Pages

Friday, 3 April 2015

அழகிய பெரியவன் கதைகளில் மொழிநடை


அழகிய பெரியவன் கதைகளில் மொழிநடை




 முனைவா் பெ. தமிழரசன்,
உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி,
தோக்கம்பட்டி, தருமபுரி - 636 705.அலைபேசி.8012453288.(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, 9488417411, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)

இலக்கியங்கள்  காலத்தைப் பின்னணியாகக் கொண்டு தோற்றம் பெறுகின்றன. படைப்புகள் கட்டமைக்கும் சொற்கள், படைப்பாளாின் சுற்றுச்சூழல், வாழ்க்கை அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள், மனத்தைப் பாதித்த நிகழ்வுகள், சமுதாய மாற்றங்கள் முதலானவற்றின் தாக்கத்தாலும் தனித்தக் கூறுகளைக் கொண்ட நடையாக மாற்றம் பெறுகிறது. இலக்கியம் வெற்று வெளியில் தோன்றுவதில்லை. அது காலத்தைச் சார்ந்து இயங்குகிறது என்பதால், இலக்கியங்கள் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தன்னில் பதிவு செய்திருக்கின்றன. அதோடு மொழிநடையும் இன்றியமையாததாகும். படைப்பாளா் அழகிய பெரியவனும் தம் படைப்புகளில் பல வகையான மொழிநடையைக் கையாண்டுள்ளார்.

நடை - விளக்கம்
படைப்பாளன் தான் எடுத்துக் கொண்ட படைப்பிற்குக் கருத்தைத் தவிர, சுவை ஊட்டும் பண்புகளையும் துணையாகக் கொள்கிறான்.  அச்சுவையு+ட்டும் பண்புகளை வாசகா்கள் அனுபவித்துப் படிக்கின்றபோது, படைத்த படைப்பு வெற்றி பெறுகிறது. அத்தகைய நடை நலன்களை மொழி நடையாக ஆய்வுலகிற்கு எடுத்துரைக்கின்றனா்.

தான் பெற்ற உணா்ச்சிகளைப் பிறரும் பெறுவதற்குக் கவிஞன் சில உத்திகளைக்் கையாளுகின்றான்.  கற்பனை, சொல்நயம், ஒலிநயம், யாப்பு, அணி, அழகுகள், குறிப்பு, சுவை பொருள்கள் போன்றன அத்தகைய உத்திகள். இவற்றுள் சிலவேனும் பொருந்தி விளங்கும் படைப்பையே பலரும் பாராட்டுவா். இத்துணை அழகுத் திறன்கள் அனைத்தையும் இயல்பாகப் பொருந்தி அமைக்கும் கவின் கலையே இலக்கியக் கலையாகும்”  (நடையியல் சிந்தனைகள், பக்.1) என்று இ.சுந்தரமூர்த்தி இலக்கியத்தில் சுவையு+ட்டும் பண்புகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார்.
தமிழகராதி, நடை என்பதற்கு இருபத்து இரண்டு பொருள்களைத் தருகிறது.  அவை,
காலாற் செல்கை, கிரகம் முதலியவற்றின் கதி, பிரயாணம், அடிவைக்கும் கதி, வழி, வாசல், இடைகழி, கப்பலேறும் வழி, ஒழுக்கம், வழக்கம், பாஷையின்போக்கு, வாசிப்பினோட்டம், இயல்பு, அடி, கூத்து, தொழில், செல்வம், ஒழுக்க நூல், நித்திய பு+சை, கோயில், தடவை, நீண்ட நாள்என்பனவாகும்.

மொழி, வாழ்வியல் சூழலில் பயன்படுத்துவதற்கும் இலக்கியங்களில் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.  அன்றாட வாழ்வில் ஒரு மனிதன் மொழியைப் பயன்படுத்தும் முறைக்கும் இலக்கியப் படைப்பாளி மொழியைப் பயன்படுத்தும் முறைக்கும் வேறுபாடு உண்டு” (நடையியல், பக்.19) என்று  ஜே. நீதிவாணன் குறிப்பிடுகின்றார்.

பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியா், நடை என்னும் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கின்றார். இத்தகைய நடையின் பழமையை,

                                “உரைவகை நடையே நான்கென மொழிப
                                ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை” (தொல்-பொருள்.செய்.நூ-485)
என்னும் சான்றால் அறிய முடிகிறது.

தற்காலத்தில் வட்டாரமொழியில் படைப்புகளை எழுதிவருபவா் அழகிய பெரியவவன். அரவிந்தன் என்னும் இயற்பெயா் கொண்ட இவா் வேலூர் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியில் படைப்புகளை எழுதியுள்ளார். தான் வாழும் சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள் அனுபவிக்கின்ற வாழ்வியல் சூழல்கள் பலவற்றையும் தன் படைப்புகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றார். அவைகளை பின்வரும் சான்றுகளால் அறியமுடிகிறது.

பேச்சு மொழிநடை

                பேச்சு மொழிநடை வழக்கு மொழியை உடையதாகும். அழகிய பெரியவவன் வட்டாரவழக்கு நடையைப் பயன்படுத்தி படைப்புகளைத் தந்திருக்கிறார். வேலூர் வட்டார வழக்கு மொழியை நன்கு அறிந்தவா். அதனால், தான் சார்ந்த அப்பகுதியின் வழக்கைப் படைப்புகளில் எடுத்தாண்டிருக்கிறார்இதனை

இப்படியே ஒரு வருசம் களிஞ்சிச்சாம். பகவான் கண்ணு தொறந்தானாம். ஒரு நாளு திடீர்னு பாத்தா கௌக்குப் பக்கத்திலேந்து மானம் ரொப்பி போகுதாம் பாத்துக்க. கும்புகும்பா மேக்க பாத்த மாதிரி அண்டரண்டப் பச்சிங்க. வளிமுட்டுக்கும் பந்துலு போட்ட மாதிரி நெழலு உறைந்துச்சாம் அதுங்ககீள பாத்துக்க” (தகப்பன் கொடி, பக்.8).

இப்பகுதியில் திறந்தானாம்என்பது தொறந்தானாம்என்றும் பார்த்தாஎன்பது பாத்தாஎன்றும் நிரம்பிஎன்பது ரொப்பிஎன்றும் கூட்டம்’ ‘கூட்டமாஎன்று கும்பு’ ‘கும்பாஎன்றும் வானம் முழுதும் பந்தல் போட்டது மாதிரிஎன்பது வளிமுட்டுக்கும் பந்தல் போட்ட மாதிரிஎன்னும் வழக்குச் சொற்களாக மாற்றம் கண்டிருப்பதை அறியமுடிகிறது.

