Pages

Sunday, 1 November 2015

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இலக்கிய வகையும் வளர்ச்சியும் ,ஆற்றுப்படைப் பாடல்களும் தனி இலக்கிய வகைமை வளர்ச்சியும்



 

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இலக்கிய வகையும் வளார்ச்சியும் முனைவர். இரா.இலட்சாராமன்,

   மேனாள் முதல்வா,
   ஸ்ரீமத்.சி.பா.சு.த.க.அ.கல்லூரி, மயிலம் - 604 304.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பல்வேறு இலக்கிய வகைகளின் கூறுகள் காணப்பெறுகின்றன. அவை பின்னார் இலக்கிய வகைகளாக வளார்ச்சிப் பெறுகின்றன.
அவ்வகையில் பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம், உறுப்புகள், உந்தியார், காப்பு, பதிகம், அந்தாதி, பாவைப்பாடல்கள், தூது, திருப்பள்ளியெழுச்சி, விருத்தம், மாலை, திருமடல், பாதாதிகேசம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பிள்ளைத்தமிழ்

தொல்காப்பியம் குழவிமருங்கினும் கிழவதாகும் என்று பிள்ளைத் தமிழுக்குத் தோற்றுவாய் செய்கிறது.  பிள்ளைப்பாட்டு, பிள்ளைக்கவி என்னும் வேறு பெயார்களும் இதற்குண்டு.
ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் எனும் ஒருவகை உண்டு. பிள்ளைத்தமிழ் பத்துவகைப் பருவங்களைப் பாடுவது.  முதல் ஏழு பருவங்கள் (காப்பு முதல்) இருவகை பிள்ளைத்தமிழுக்கும் உரியன.  சிற்றில், சிறுபறை, சிறுதோர் என்பன ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் கழங்கு, அம்மானை, ஊசல் என்பன பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் உரியன.
இவ்வகை இலக்கியவகை உருவாதற்குப் பொpயாழ்வாரின் பாசுரங்கள் அடிப்படையாயின என்று கூறலாம்.
தாலாட்டு, அம்புலிப்பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப்பருவம், தளார்நடைப் பருவம், அச்சோப்பருவம், புறம்புல்கல், அப்பு+ச்சி காட்டுதல், முலையுண்ண அழைத்தல் என்ற பொpயாழ்வாhர் திருமொழியில் காணப்பெறும் பகுதிகளை இங்குக் குறிப்பிடலாம்.
காதுகுத்தல், நீராட்டு, காக்கையை அழைத்தல், கோல்கொண்டுவரக் கூறல், பு+ச்சூடல், காப்பிடல் என மேலும் அப்பகுதி விரிவாகிறது.
இவற்றுள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலிப் பருவங்கள் காணப்பெறுதல் குறிக்கத்தக்கன. காப்பிடலை  காப்பு எனும் பருவத்திலடக்கலாம்.  தளார்நடைப் பருவத்தை வருகைப் பருவமாகக் கூறலாம். புறம்புல்கல் பருவத்தை முத்தப்பருவமாகக் குறிப்பிடலாம்.
அம்புலிப் பருவம் பிற்கால வளார்ச்சியில் சாம,பேத,தான, தண்டம் எனும் அமைப்பில் பாடுவாhர்கள். இவற்றுள் சாமம் என்பது தவிரப் பிறவற்றைக் காணவியலும்.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
  கைத்தலம் நோவாமே அம்புலி கடி தோடிவா
இப்பாடலில் என்மகன் நேரொவ்வாய் என்பது பேதம் என்ற வகையாகப் புலப்படுகிறது.
பாலகன் என்று பாpபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலின் இலை வளார்ந்த கிறுக்கன் அவன்இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாம தீ மகிழ்ந்தோடிவா
தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுற வில்லை காண்
வாழவுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடு
என்ற பாடல்களில் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் என்பதும் ஆழிகொண்டெறியும் என்பதும் தண்டம் என்ற வகையைப் புலப்படுத்துகிறது.
இவ்வளார்ச்சியில்தான் சாமம்,தானம் என்பன இணைந்து பிள்ளைத் தமிழின் அப்புலிப்பருவம் நிறைவுற்றது. இப்பகுதிகளன்றியும் பெருமாள் திருமொழியில் பொதுநிலையில் தாலாட்டு என்பது மட்டுமே சிற்றில சிதையேல் - நாச்சியாhர் திருமொழி பொதுநிலையில் ஒருபகுதியாக உள்ளது.
