம், கொடுமை
- உரையல் - சொல்லல்
- உறையல் - மாறுபாடு, பிணக்கு
- உரிய - உரிமையான
- உறிய - உறிஞ்ச
- ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
- ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
- ஊரு - அச்சம், தொடை
- ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
(ண, ன பொருள் வேறுபாடு)
- அணல் - தாடி, கழுத்து
- அனல் - நெருப்பு
- அணி - அழகு
- அனி - நெற்பொறி
- அணு - நுண்மை
- அனு - தாடை, அற்பம்
- அணுக்கம் - அண்டை, அண்மை.
- அனுக்கம் - வருத்தம், அச்சம்
- அணை - படுக்கை, அணைத்துக்கொள்ளுதல்
- அனை - அன்னை, மீன்
- அணைய - சேர, அடைய
- அனைய - அத்தகைய
- அண்மை - அருகில்
- அன்மை - தீமை, அல்ல
- அங்கண் - அவ்விடம்
- அங்கன் - மகன்
- அண்ணம் - மேல்வாய்
- அன்னம் - சோறு, அன்னப்பறவை
- அண்ணன் - தமையன்
- அன்னன் - அத்தகையவன்
- அவண் - அவ்வாறு
- அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
- ஆணகம் - சுரை
- ஆனகம் - துந்துபி
- ஆணம் - பற்றுக்கோடு
- ஆனம் - தெப்பம், கள்
- ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
- ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
- ஆணேறு -ஆண்மகன்
- ஆனேறு - காளை, எருது
- ஆண் - ஆடவன்
- ஆன் - பசு
- ஆணை - கட்டளை, ஆட்சி
- ஆனை - யானை
- இணை - துணை, இரட்டை
- இனை - இன்ன, வருத்தம்
- இணைத்து - சேர்த்து
- இனைத்து - இத்தன்மையது
- இவண் - இவ்வாறு
- இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
- ஈணவள் - ஈன்றவள்
- ஈனவள் - இழிந்தவள்
- உண் - உண்பாயாக
- உன் - உன்னுடைய
- உண்ணல் - உண்ணுதல்
- உன்னல் - நினைத்தல்
- உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
- உன்னி - நினைத்து, குதிரை
- ஊண் - உணவு
- ஊன் - மாமிசம்
- எண்ண - நினைக்க
- என்ன - போல, வினாச்சொல்
- எண்ணல் - எண்ணுதல்
- என்னல் - என்று சொல்லுதல்
- எண்கு - கரடி
- என்கு - என்று சொல்லுதல்
- ஏண் - வலிமை
- ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
- ஏணை - தொட்டில்
- ஏனை - மற்றது
- ஐவணம் - ஐந்து வண்ணம்
- ஐவனம் - மலை நெல்
- ஓணம் - ஒரு பண்டிகை
- ஓனம் - எழுத்துச்சாரியை
- கணகம் - ஒரு படைப்பிரிவு
- கனகம் - பொன்
- கணப்பு - குளிர்காயும் தீ
- கனப்பு - பாரம், அழுத்தம்
- கணி - கணித்தல்
- கனி - பழம், சுரங்கம், சாரம்
- கணம் - கூட்டம்
- கனம் - பாரம்
- கண்ணன் - கிருஷ்ணன்
- கன்னன் - கர்ணன்
- கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
- கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு இராசி
- கணை - அம்பு
- கனை - ஒலி, கனைத்தல்
- கண் - ஓர் உறுப்பு
- கன் - கல், செம்பு, உறுதி
- கண்று - அம்பு
- கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை
- கண்ணல் - கருதல்
- கன்னல் - கரும்பு, கற்கண்டு
- காண் - பார்
- கான் - காடு, வனம்
- காணம் - பொன், கொள்
- கானம் - காடு, வனம், தேர், இசை
- காணல் - பார்த்தல்
- கானல் - பாலை
- கிணி - கைத்தாளம்
- கினி - பீடை
- கிண்ணம் - வட்டில், கிண்ணி
- கின்னம் - கிளை, துன்பம்
- குணி - வில், ஊமை
- குனி - குனிதல், வளை
- குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
- குனித்தல் - வளைதல்
- குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
- குனிப்பு - வளைப்பு, ஆடல்
- கேணம் - செழிப்பு, மிகுதி
- கேனம் - பைத்தியம், பித்து
- கேணி - கிணறு
- கேனி - பித்துப் பிடித்தவர்
- கோண் - கோணல், மாறுபாடு
- கோன் - அரசன்
- சாணம் - சாணைக்கல், சாணி
- சானம் - அம்மி, பெருங்காயம்
- சுணை - கூர்மை, கரணை
- சுனை - நீரூற்று
- சுண்ணம் - வாசனைப்பொடி
- சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
- சேணம் - மெத்தை
- சேனம் - பருந்து
- சேணை - அறிவு
- சேனை - படை
- சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
- சோனம் - மேகம்
- சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
- சோனை - மழைச்சாரல், மேகம்
பாணம் என்றால் அம்பு. பானம் என்றால் நீருணவு என்று இருக்கவண்டும். தங்கள் பதிவில்
ReplyDeleteஇடம் மாறி வந்திருக்கிறது.