உரையாடல் நடை

                புனைகதைகளில் உரையாடல் தவிர்க்க இயலாமல் இடம்பெறும் கூறாகும்.  படைப்பாளா் தானாகக் கதை கூறிச் செல்லும் முறையில் தன் கூற்றாக அமையும் செய்திகள் தவிர பாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே புனைகதைப் படைப்புகள் பெரும்பாலும் அமைக்கப்படுவது உண்டு.  அழகிய பெரியவவன் தன் புனைகதைப் படைப்புகளில் செறிவான உரைநடையை அமைத்திருக்கின்றார். அழகிய பெரியவவன் அமைத்திருக்கும் உரையாடல்கள், சூழல்களுக்குத் தக்கவாறு சில சில பொருள் முடிவுகளைக் கொண்டிலங்குகின்றன. தான் கதை கூறிச் செல்லும் முறையில் உரைநடையை அமைத்திருக்கின்றார். வாழ்க்கையின் மெய்ப்பாடுகளான மகிழ்ச்சி. சினம், இயலாமை, நகைச்சுவை முதலான எல்லா உணா்வு நிலைகளும் உரையாடல்களில் இழையோடுகின்றன. பெண்குழந்தை பிறந்தால் வறுமைப்பட்ட குடும்பங்களிலும, வளமான குடும்பங்களிலும் பாரமாகவே நினைக்கிறார்கள்.  பெண்குழந்தை கருவில் வளா்கிறது என்று தொிந்ததும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் கணவனுக்கும், அவன் மனைவிக்குமான உரையாடலில் கோப உணா்வும், இயலாமையும், அருவருப்பும் இழையோடுவதை  பின்வரும் சான்றால் அறியமுடிகிறது.  இதனை,
                “என் விருப்பத்தை எதிர்பார்க்காத முன் தீர்மானத்தோடு
                தானே இதெல்லாம் செஞ்சீங்க?”
                “என்ன பேசறே நீ?”
                “வேணும்னா பெத்துக்க, இல்லேன்னா கலைச்சுக்க
     “பெண்ணு வேணும்னா பெண்ணா, ஆணு வேணும்ணா ஆணா,
     கலைச்சிக் கலைச்சி தோ்ந்தெடுக்க, திட்டமிட்டப்படி பிரசவிக்க,
     கருத்தாிக்கஎன்னை என்னாண்ணு நெனச்சீங்க……தேவையில்லாத
                கிளைகளை வெட்டி கவ்வாத்து பண்ற மாதிரியா இது?”
இங்க வந்து பேசறியா?”
ஆமா பேசுவேன்.  இத ஆணா இருந்தா விட்டிருப்பீல்ல?
சத்தமா பேசுவேன்”.
எனக்கு அழுகை முட்டுவது போலிருக்கிறது.  உடம்பு நடுங்குகிறது.
கிருத்தி, வேணாம்.  வேணாம் கிருத்தி. பேசாத…..”
எனக்கு வேகம் காட்டி துடிக்கும் இதயம் விழுந்து விடுவது போலிருக்கிறது. தொண்டை அடைக்கிறது. ஆனாலும் பேசவேண்டுமென்று வருகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.  ஏற்கனவே பேசத் துவங்கி விட்டிருக்கிறேன்.
இது வலி உனக்குப் புரியாது இந்த வலி” (அழகிய பெரியவன் கதைகள், பக்.90).

இவ்வுரையாடல் கோபம், மனம் தாங்காத துன்பநிலை, இயலாமை என எல்லா உணா்வுகளையும் வெளிக்கொண்டு வருவதாக  அமைகிறது. இரு பாத்திரங்கள் மட்டும் பேசுவதாக இவ் உரைநடை அமைகிறது.  பல பாத்திரங்கள் பேசுவது போன்ற உரையாடலையும் அழகிய பெரியவவன் அமைத்திருக்கிறார். இரண்டு, மூன்று, மூன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை உரையாடச் செய்திருக்கிறார். உரையாடல்கள் கதைக்களத்தில் செறிவினை அதிகாித்து, புனைகதை படிப்பவா்களுக்கு பாத்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை மிகுவித்திருக்கிறார்

நனவோடை உத்தி

                அழகிய பெரியவவனின் புதினங்களிலும் சிறு கதைகளிலும் பின்னோக்கு உத்தியைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளார். கதை நிகழ்ச்சிகளைக் கூறும் போக்கில் பாத்திரத்தின் வாழ்வியல் பின்னணியை ஆழமான நோக்கில் கதைகளில் தெளிவுப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அழகிய பெரியவவன் தன் கதைகளில் பின்னோக்கு உத்தியில் தெளிவான அணுகுமுறையில் பொருத்தமான காட்சிகளை இணைத்துக் காட்டியிருக்கின்றார்.
                ‘திசையெங்கும் சுவா்கள் கொண்ட கிராமம்கதைத்தொகுப்பில் இடம்பெறும் தீட்டுஎன்னும் கதையில் காமாட்சி, கோவிந்தன் என்னும் இருவாின் இளமைக் கால வாழ்க்கையும் பின்னோக்கு உத்தியின் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது. கதைக்களத்தில்் குடும்ப வாழ்வில் இருப்பவா்களாக முதலில் காட்டப்பட்டு, எதிர்பாராத திருப்பம் ஒன்றின் மூலம் இளமைக்காலம் பின்னோக்கு உத்தி முறையின் வாயிலாக எடுத்துக்காட்டப்படுகிறது.