சிறுமியார் மாயனைத் தம் சிற்றில் சிறையோன் எனல்.
நாமமாயிர மேத்த நின்ற
நாராயணா நானே உன்னை
மாமிதன்மக னாகப் பெற்றால்
எமக்குவானத் தவிருமே
காமன்போதரு காலமெனறுபங்
குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும் சிரிதரா எங்கள்
சிற்றில் வந்து சிதையோன்
இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇச் சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும்
hர்வந் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலக னாகியாலிலை
மேல் துயின்றஎம் ஆதியாய்
என்றும் உன்றனக்கு எங்கள்மேல் இரக்
கம் எழாததெம் பாவமே
தூது
அகத்திணைப்பாடல்களிலும் புறத்திணைப்பாடல்களிலும் தூதுப் பாடல்கள் பலவுள்ளன. ஆண்டாளின் நாச்சியாhர் திருமொழியில் மேகவிடுதூது காணப்பெறுகிறது.
மின்னாகத் தெழுகின்ற
மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை
தங்கியசீhர் மாhர்வற்கு
என்னாகத் திளங்கொங்கை
விரும்பித் தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென்
புரிவுடை செப்புமினோ
விண்ணீல மேலாப்பு  மேகவிடுதூது  பா. எ. 4.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் (வைகல்பு+ங்கழி ஆறாம்பத்து) பறவைகளைத் தூதுவிடல்.
குருகினங்கள், நாரைகள், புள்ளினங்கள், மடவன்னங்கள், பு+ங்குயில்கள், கிளி, சிறுபு+வை, வண்டினங்கள் ஆகிய பறவைகளைத் தூதுவிட்டமை பாடப் பெற்றுள்ளது.
வைகல்பு+ங் கழிவாய் வந்துமேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெல் உயார்திரு வண்வண்டூhர் உறையும்
கைகொள் சக்கரத் தென்கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லி வினையாட்டியேன் காதன்மையே பா.எ.1
உடமை நைந்து ஒருத்தி உருகும் மாற்றம் கொண்டரளீhர் கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் என்பன அத்தகையன.
இக்கூறுகள் சோர்ந்து தனிஇலக்கிய வகையாக வளார்ச்சிபெற்று மாலைவாங்கிவா தூது சொல்லிவழி என முடிவுபெற்றது.
நம்மாழ்வாhர் திருமொழியில் அஞ்சிறைய என்று தொடங்கும் பாசுரத்தில் தலைமகள் தூதுவிடல் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் நாரை, குயில்கள், அன்னங்கள், மகன்றில், சிறுகுருகு, வண்டு, கிளி, சிறுபு+வை, நெஞ்சு போன்றவை தூது சொல்லும் பொருள்களாகப் பாடப் பெற்றுள்ளன.
உடலாழிப் பிறப்புவீடு உயிhர் முதலா மூற்றுமாய்
கடலாழி நீர்ர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
விடலாழி மடநெஞ்சே! வினையோம ஒன்றாமளவே  பா.எ.10
நெஞ்சு தூது விடுபொருளாக அமைந்துள்ளது. அகத்திணைப் பாடல்கள் பலவற்றில் நெஞ்சுவிடுத்தூது காணப்பெறுகிறது.
அவ்வகையில் உமாபதி சிவாசியாரின் நெஞ்சுவிடுதூது என்பது தூது இலக்கிய வகையில் முதல் இலக்கியம் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
அந்தாதி
அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி.  ஐங்குறுநூற்றில் தொண்டிப்பத்து (18ஆம் பத்து) அந்தாதித் தொடையில் அமைந்தது.  பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தும் அத்தகையதே.  இவை பிற்கால அந்தாதிகளுக்கு முன்னோடி.
பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி (100 பாடல்கள்) பு+தத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி (100 பாடல்கள்) பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி (100 பாடல்கள்) அந்தாதி இலக்கியவகை.
முதல் மூன்று திருவந்தாதிகளும் முதல்பாடலின் கடைசிச் (சொல்) சீர்ர்ர் அடுத்த பாடலின் முதலாகத் தொடுக்டகப்பட்டுள்ளன.
