Pages

Sunday, 1 November 2015

தொல்காப்பியப் பாடாண்திணையும் நால்வர் நான்மணிமாலையும்

தொல்காப்பியப் பாடாண்திணையும் நால்வர் நான்மணிமாலையும்

பேராசிரியர் அ. அறிவுநம்பி
புதுவைப்பல்கலைக்கழகம்

தமிழின் இலக்கண, இலக்கியங்கள் வளமை நிறைந்தவை. வாழ்வியல் செய்திகளை அவை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன. உலக மொழிகள் யாவும் எழுத்து, சொல் பற்றிய இலக்கண நுhல்களைப் பெற்றுள்ளன. ஆனால் தமிழின் தொல்காப்பியம் மட்டும் அவற்றுக்கப்பால் அகம், புறம் என அமையும் மக்கள் வாழ்வையும் முன்நிறுத்தும். சங்கப் பனுவல்கள் உட்படத் தமிழ் இலக்கியங்கள் யாவும் பெரும்பாலும் தொல்காப்பிய நெறிகளைப் பின்பற்றியுள்ளன. அவ்வழியில் தொல்காப்பியம் புறத்திணையில் பேசும் பாடாண்திணைக் கூறுகளைப் பிற்கால நுhலான நால்வர் நான்மணி மாலை என்ற நுhலில் பொருத்திக் காணும் முயற்சியே இந்த எழுத்துமுறை.
நால்வர் நான்மணிமாலை என்ற செய்யுள் நுhலை யாத்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். சோணசைலமாலை உட்படப் பல நுhல்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்ற பெயர் சிற்றிலக்கியவுலகம் போற்றும் ஒரு பெயராகும். சைவ சமய நுhல்கள் பலவற்றை எழுதியுள்ளது இவரின் எழுதுகோல். உதடுகள் ஒட்டாப் பாடலாக நிரோட்டகயமகம் பாடிய சிறப்பைப் பெற்றவர்.