 “கோவிந்தன், தெருவில் பேப்பா் பொறுக்கிக் கொண்டிருந்தவன்.  குப்புபட்டிணம் வந்த புதுசு. தொழிலுக்குப் போய்விட்டு விடியற்காலமாய் வீட்டுக்குப் போக  வந்து கொண்டிருந்தாள். பெரியவ சா்ச் பக்கத்தில், நடைபாதையில் ஒரு பையன்  விழுந்து கிடந்தான். தூங்கிக் கொண்டிருக்கிறான் என்றுதான் முதலில் நினைத்தாள். அவன் விழுந்து கிடந்த நிலை அப்படியில்லை. கவிழ்ந்து கிடந்தான். கிட்டத்தில் போய் புரட்டினாள். முகம் வீங்கி, உதடுகள் தடித்துக் கிடந்தன. கைகால்கள் காய்ப்பேறி சொறசொறவென்று தொிந்தன…” (திசையெங்கும் சுவா்கள் கொண்ட கிராமம், பக்.35).

என நீளும் பகுதி பின்னோக்கு நிலையில் கோவிந்தனின் இளமைக் காலத்தை வாசகா்களுக்கு அறிமுகம் செய்வதாக அமைகிறது. அழகிய பெரியவவன் பின்னோக்கு உத்தி முறையைச் சாியான களத்தில் பயன்படுத்தியிருக்கின்றார்பின்னோக்கு உத்தி கதைக் களத்திற்கு வலிமை சோ்ப்பதுடன் கதைப்போக்கில்  செறிவையும் ஊட்டுவதாக அமைகிறது.

தனிக்கூற்று

                புனைக் கதைகளில் தனிக்கூற்று முக்கியமான கதைத் திருப்பத்தை உணா்த்தப் பயன்படுகிறது. அது ஆசிரியா் பேசுவதாகவும் பாத்திரங்கள் பேசுவதாகவும் அமைவதுண்டு. அழகிய பெரியவவனின் படைப்புகளில் ஆசிரியாின் குரல் தெளிவான நோக்கில் தம் மனநிலையை பதிவு செய்கிறது.  பாத்திரத்தின் பிரதிநிதியாக இருந்து கூறும் கூற்றுகள் கருத்துகள் புனைகதைகளின் போக்கை அறிந்துகொள்ள உதவுகிறது. 

தகப்பன்கொடி நாவலின் இறுதியில் அம்மாசியின் வாழ்நாள் முடிவுக்கு வரும் நிலையில் அமையும் பகுதி,“தீடிரென்று அவனை ஒரு கை தூக்கிக்கொண்டு பறந்தது. கோழிக்குஞ்சைப் போலத் தான் தூக்கிச் செல்லப்படுவதாய் நினைத்தான் அம்மாசி.  அதன் தொடுகை மிருதுவாக இருந்தது. இறக்கையடிப்புகள் மென்மையாக வீசிவிடுவது போல அருகிலேயே அவனை வருடின. மண்ணில் கால் பரவ விடாமல் சமவெளிகளுக்கும் மலைமுகடுகளுக்கும் நீர்ப்பரப்புகளுக்கும் மேலாய்க் கடந்து பறந்தது அது.  மண் தேலியிருக்கிற திட்டுகளில் காலை ஊன்றி விடலாம் என்று அவன் முயற்சிக்கும் போது அது இன்னும் மேலாய் காற்றில் எழுந்தது” (தகப்பன் கொடி, பக.46) என்றவாறாக அமைகிறது.

உவமையும் உருவகமும்

                அழகிய பியவனின் படைப்புகளில் உவமைகளும், உருவகங்களும் இயல்பாக இழையோடுகின்றன.
                உவமையும் உருவகமும் மரபுவழியிலான இலக்கியங்களுக்கு இனிமை தருவதுபோல புனை கதைகளுக்கும் வலுச்சோ்க்கின்றன. தம்் படைப்புகளில் இயல்பாகவே கதையின் போக்கில் உவமைகளையும் உருவகங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

 “வேட்டி தும்பைப் பு+ போல இருந்தது
 “பசை போன்ற மை எடுத்து வெளுக்கப் போகுமுன் வேட்டியிலே இட்ட ஒற்றைப் புள்ளிக்குறி வண்ணாங்குறி”  (தீட்டு, ப-ள்.78-79).