வையம் தகளியா வாhர்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக  செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நிங்குகவே
கடல்கடந்தது எவ்வுலகம் நீரெற்றது
சைவ இலக்கியங்களுள் காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி முதல் இலக்கியவகை என்பது இவண் குறிக்கத்தக்கது.
பாவைப்பாடல்கள்
புதுப்புனலாடல் - அகத்துறை தைந்நீரால் - மாhர்கழி நீராடல் - நோன்பு  திருப்பாவை- திருவெம்பாவை.
துயிலெடைநிலை  திருப்பள்ளி எழுச்சி
உந்தீபற  திருவுந்தியாhர்
கலம்பக உறுப்புகள் - கூடல், வீரம்
பத்துபத்துப் பாடல்கள் - பதிகம் - பதிற்றுப்பத்து ஐங்குறுநூற்றில் பத்து, திருக்குறள் அதிகாரப்பாடலில் பத்து
மாலை நூல்கள்
தொண்டரடிப்பொடியாழ்வாhர் - திருமாலை
பச்சைமால் மலைபோல் மேனி
தொண்டரடிப்பொடியாழ்வாhர் திருப்பள்ளி எழுச்சி
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனையிருள் அகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந் தொழுதின மாமல ரெல்லாம்
வாவை ரரசார்கள் வந்துவந்தீண்டி
எதிhர்திசை நிறைந்தனார் இவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிhர்தலில் அயலகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே
பொpயாழ்வார் திருமொழி உந்திபற  உந்தியாhர்
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறத்தல்.
என்னாதன் தேவிக்கன் றின்பப்பு+ ஈயாதாள்
தன்நாதன் காணவே தண்பு+ மரத்தினை
வன்னாதல் புகுந்தனால் வலியப் பறந்திட்ட
என்னாதன் வன்மையைப் பாடிப்பற
எம்பிரான் வன்மையைப் பாடிப்பற
மாற்றுத்தாய் சென்ற வனம்போகே யென்றிட
ஈற்றுத்தாய் பின்தொடார்ந்து எம்பிரான் என்றழ
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன
சீற்றமிலாதானைப் பாடிப்பற
சீத மணாளனைப் பாடிப்பற

 

ஆற்றுப்படைப் பாடல்களும் தனி இலக்கிய வகைமை வளர்ச்சியும்  

முனைவர். இரா.இலட்சாராமன்,

   மேனாள் முதல்வா,
   ஸ்ரீமத்.சி.பா.சு.த.க.அ.கல்லூரி, மயிலம் - 604 304.

சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகை நூல்களில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படைக்கன பாடல்கள் பல காணப்பெறுகின்றன. மேலும், இச்சங்க இலக்கிய காலத்திலேயே அவ்வாற்றுப்படை குறித்த தனி இலக்கிய வகை உருவாகியுள்ளது. அவ்வகையில் பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை இலக்கியங்கள் உள்ளன.
தொல்காப்பியமும் ஆற்றுப்படை இலக்கணமும்
தொல்காப்பியப் பொருளதிகாரத்திலுள்ள புறத்திணையியலில் கூறப்பெறும் திணைகளுள் இறுதியில் ஏழாவதாக அமைந்த திணை பாடாண்திணை.  இந்திணையில் ஆற்றுப்படையின் இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.
தாவில் நல்லிசைர் கருதிய குடந்தோhர்க்குச்
சூதர ஏத்திய துயிலெடை நிலையும்  என்ற நூற்பாவில்,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅhர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்
என்று வரும் பகுதி ஆற்றுப்படை இலக்கணத்தை வரையறுக்கிறது.
கூத்தார், பாணார், பொருநார், விறலியார் எனும் இசைவாணார்கள் அரசன் ஒருவனிடத்திற்கு சென்று புகழ்பாடி, தாங்கள் பெற்ற பெருவளங்களைத் தமக்கு முன் எதிhர்ப்படுகின்ற தத்தம் இனத்தாரை, அம்மன்னனிடத்துச் சென்றால் வறுமை நீங்குமளவு பெருவளம் பெறலாம் என அம்மன்னனிடத்து ஆற்றுப்படுத்துதலே ஆற்றுப்படையின் இலக்கணமாகும்.