இந்நுhலுக்கு அவரிட்ட தலைப்பு ""சைவசமயாசாரியர்களாகிய நால்வர் நான்மணிமாலை"" என்பதாம். தலைப்புக்கேற்றவாறு ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனப்பெறும் நால்வரையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டது இந்நுhல். இவ்வரிசை முறையிலேயே பாடல்களை நிரல்படுத்தும் சிவப்பிரகாசர் அவர்தம் அருமைபெருமைகளைப் பல கோணங்களில் பேசுகிறார். பாடப்பெறுவாரின் திறன்கள், புகழ், பீடு போன்றவை முதன்மைப்படுத்தப் பெறுவதை நுhல் முழுவதும் கண்டின்புறலாம்.
பாடாண்திணையை விளக்கப் போந்த தொல்காப்பியம் பாடாண் பகுதியைக் கைக்கிளைக்குப் புறமெனப் பேசும். ஆதன் ஒரு பகுதியாக அறுவகை வாழ்த்தைச் சுட்டும். அதற்கான விளக்கமாக ""அறுவகை வாழ்த்து  சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என ஆறுவகையில் வாழ்த்துதல் எனத் தி.சு. பாலசுந்தரனார் (இளவழகனார்) குறிப்புரை வழங்குவார் (பக் உருகூ)
அடுத்த (பொருளதிகாரப் புறத்திணை நுhற்பா.27) பகுதியில்
""பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்,
முன்னோர் கூறிய குறிப்பினும்"" என்ற பாவடிகளைக் காணலாம்.
பரவலாவது வாழ்த்து; குறிப்பாவது, பாடுகின்ற முறையில் முன்னோர் கூறிய கருத்து. இவ்விரண்டினையும் அடியொற்றிய நிலையில் பலரும் பல பனுவல்களைப் பரிமாறியுள்ளனர். அவற்றுள் ஒன்றே நால்வர் நான்மணிமாலை எனும் நுhலாகும்.
நால்வர் நான்மணிமாலையைக் கஸ்புச் செய்யுளுடன் தொடங்கும் சிவப்பிரகாசர் ஞான சம்பந்தரை நேரிசை வெண்பாவிலும், அப்பரைக் கட்டளைக் கலித்துறையிலும் சுந்தரரை அறுசீர்க்கடிலடியாசிரிய விருத்தத்திலும், மணிவாசகரை நேரிசையாசிரியப்பாவிலும் ஏத்துவது தனித்துவமானது.
படைப்பாளியின் யாப்பு வித்தகம் இதன்வழி புலனாகும். ஒருவரைப் பாடிய அதே யாப்பில் அடுத்தவரைப் பாடாமை அப்பாட்டுடைத் தலைவர்களுக்கு வழங்கப்பெற்ற சிறப்புநிலை எனவுங் கருத இடமுண்டு. இத்தகைய செய்யுட்களை உற்று நோக்குங்கால் சமயக்குரவர் நால்வரின் பணியருமை புலனாகும்.
முதற்பாட்டில் உறைபவர் ஞானசம்பந்தர். சீர்காழியில் ஞானப்பால் பெற்ற அருமையை முதலில் மொழியும் சிவப்பிரகாசர் தேவாரமாகிய திருவமுதை வழங்கியவரென்ற பெருமையையும் பேசுவர். இறைவன்-இறைவியிடம் நேரடித் தொடர்பு பூண்ட நிலை தனிச்சிறப்புக்குரியது. பிள்ளையைப் பருவத்திலேயே இத்திருவிளையாடலுக்கு இலக்கானவர் சம்பந்தப் பெருமான்.
இரண்டாம் பாட்டின் மூலவர் நாவுக்கரசர். ‘சொல்வேந்தர்’ எனுந்தொடர் குறிப்பிடத்தகுந்தது. ஈசனால் நாவுக்கரசர், அப்பரென்பன போன்ற சிறப்புடைப் பெயரமைவுகளைப் பெற்றமை இவண் கணக்கிலெடுக்கப் பெறவேண்டிய ஒன்று. சொல்வல்லானின் புகழ் இப்பாட்டில் சொல்லப்பெறும்.
மூன்றாம் பாடல். இப்பாடலில் உலா வருபவர் சுந்தரர், இப்பாடலில் இறைவனால் தடுத்தாளப் பெற்றமை, சுந்தரருக்காக ஈசன் தூது சென்றமை, மகேசன் ‘மனைகள் தோறும் இவருக்காக இரந்திட்டமை போன்றவை முன்வைக்கப்பெறும். ஈசன் புகழ் ஒருபுறமெனில் ஈசனடியார் புகழும் மறுபுறம் ஒளிரக் காணலாம்.