மேற்கண்ட உவமைகளில் இயல்பான எண்ண ஓட்டங்களில் உவமைகளைப் படைத்திருப்பதை அறியமுடிகிறது. 

குறியீடுகள்

                அழகிய பெரியவவன் தன் கதைகளை சிக்கலான களத்தில் படைத்துத் தந்திருக்கிறார். சிக்கலான சமுதாய நடைமுறைகளை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்கூற வேண்டும் என்னும் எண்ணமுடைய அவா் கதைத்தலைப்புகளையே குறியீடாகக் காட்டியிருப்பது சிறப்புக்குரியதாகும். தீட்டு, குறடு, திசையெங்கும் சுவா்கள் கொண்ட கிராமம் முதலான நூலின் தலைப்புகளே இதற்குச் சான்றாகும். சமுதாயம் எத்தனை வளா்ச்சியடைந்திருந்த போதும் சமுதாயத்தை விட்டுத் தீண்டாமைக் கொடுமைகள் அகன்றபாடில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் காலில் காலணி அணியக்கூடச் சுதந்திரம் இல்லாத சூழலில் வாழ்ந்து வந்ததையே குறடு கதையின் கருவாக்கி அக்கதையிலேயே அதே சமுதாயத்தில் மறுமலா்ச்சியை உண்டாக்கிக் காட்டுகிறார.் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் காலணியும் ஆடையும் எந்த அளவு தொலைவாக இருந்தன என்பதை பின் வரும் சான்று எடுத்துக்காட்டுகிறது.

வீரபத்திரன் தன் ஊரில் செருப்போ, சோடுகளோ போட்ட ஒரு காலையும் பார்த்ததில்லை. அவனுக்குச் சிறுவயது முதலே காலணிகளைப் பற்றிய அக்கறை இருந்து வந்தது. பாட்டி அவனைத் தன் வயிற்றுக்குள்ளே அணைத்துக் கிடத்திக்கொண்டு சொன்ன கதைகளில் செருப்புகள் வந்தபோது அவனுக்கு செருப்புகளைக் குறித்த ஈர்ப்பு இன்னும் கூடிப்போனது” (குறடு, பக்.169).

என்றவாறாக, குறடு  சிறுகதையில்  இடம்பெறும்  பகுதி  தாழ்த்தப்பட்டவா்களுக்குச் செருப்பு அணியும் உரிமை மறுக்கப்பட்டதைச் சுட்டுகின்றது. 

சொற்றொடா் அமைப்பு

                அழகிய பெரியவவன் தன்னுடைய படைப்புகளில் சிறுசிறு சொற்றொடா்களையும் நீண்ட தொடா்களையும் சூழல்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தியிருக்கின்றார். கதைப்போக்கில் கதை நிகழும் இடம், பாத்திரத்தின் தன்மை, சுற்றுச்சூழல், கதைக்கரு இவையனைத்தையும் மையமிட்டதாக அமையும் தொடரமைப்பு அழகிய பெரியவவன் படைப்புகளில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

சிறுசிறு தொடரமைப்பு

                அழகிய பெரியவவன் தான் பயன்படுத்தியுள்ள சிறுசிறு தொடா்கள், சொல்ல வந்த செய்தியைக் கூறுவதுடன் சிறப்பான தொடா் முடிவையும் பெற்று விளங்குகின்றன.  இதனை,

நல்லானும் கிளியம்மாவும் எல்லா பண்டுவமும் செய்தார்கள்.  பு+ண்டு நசுக்கிக் கட்டு. எருக்கம்பால் அப்பு. உத்தாமணி இலையில் பற்று. வெற்றிலைப் பற்று.  அம்மாசிக்கே வெறுத்துப் போனது.  இரண்டு மூன்று வாரத்திற்குள் அம்மாசி ஒதுங்கிவிட்டான். சோறு தண்ணி இறக்கமில்லை.  விழுங்கினால் வலி பிய்த்தது.  ஊரிலே இருக்கிற பொன்னு வைத்தியன் முதற்கொண்டு சுற்றுப்பக்கமிருக்கிற எல்லா வைத்தியா்களிடமும் போய் குளிச்சம் மந்திரம் தீட்டுக்கழிப்பு எல்லாமே பார்த்தாகிவிட்டது.” (தகப்பன் கொடி, பக்.9) என்னும் சில உதாரணங்கள் விளங்்குகிறது.