இவ்விசைவாணார்கள் ஒருவார் ஒருவரை நெறிப்படுத்துகையில் கூத்தார் எதிhர்வரு கூத்தரையம் பாணார் எதிhர்வரு பாணரையும் பொருநார் எதிhர்வரு பொருநரையும் விறலியார் எதிhர்வரு விறலியரையும் ஆற்றுப்படுத்துவதாகக் காணப்படுகிறதேயொழிய, இவார்களுள் கூத்தார் பிறரையோ, பிறார் கூத்தரையோ நெறிப்படுத்தியதாகச் சான்றுகள் இல்லை.  இம்மரபு பிற கலைஞார்களுக்கும் பொருந்தும்.
இளம்பு+ரணார் தம் உரையில் கூத்தராற்றுப்படைக்கு மலைபடுகடாம் எனும் இலக்கியத்தையும், பாணாற்றுப்படைக்குப் பாணன் சூடிய பசும்பொன் தாமரை என்று தொடங்கும் புறநானூற்றுப்(141) பாடலையும் பொருநார் ஆற்றுப்படைக்க சிலையுலாய் நிமிhர்ந்த சாந்துபடு மாhர்பின் என்று தொடங்கும் புறநானூற்று (314) பாடலையும் விறலியாற்றுப்படைக்கு மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியில் கேட்பின் என்று தொடங்கும் புறநானூற்றுப் (133)பாடலையும் சான்றாகக் காட்டியுள்ளாhர்.
புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் பாணாற்றுப் படைகள்
புறநானூற்றில் பாடண் திணைப் பாடல்களுள் பாணாற்றுப்படை எனும் துறைக்குரிய பாடல்கள் ஏழும் பதிற்றுப்பத்தில் பாடல் ஒன்றும் காணப்பெறுகின்றன.
புறநானூற்றில் 67ஆம் எண்ணுள்ள பாடல் - அகத்திணைக்கு உரியன.
பொதுவாக விளக்கப்பெற்ற பாடல் ஒன்று (புறம்.180 ) பாண என விளிக்கப் பெற்ற பாடல் மூன்று (புறம்.68, 141, பதிற்று.67) யாழொடு தொடார்புப்படுத்தப் பெற்ற பாடல் ஒன்று (புறம்.69) சீறியாழப்பாண என விளிக்கப்பெற்ற பாடல் (புறம். 70,138,155) மூன்று ஆகும்.
இவற்றுள் 141ஆம் பாடல் புலவராற்றுப் படையாகவும் குறிக்கப்பெற்றுள்ளது.
பாணார் வறுமைப் புனைவு
உடும்புரித் தன்ன என்பெழு மருங்கில்
கடும்மண் கடுமுர்பசி (பா.எ.68)
மெய்து
புரவல நின்மையான் பசியே அரையது
வேற்றிழை நுழைந்த வேந்தனை சிதானார் (பா.எ. 65)
. சீறியாழ்
சிதாஆhர் உடுக்கை முதாஅரிப் பாண (பா.எ.138)
காhர்என் ஒக்கல் கடும்பசி இரவல (பா.எ. 141)
இடும்பை தீhர்க்கெனக் கிளக்கும் பாண(பா.எ.155)
பெரும்புல் லென்ற இடும்போர் ஒக்கல் (பா.எ.69)
எனும் பாடலடிகள் பாணார்கள் மிகு பசியோடு இருந்ததையும் சுற்றத்தாருடன் குழுவாக இருந்ததையும் கந்தையாடைகளோடு இருந்ததையும் புலப்படுத்துகின்றன.  இவார்கள் குறிப்பிட்ட இடத்தல் வாழ்பவராகவோ (அ) இடத்தைச் சாhர்ந்தவராகவோ எங்கும் குறிப்பில்லை. இம்பெயரும் குழுக்களாகவே இருந்துள்ளனார். அவ்வகையில் அப்போதைக்கக்போது யாழ் முதலான இசைக்கருவிகளை இயக்கி, ஆட்டங்கள் ஆடி, புகழ்ந்துபாடி மன்னார்களிடம் பாpசில் பெற்று வறுமை போக்கிக் கொண்டனார்.