வாதவூரரை மூலப்பொருளாகக் கொண்டது நான்காம் பாடல். மாணிக்காவாசகரின் திருவாசகத் தேனைப் புகழும் நுhலாசிரியர் ""வேதம் பல்காலோதினும் சிற்றன்புடையாராதலும் அரிதென்பதூஉம் திருவாசகமொருகால் ஓதினும் பேரன்புடையராதல் எளிதென்பதூஉம்"" மெய்ம்மைகள் என முழங்கக் காணலாம்.
இவ்வாறு நான்கு சமயக் குரவர்களையும் வெவ்வேறு யாப்பில் தொடர்ந்து பாடுவார் சிவப்பிரகாசர். அப்பாடல்களில் அவர் பொதிந்து தரும் செய்திகள் பற்பல. இவ்வாறு நால்வரைப் பற்றிய கருத்துக் கோர்வையாக இந்தப் பனுவலமைவதால் மணிகளைக் கோர்த்த மாலையாயிற்று எனமஸ் போலத் தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இனி, நால்வரின் சதுரப்பாடுகள் இறையடியார் வரிசைப்படித் தொகுத்தளிக்கப் பெறுகின்றன. இவையாவும் தொல்காப்பியரின் நெறிகளை உள்ளடக்கிய பாடாண்திணைப் பாக்களாகக் கருதப்பெறுகின்றன.
திருஞானசம்பந்தரின் பெற்றிமைகள்:
5ஆம் பாடலில் வினா ஒன்றை முன்வைப்பார் ஆசிரியர். ‘ஞானசம்பந்தா! கீhழிப் பதியிலே மழலையின் பால் சுரந்தது. அதனைப் போல மதுரையம்பதியலே மங்கையர்க்ரசியாருக்கும் மார்பில் பால்சுரந்த செய்தியுண்டு; இவர்கள் இருவரில் யார் உயர்ந்தாரெனச் சொல்’ என்பது வினாவின் மையம். மண்ணுலக மடந்தையை விடவும் மண்ணுலகைக் காக்கும் உமை உயர்ந்தவளென்பதும், சம்பந்தனுக்குக் கொடுக்கப் பெற்றது ஞானப்பால் என்பனும் கணக்கிலெடுக்கப் பெற வேண்டும். அவ்வாறாயின் அன்னை பார்வதியின் அருளுக்கு அரணாகும் சிறப்பு ஞானசம்பந்தனுக்கு வாய்த்தமை குறிக்கப்பெற வேண்டியது.
13ஆம் பாட்டுள் ஒரு தொடருள் இரு செய்தியினைப் புனைவோர் சிவப்பிரகாசர். பால் நினைந்து ஊட்டுபவள் தாய். சம்பந்தக் குழந்தை அழுதவுடன் தாய் உளம் அன்பால் நிறையப் பாலமுது தருவதால் தந்தையைவிடத் தாய்க்கே பெருமகிழ்வு. இச்செய்தியைப் பரிமாறும் நுhலாசான் ‘மகிழ்ச்சி மிகவுண்டு’ எனத் தொடங்குவார். ""மகிர்ச்சி மிகவுண்டு"" எனத் தொடங்குவார். ""மகிழ்ச்சி மிகவுண்டென்றது. பாடிய திருநெறித் தமிழினநிலைமையும் தேவியாரளித்த ஞானப்பால் அதற்கு ஏதுவாதலையும் குறித்தன்று"" 2 என்ற குறிப்பு இவண் நோக்கத்தக்கது. சம்பந்தரின் பாடலருமை ஏத்தப் பெறுதலை உணருதல் தகுவது.
பதினோராம் பாடலில் ‘நாவலன் சம்பந்தனியம்பு திருப்பாட்டு’ எவ்வளவு உயர்ந்தது என இயம்பும் சிவப்பிரகாசர், 21ஆம் பாட்டில் ‘கொள்ளை கொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத் தள்ளும் திருஞான சம்பந்தா’ என விளிப்பதும், வெள்ளத்தில் எதிர்நீச்சலிட்ட ஏட்டை நினைவு கூர்வதும் கவனத்திற்குரிய. எரியிட்ட ஏட்டைப் பற்றிய செய்திகளை 25ஆம் பாட்டினில் செதுக்குவதும், சிவிகையேறித் திருவீதியுலா வருமாறு சம்பந்தன் சிறப்புடையான் என நெய்வதும் குறிக்கத்தக்கன. (33ஆம் பாடல்) முத்தாய்ப்பாக வண்மை, நலம், கல்வி, நல்லாதரவு, இன்பம், ஞானம் எல்லாமும் திருஞானசம்பந்தனின் சேவடியை ஏத்துமெனில் (பா.37) அவ்வாண்மகனின் ஆற்றல் வளமையை வழங்கும்.