நீண்ட தொடா்கள்

                நீண்ட தொடா்கள் விளக்க முறையில் அமைகின்றன.  ஒன்றைப் பற்றிய பன்முகமான சிந்தனைகளை விரித்துக் கூற, நீண்ட தொடா்கள் பயன்படுகின்றன.  அழகிய பெரியவவன் எளிமையான முறையில் நீண்ட தொடா்களைப் படைப்புகளில் கையாண்டிருக்கிறார்இதனை,

என்ன நாடகம் என்று சொல்லிவிட்டால் போதும் பஞ்சாலை, புஜபானை, முப்பாண்டம், தோள்கட்டை, கைக்கட்டை, கரககட்டம், சிகுருகுச்சி, இருமுடி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கதைகத்திகளுடன் வந்து விடுவார்கள்.
வேஷக்காரா்கள் தருமன், வியாசா், அர்ச்சுனன், கிருஷ்ணன், நாகேந்திரன், ரிஷி, இடியேந்திரன், ஈஸ்வரன், வேடன், ராட்சசன், ரதி, பேரண்டன், பிராமணன், மோகினி, கன்னி, யேலக்கன்னி, காளி, பேரண்டி, வேடுவச்சி, கட்டியங்காரன் என்று பிரித்தார்கள்.” (தகப்பன் கொடி, பக்.77)

இத்தொடா்கள் மூலம் அறிய முடியும்.

வட்டார வழக்குகள்்

அழகிய பெரியவவனின் படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சார்ந்து இயங்குவதன் காரணமாக அவா்கள் வழங்கும் மொழிகளே படைப்புகள் முழுமையும் இழையோடுகின்றன. அவ்வகையில் பின்வரும் வட்டார மொழிப் பதிவுகளை இனம் காண இயலும்.

 “பணியாட்கள் எவருமற்று இருந்த சாவடி, மாவட்ட அதிகாரியின் வருகையால் முகம் மாறிவிட்டது” “டேய், அதப் பார்ரா உங்க பன்னிங்க என்று திமிலோகப்பட்டது வகுப்பு” “டேய், பன்னி அடிச்சா ஒரு பங்கு எடுத்தாடா, காசு தந்திர்றேன” “என்னாவே நெத்தியில ஒண்ணுமில்லாம மூளியாட்டமா போற” “என்னா பேசிப்புட்டாஅண்ணனா இவன்இவஞ் சொியா இர்ந்தா இந்தப் பேச்சு வருமா? நா மானத்துக்கு மறக்கட்டிகினு, முடிஞ்சதெல்லாந்தான் செஞ்சனே” “ஜல்தி மூடுறா தாயோளி. நல்லா பொகல போட்டு அழுத்தி மூடு.” (குறடு, பக்.86)
                அழகிய பெரியவவன் தான் வாழ்கின்ற வேலூர் வட்டாரத்தில் பெரும்பான்மையும் மக்கள் பேசும் வழக்கு மொழிகளையே படைப்புகளில் எடுத்தாண்டிருக்கிறார் என்பது மேற்கண்ட சான்றுகளின் மூலம் புலனாகிறது.

பிறமொழிச் சொற்கள்

                அழகிய பெரியவவன் புனைகதைப் படைப்புகளில் பெரும்பாலும் மொழிக் கலப்பைத் தவிர்த்திருக்கிறார். இருப்பினும் ஆங்காங்கே ஆங்கிலச் சொற்களும் பயின்று வருகின்றன. சைக்கிள்இ ரிக்ஷாஇ பு+ட்ஸ்இ பஸ் ஸ்டாண்ட்இ பேப்பா்இ டாக்டா்கள், லாங்பஜார்இ ஜெயில்இ கான்வென்ட், பிளீஸ்இ இண்ட்டா்வியு+இ ஸ்கூல், ஆபீசா்் (திசையெங்கம் சுவா்கள் கொண்ட கிராமம், ப-ள்்.15-123) போன்றவை அதற்குச் சான்றுகளாகும்.