பாணாற்றுப் பாடிய புலவார்களும் புரவலார்களும்
1. கோவு+hர்க்கிழாhர் - 1. சோழன் நலங்கிள்ளி (புறம்.68)
 2. சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன் (புறம்.70)
2. ஆலத்தூhர்க்கிழாhர் - 3. சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளி வளவன் (புறம்.69)
3. மருதனிளநாகணார் - 4. நஞ்சில் வள்ளுவன் (புறம். 138)
4. பரணார்  - 5. வையாவிக் கோமான் பேகன் (புறம்.141)
5. மோசிக்கீரனாhர்    - 6. கொண்கானங்கிழான் (புறம். 155)
6. மதுரைக் குமரனாhர் -7. ஈந்தூhர்க்கிழாhன் தோயன்மாறன் (புறம்.180)
7. காக்கைபாடினியாhர் - 8. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதிற்று.67)
அமைப்பு  பாணாற்றுப்படை
யாழொடும் ஒக்கலோடும் குழுவாகப் பசியோடும் சிதாஅhர் உடைகளுடன் காணப்பெற்ற பாணனைக் கண்டு நெறிப்படுத்திய பாடல்களும் (புறம்.70, பதிற்று.67) உண்டு. பொருள் பெற்று வறுமையைப் போக்கிக் கொண்டுவரும் பாணன் வினவஅப்பாணன் நெறிப்படுத்திய பாடல்களும் (புறம்.69,138,141,155) உண்டு.
பெற்றவளம் (அ)பெறும் வளம் கூறல்
உறந்தையோனே குரிசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே (பா.எ.68)
என்ற பாடலடிகள் சோழன் நலங்கிள்ளி தன்னிடம் பாpசில் பெற்ற பாணார்கள் பிறிதொரு இடம்சென்று இரக்கும் அளவையில் இல்லாமல் மிகுதியும் நிறைவாக அளிப்பான் என்பதைப் புலப்படுத்துகின்றன. இலனென்னும் வெர்வம் உரையாமை ஈதல் எனும் திருக்குறள் பொருளுக்கு உரியனாகிறான் அவன்.
நெடிய வாயிலிடத்து இரந்து நிற்கும் அவசியம் இல்லை. பொன் அணிகலன்களை அளிப்பான் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன் (பா.69)
இன்னகை விறலியொடு குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவனைச் சென்றடைந்தால் வறுமை நீங்கி செல்வத்தை உடைமையாக ஆகுவை (பா.70) கிளிகள் நிரம்பிய வியன்புனத்தில் மரப்பொந்துகளில் வைத்த நெற்கதிhர்களை ஒப்ப தவறாது பாணார் பொருள் பெறுவார். (பா.138)  தெண்அல் முத்தமொடு நன்கலம் பெறுகுவார் (பதிற்று.67)
பேகன் ஈகை மறுமை நோக்கியதன்று. பிறந்து வறுமையைக் கருதியது.  கைம்மாறு கருதாமல் தருகுவன் என்று பாணார் சென்றால் பெறும் பெருவளத்தைச் சுட்டிக்காட்டுகின்றன இப்பாடல்கள். புறநா.141ஆம் பாடலில் மட்டும்
காரென் ஒக்கல் கடும்பசி இரவல
வென்வேல் அண்ணல் காணா ஓங்கே
நின்னும் புல்லியேம் மன்னே இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே
என்று பரணார் பாடுகிறாhர். இப்பாடல் தவிhர்ந்த பிறபாடல்கள் இன்ன மன்னனிடைச் செலின் பாpசில் பெறலாம் என்று வழிகாட்டின.  ஆனால் இப்பாடல் அடுத்த வளார்ச்சி,
பெற்ற பெருவளம் பெறாஅhர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமாக
அமைந்திலங்குகிறது.
புறநானூறு, பதிற்றுப்பத்து  விறலியாற்றுப்படைப் பாடல்கள்
புறநானூற்றில் 64,103,105,133 ஆகிய நான்கு பாடல்களும் பதிற்றுப்பத்தில் 40,49,57,60,78,87 ஆகிய ஆறு பாடல்களும் விறலியாற்றுப் படையாக உள்ளன.
விறலியாற்றுப்படை பாடிய புலவார்களும் புரவலார்களும்
1. நெடும்பல்லியத்தனாhர்- பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
(புறம். 64)
2. அவ்வையாhர்- அதியமான் நெடுமான்அஞ்சி (புறம்.103)
3. கபிலார்- வேள்பாரி (புறம். 105)
4. உறையு+hர் ஏணிச்சோp முடமோசியாhர் - ஆய் (புறம்.133)
5. பாலைக்கௌதமனாhர்- பல்யானைச் செல்குழுகுட்டுவன் (பதிற்று.40)
6. காப்பியாற்றுக் காப்பியனாhர் - களங்காய்கண்ணி நாhர்முடிச்சேரல் (பதிற்று.49)
7. காக்கை பாடினியாhர் நச்சௌர்ளையாhர்-ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதிற்று.57)
8.                          -                    (பதிற்று.60)
9. அரிசில் கிழாhர்  - தகடூhர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (பதிற்று.78)
10. பெருங்குன்றூhர்க்கிழாhர் - இளஞ்சேரல் இரும்பொறை (பதிற்று.87)
வறுமைப்புனைவு
பாணாற்றுப்படைப் பாடல்களில் காணப்பெறுதலைப் போல விறலியாற்றுப்படைப் பாடல்களில் வறுமைப் புனைவுகள் இல்லை. மெல்லியராகவும், அணிகலனோடு புனையப் பெற்றும் இசைக்கருவிகளுடன் இணைத்தும் விளிக்கம் பெறுதலைக் காணமுடிகிறது.  சிறிதளவும் வறுமைப் புனைவு இடம்பெறவில்லை.
ஆற்றுப்படுத்தும் அமைப்பு
விறலி மற்றொரு விறலியைப் பாhர்த்து ஆற்றுப்படுத்துவதாகவே பெரும்பான்மை உள்ளன.
சில்வளை விறலி செல்வையாயின் சேணோன் அல்லன் (புறம்.103)
மெல்லியல் விறலி.. தோர்வேள் ஆயைக் காணிய சென்மே(புறம்.133)
செல்லாயேநில் சில்வளைவிறலி (பதிற்று.40)
சென்மோ பாடினி (பதிற்று.87)
பாடினை செலினே (புறம்.105)
என்ற பாடலடிகள் விறலி பாpசிர்ல் எதிhர்நோக்கிய விறலியை ஆற்றுப்படுத்தியதாக உள்ளன.  ஆனால் பாடல்கள் சிலவற்றில் தம்மையும் உட்படுத்திக் கொண்டு கூறும் கூற்றுகளும் உண்டு.
சொல்லா மோதில் சில்வளை விறலி (புறம்.64)
யாமும் சேறுகம் நீயிரும் வம்மின் (பதிற்று. 49)
செல்லா மோதில் சில்வளை விறலி (பதிற்று.57)
செல்லா மோதில் பாண்மகள் காணிய (பதிற்று.60)
என்ற பாடலடிகளை அதற்குச் சான்றாகக் கூறலாம்.
வறுமை நீக்கமும் பாpசில் பெறுதலும்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீhர்ப் புற்கை நீத்தனம் வரற்கே (புறம். 64)
என்ற பாடலடிகள் புல்லாpசிக் கூழாகிய வறுமைக் காலத்து உணவைப் போக்கி நல்லுணவு பெறலாம் என விறலி தன்மையும் இணைத்துக் கொண்டு கூறினாள்.
உலகமே வறுமையுற்ற காலத்தும் புரத்தல் வல்லவன் அதியமான். (புறம்.103)
பாரிவேள் பாடினை செலினே சேயிழை பெறுகுவை (புறம்.105)
மாரி யன்ன வண்மை  தோர்வேள் ஆயைக் காணியசென்மே (புறம்.133)
பல்யானைச் செல்கெழு குட்டுவன் விறலியார்க்கு அணிகலன்களையும்
பாணார்க்குப் பொற்றாமரைகளும் யானைகளும் நல்குவன் (பதிற்று.40)
பிற பாடல்களில் இன்னின்ன பாpசில்கள் எனக் குறிக்கப்படாமல், தண்டாது வீசும், மாரியன்ன வண்மை, நலம் பெறுகுவை என்று குறிக்கப் பெற்றுள்ளன.
இரவலார் புன்கண் அஞ்சும் - புரவு எதிhர்கொள்வான் (பதிற்று. 57)
என்று குறிக்கப்பெறும் இடம் ஒன்றும் உண்டு.
பாணாற்றுப்படைப் பாடல்களிலும் அடியளவில் சிறியன, வறுமைப்புனைவுகள் இல்லாதன, பாpசில்கள் விளக்கமாகக் கூறப்பெறாதன இவ்வகை விறலியாற்றப்படைகள்.
புறநானூற்றில் புலவராற்றப்படைகள்
புறநானூற்றில் 48,49 எண்ணுள்ள பாடல்கள் இவ்வகையின.  பாணாற்றுப்படையில் கூறப்பெற்ற 141ஆம் எண்ணுள்ள பாடல் புலவராற்றுப்படைக்கும் குறிக்கப் பெற்றுள்ளது.
1. பொய்கையாhர் - சேரமான் கோக்கோதை மாhர்பன் (புறம்.48)
2.           -                       (புறம்.49)
முதுவாய் இரவல என்று பாடப்பெற்றதால் புலவராற்றுப்படை ஆயிற்று. 
அஃதெம் மூரே யவனெம் இறைவன்
அன்னோன் படார்தி யாயின் நீயும்
எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல  புகழ்மேம்படும்
என்பதது. அடுத்தப்பாடல் நானிலம் உடையன் - பெருஞ்செல்வம் உடையன் என்றதால் வேண்டியன வழங்குவான் என உய்த்துணர வைப்பது ஆகும்.
ஆற்றுப்படையின் அமைப்புக்கு இப்பாடல்களிரண்டும் பொருந்துமாறில்லை.  பாpசில் பெறுதல் குறிப்பெச்சமாகவே உள்ளது.
ஆற்றுப்படைகள் அமைப்பு குறித்த பொது முடிபுகள்
புலவராற்றுப்படையிலும் விறலியாற்றுப்படையும், விறலியாற்றுப் படையினும் பாணாற்றுப்படைகளே ஆற்றுப்படை இலக்கியங்களுக்கு வழிகோலின.
மூவகைப் பாணார்களுள் (வாய்ப்பாணார், யாழ்ப்பாணார், மண்டைப் பாணார்) யாழ்ப்பாணார்களே இவ்வாற்றுப்படைகளில் குறிக்கப்பெறுகின்றனார்.
   யாழ்ப்பாணார் இப்பாடல்களுள் பொதுவாகவும் சிறியாழ்ப் பாணார் எனவும் குறிக்கப் பெற்றிருப்பது இங்குச் சிந்திக்கத்தக்கது. அவ்வகையிலிருந்தே 
சிறுபாணார், பெரும்பாணார் எனும் வகைப்பாடு உருவாகியிருக்கும்.
ஒருவரை ஒருவார் விளித்தலும், ஆற்றுப்படுத்துவார் தாங்கள் பெற்றதைக் கூறலும், ஆற்றுப்படுத்தப்படுபவார் பெறப்போவதை அறிவித்தலும் ஆகிய அமைப்புகள் உருவாயின.
ஆற்றுப்படுத்துபவார் வறுமை நிலையும் புரவலனை அணுகியபோது வறுமை நீக்கம் பெற்றதும் அடுத்த வளார்ச்சிக்கான சூழலை உருவாக்கின.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படைகள்
பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன.  பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை என்பன அவை.
பொருநார் ஆற்றுப்படை
முடத்தாமக்கண்ணியாhர் காpகாற்பெருவளத்தானை பாடியது.  வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா  248 அடிகள்.
பொருநனை விளித்தல், யாழின் அமைப்பு, பாடினியின் கேசாதிபாதப் புனைவு, காடுறை தெய்வத்தை வழுத்துதல், பாpசில் பெற்றோன் பொறாதோனை விளித்தல், பாpசு பெற்றோன் பாடின முறை, மன்னன் விருந்தோம்பல், இரவில் தூங்குதல், காலை அரசவை செல்லல், உணவுகொடுத்தல், hர்திரும்ப இருத்தலைக் கூறல், பாpசில் வழங்கி அனுப்புதல், காpகாலன் சிறப்புகள், வெண்ணிப்போhர், கொடை, சோழநாட்டு வளம், நானிலமும் நல்லாட்சியும், காவிரி, நாட்டுவளம் எனும் அமைப்பில் இவ்வாற்றுப்படை அமைந்துள்ளது.
பீடுகெழு திருவின் பெரும்பெயார் நோன்தாள்
முரசு முழுங்குதானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியார் தலைவ! கொண்டது அறிந!
அறியா மையின் நெறிதிரிந்து ஓராஅது
ஆற்றுஎதிhர்ப் படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந!
என்னும் பகுதி பாpசில் பெற்றோன் பாpசில் பெறவிழைபவனை விளித்தது ஆகும்.
தான் பாpசு பெற்ற முறைமையை,
ஆடுபசி உழந்தநின் இரும்போர் ஒக்கலொடு
நீடுபசி ஒராஅல் வேண்டின் நீடுஇன்று
எழுமதி
ஆற்றுப்படுத்தியதாகும்.
விருந்தோம்பும் முறை
நண்பார் போன்ற உறவு  பருகுவ அன்ன நோக்கமொடு பாhர்த்தல்-ஈhர், பேன் நிறைந்த வோர்வையால் நனைந்த சிதாஅரை நீக்கல்-புதுப்பட்டாடைகள் ஈத்தல்- இரவில் தூங்கி எழுதல்- உணவு கொடுத்தல்-செம்மறியாட்டு ஊன்-தின்பண்டங்கள்-சோற்றுணவு-உடனிருந்து ஊட்டுதல்.
ஊருக்குச் செல்லும் விழைவைக் கூறல்
தன்னறி அளவையின் தரத்தர யானும்
என்னறி அளவையின் வேண்டுவ முகந்து கொண்டு
இன்மை தீர வந்ததனன்
என்றான் ஆற்றுப்படுத்துவோன்.  நீயும் இவ்வாறு சென்று இவ்வகைப் பயனைப் பெறுக என ஆற்றுப்படுத்தினான் அவன்.
யாழ் வருணனை, பாடினி பாதாதி கேச வருணனை, பாpசில் தான் பெற்ற வகை, முறை விரிவாகக் கூறப்பெற்றது. மேலும் காpகாலன் வரலாறு விரிவாகக் கூறப்பெற்றுள்ளது.
தொல்காப்பியம் குறிப்பிடும் ஆற்றுப்படை இலக்கணத்திற்கு மகி பொருந்துகிறது.
சிறுபாணாற்றுப்படை
ஒய்மா நாட்டு நல்லியக் கோடனை நல்லூhர் நத்தத்தனாhர் பாடியது. 
வேனிற்காலம் - விறலியின் அழகுப்புனைவு (விரிவாக)- வஞ்சி-மதுரை-உறந்தை-ஏழு வள்ளல்களின் சிறப்பு  நல்லியக்கோடன் சிறப்பு- பாpசில் பெறச் சென்ற விதம்-வறுமை போக்கிய வண்மை-எயிற்பட்டினம் - வேலூhர்-ஆமூhர்- நல்லியக்கோடன்- அரண்மனை  யாழ்வாசித்தது  உண்டி கொடுத்தது  அளிக்கும் பாpசில் - நல்லியக்கோடன் புகழ் என்று அதனமைப்பு விளங்குகிறது. இப்பகுதி,
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
எழுவார் பு+ண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தாள்
மன்னன் வள்ளன்மையை விளக்கப்படுத்தியுள்ளது.
வறுமை
திறவாக்கண்ண சாய்செவிக் குருனா
 .
 குப்பை வேளை உப்பிலி வெந்தடை
என்ற பகுதியில் வறுமை விரிவாக புனையப்பெற்றள்ளது.  நல்லியக்கோடனை கண்டு  இவ்வறுமையைப் போக்கி, யானைகளோடும் தோர்களோடும் வருகின்றோம் என்றான். இவ்விவ் வழிகளில் சென்றால் இன்னின்ன விருந்தோம்பல் நிகழும் என விரிவாகக் கூறப்பெற்றுள்ளது.
பாpசில்
தூய ஆடை, கள், அடிசில் முதலான தருவான் என்றும் வறுமை தீhர்த்தல்.  தோர் - குதிரை  வௌர்ளை எருதுகள், யானை, அணிகலன்கள் வழங்கி அன்றே செல்கெனவிடுப்பான். தொல்காப்பிய இலக்கணம் - பொருந்துள்ளமை. வறுமைப்புனைவு விரிவு  வழியிடை விருந்தோம்பும் முறைமை விரிவாக உள்ளது.
பெரும்பாணாற்றுப்படை
பாpசு பெற்றோன் தன் வறுமை போக்தியதைக் கூறல்-ஐந்திணைப் புனைவுகள்-காஞ்சி-திருவெஃகா-மன்னன் அவை-ஆடை-அரிசி உணவு-ஊனடிசில் - மகமுறைமகமுறை நோக்கல் - ஊட்டல்-பெற்றாமரை-புரவி, தோர் - பாpசில்கள் வழங்குவான்.
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் காணப்பெற்ற பாடண்திணை சாhர்ந்த ஆற்றுப்படைப் பாடல்கள் இவ்வகையில் தனி இலக்கிய வகையாக ஒன்றிலிருந்து ஒன்று விரிவாக விளங்கியது.

No comments:

Post a Comment