இதே முறைமையில் திருநாவுக்கரசரின் அருமைப்பாட்டை விளக்குவார் நுhலாசிரியர். ஆவை வருமாறு இயற்பெயர் மறையுமாறு தாண்டக வேந்தாக அய்யர் விளக்குகின்றமை (பா.6) 2) நாவரசராய்த் திகழுமவர் மக்கள் தொண்டாகப் படிக்காசு பெற்றமை (பா.10) 3) இறைவன் கோயிலின் திருக்கதவம் மூடவும், திறக்கவுமாயமைந்த திருவிளையாடலுக்கு மூலகாரணமாக அய்யர் நின்றமை (பா.14) 4) கல்லொடு நாவரசரைப் பிணைத்து நீரினுள் வீசுங்கால் நமசிவாய மந்திரங்கூறி மிதந்தமை (பா.18) 5) அரவந்தீண்டிய பாலகனை ஈசன்முன் கிடத்தி, வேண்டுதல் செய்து உயிர்ப்பித்தமை (பா.26) 6) ‘அருஞ் சைவநலங் கூர்ந்து மிளிர்தரு நாவரரே’ என விளிக்குமாறு குணநலன் கொண்டமை (பா.34) 7) அப்பூதி அடிகளால் எல்லாக் காலத்தும், எல்லா மனிதரிடத்தும், எல்லாப் பொருளிடத்தும் ‘திருநாவுக்கரசு’ என நின்றமை (பா.38)
தோழனாகச் சிவபெருமானிடம் அணுக்கமுற நிற்றல் (பா.7) பரவை நாச்சியாருடன் உடனுறைந்து  பரமனை ஏத்துவதில் தனித்துவங்காட்டல் (பா.11) எலும்பைப் பெண்ணாக்கும் அற்புதம் நிகழ்த்துதல் (பா.19) கயிலாயம் அடையும் பேறு அடைதல் (பா.23) ஆற்றிலிட்ட செம்வயின் குளத்தில் வருமாறு நிகழ்வுகள் காட்டல் (பா.27) ""பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பி"" என விளித்து, அருஞ்செயல் புரிந்தனை எனப் பலரும் பாராட்டும் வண்ணம் செயற்பாடு காட்டல் (பா.31) எல்லாவற்றுக்கும் மேலாகத் ‘திருத்தொண்டர் தொகை’ உருவாக்கிப் பரிமாறல் (பா.39) என நிரல்படுத்தப் பெறுபவை நம்பியாரூரனின் நலன்களை நவிலும்.
திருத்தொண்டர் தொகை போன்ற பனுவல்கள் காட்ட மறந்த மாணிக்கவாசகரைச் சிவப்பிரகாசர் எழிலுறச் சித்தரிபபார். பெருந்துறை எனும்பதி வளர்த்தவர் (பா.8) பரியை நரியாக்கும் திருவிளையாடலுக்கான ஆணிவேராகத் திகழ்ந்தவர் (பா.12) ""உகந்த மாணிக்கவாசகனெனுமொரு மாமழை பொழிந்த திருவாசகம் எனும் பெருநீரொழுகி ஓதுவர் மனமெனும் ஒண்குளம் புகும்"" எனப் போற்றும் வண்ணம் நுhலாக்கியவர் (பா.16) பழுதில் செய்யுளெனச செப்பத்தகும் பாடல்களைப் புனைந்தவர் (பா.24) தீங்குறட் சுவையை அரும்பாவினுள் காட்டுபவர் (பா.28) வாதவூரனை அகத்தில் ஏத்தின் ஆலவாயண்ணல் முத்தியருளுவாரெனும் சிறப்பை உடையவர். (பா.36) என்றவாறெல்லாம் உயர்த்தப் பெறும் அருங்குணங்களை அடைந்தவர் வாதவூர் அண்ணல். அதனால் 40ஆம் பாடலாகிய நிறைவுப் பாடலில்
""பாவெனப் படுவதுன்பாட்டுப்
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே"" எனத் தெளிவுபடுத்துவார் சிவப்பிரகாசர்.
சான்றென் விளக்கம்
1. சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு, நால்வர் நான்மணிமாலை,
ப. ங0.
2. மேலது, ஙசு
3. மேலது ப.சுரு





No comments:

Post a Comment