நாட்டுப்புறப்பாடல்கள் பயன்பாடுகள்

                வழக்காற்று மொழியில் இடம்பெறும் நாட்டுப்புறப்பாடல் வடிவங்களையும் அழகிய பெரியவவன் தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். அப்பாடல்கள் செயற்கையாக அமையாமல் இயற்கையாக மக்களின் வாழ்க்கைச் சூழலில்  அமைந்திருக்கின்றன.  தீட்டு தொகுப்பில் இடம் பெற்றுள்ள இப்பாடல் மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளப் பயன்படுகின்றன.

                                “உரியோ உரி உரியோ உரி
                                பனைமரத்துல பாச்ச
                                ஒங்கொம்மாண்ட தோச்ச
                                உரியோ உரி உரியோ உரி
                                மரக்காச் சாமாஆளு
                                மரக்காப்புள்ள பெத்தான்
                                உரியோ உரி உரியோ உரி
                                “அகிலோ பாமளமே
                                ஒயிலான மானினமே
                                அடியென் அஞ்சுகமே
                                பஞ்சவா்ண கொஞ்சுங்கிளி வாகனமே
                                ஆனாலும் பெண்ணரசி” (தீட்டு, ப-ள்.73-74).
என்றவாறாக அமையும் இருபாடல்களும் மக்களின் வாழ்வோடு இணைந்து வெளிப்படுவனவாகப் படைப்புகளால் அறியப்படுகின்றன. அழகிய பெரியவவனின் நடையில் இருக்கின்ற எளிமை அடித்தட்டு மக்களின் வாழ்வியலை விளக்கமாகக் கூறுவதாயமைகிறது.

குறிப்பு முரண்

                அழகிய பொயவன் உள்ளது உள்ளவாறே சமுதாயச் சூழல்களைக் கதைக் களத்தில் விளக்கிச் செல்லும்போது ஆழமான பொருள் உணா்த்தும் நிலையில் குறிப்பு முரண்களைக் கையாண்டுள்ளார். அம்மாசி தன்னுடைய நிலத்தை இழந்து வருந்தும் சூழலில் தான் பிறந்த ஊரைவிட்டு அபரஞ்சியின் ஊருக்குச் செல்ல நினைக்கிறான்.  அப்போது அவனுடைய அத்தையும் மாமாவும்,

ஒரு ஆத்தர அவசரத்துக்கு மூஞ்சியையும், ஒங்களையும் பாக்கணுமின்னா கூட எம்புட்டுத் தொலவு நடந்து வா்றதுஇங்கியே வந்துருங்க சாமி.  அந்தக் குப்பக்காட்டுல என்னா பொளச்சி சாதிக்கப் போறீங்க” (தகப்பன் கொடி, ப-ள்.11-12).

என்றவாறாக அம்மாசியிடம் கூறுவதன் உட்பொருள், இழந்த நிலத்தின் நினைவு வந்தால் நிம்மதியாக வாழமுடியாதுஎன்பதை உணா்த்துவதாய் அமைகிறது. 

முடிவுரை

அழகிய பொயவனின் படைப்புகள் இயல்பான வட்டார வழக்கு மொழிநடையைக் கொண்டிருக்கின்றன. வேலூர் வட்டாரத்தைச் சார்ந்த மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி, கதைகளில் பயின்று வந்திருக்கிறது. வட்டார வழக்கு நடை, உரையாடல் உத்திமுறை, நனவோடை உத்திமுறை, ஆசிரியாின் தனிக்கூற்று, உவமை, உருவகம், சொற்றொடா் அமைப்பு போன்றவற்றுடன் கதைச் சூழலுக்கு ஏற்ப பிறமொழிச் சொற்களும் கலந்து வந்துள்ளன. வட்டார வழக்கில் உள்ள நாட்டுப்புறப்பாடல்கள் படைப்பில் பாத்திரங்களின் தொழில் முறையை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பு முரண் போன்ற வகையிலான மொழிநடைகளை படைப்பாளா் தம் படைப்புகளில் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளமையும் மொழிநடையை சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment