Pages

Sunday, 1 November 2015

சதக இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கூறுகள்




 சதக இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கூறுகள் 


அரங்க.சீனிவாசன், உதவிப்பேராசிரியா;,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.


எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு  திருவள்ளுவா;
மானமும் அறிவும் மனிதற்கு அழகு  தந்தை பொpயார்
அழகான பொன்னுதான் அதற்குஏற்ற கன்னுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் மட்டும் தான்
 திரைப்படப்பாடல்
இந்த வாpகளோடு சதக இலக்கியங்களின் வாழ்வியல் கூறுகள் என்னும் கட்டுரையை எடுத்து விழம்ப கடமைப்படுகிறேன். சதகம் என்பது தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று இந்த சிற்றிலக்கியத்தின் வித்து தொல்காப்பியா; காலத்திலே தொடங்கிவிட்டது. அதனை,

விருந்தே தானும்
புகுவது கிளந்த யாப்பின் மேற்றே
என்னும் தொல்காப்பிய நூற்பா பல்வேறு வகையான இலக்கியங்களின் தோற்றத்தை எதிர்நோக்கி அமைந்துள்ளது. தொல்காப்பியா; காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்ககாலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாக துலிர்த்து ஏழாம் நூற்றாண்டில் கோவையாக செடியாகி எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் சதகமாகவும் பரணியாகவும் அரும்பி பதினான்காம் நூற்றாண்ழல் தூதாக பூத்து பதினாறாம் நூற்றாண்டில் பள்ளாக காய்த்து பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாக கனிந்தது. இவ்வாறு சிற்றிலக்கிய பெருமரத்தில் ஆயரக்கணக்கான சுவைக்கனிகள் பழுத்து தமிழ்த்தேன் அருந்தும் வண்டுகளை வரவேற்கின்றன. கால வளா;ச்சியால் கவின்கெடாமல் வளம் குன்றாமல் எழில்மிக்க வண்ணமும் வனப்பும் பெற்று சிற்றிலக்கிய நூல்கள் பல கற்போர் நெஞ்சத்தில் மகிழ்ச்சி அளிக்கவல்லன.
சதகம் என்பது அகப்பொருளையோ புறப்பொருளையோ அடிப்படையாக வைத்து யாதேனும் ஒரு பொருள் மீது நூறு பாடல்களால் பாடப்பபடும் இலக்கிய அமைப்பே சதகம் என்று அழைக்கப்படும்.
சதகம் என்ற இலக்கிய வகையின் பெயா; அமைப்புக்கு தமிழ்மரபே களமாக அமைந்துள்ளது. தமிழ் மரபில் எண்ணிக்கை அல்லது பொருள் அமைதி இவற்றை ஒட்டி பல நூல்களின் பெயா;கள் அமைந்துள்ளதை காணலாம். எடுத்துக்காட்டாக அகநானூறு, புறநானூறு இவை இரண்டும் எண்ணிக்கை பொருள் இவற்றால் பெயா; பெற்றவை. ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து முதலியவை எண்ணிக்கையால் பெயா; பெற்றவை. இங்ஙனம் எண்ணிக்கை அடிப்படையில் பெயாpடும் தமிழ் மரபை ஒட்டியே சதகம் என்ற இலக்கிய வகையும் பெயா; பெற்று விளக்குகிறது.
தமிழில்  சதகம்  என்ற  சொல்லை  முதல்  முதல்  கையாண்டவா;
மாணிக்கவாசகா; ஆவார். ஊனினை உருக்கி உள்ளொளிபெருக்கம் ஒப்பற்ற இலக்கியமான திருவாசகத்தில்தான் சதகம் என்ற சொல் அமைந்துள்ளது.
திருவாசகத்தில் ஒரு பகுதியாக விளங்கும் திருச்சதகம் நூறு பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இறைவன் திருவருளை அடைவதே குறிக்கோளாகச் செல்லும் ஆன்மாவின் பக்தி அனுபவங்களைப் படிப்படியாகக் கூறி அமைவதே திருச்சதகம். தெய்வத்தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுகளைத் தன்னகத்தே கொண்ட இப்பகுதியானது மெய்தான் அருமபி என தொடங்கி மெயார் மெய்யனே என அந்தாதி தொடையால் முடியும் நூறு பாடல்களை உடையது.
புது வகையான பெயா; அமைப்போடு தமிழில் சதக இலக்கியத்தினைத் தனி சிற்றிலக்கியமாக உருவாக்கிய பெருமை அவினாசி ஆறைக்கிழாரையே சாரும். பெயா; அமைப்பு மட்டும் இன்றி பொருள் அமைப்பிலும் ஒரு குறிப்பிட்ட வரையறை அறிமுகப்படுத்திய பெருமை ஆறைக்கிழார்க்கே உரியது. இவா; இயற்றிய கார் மண்டல சதக இலக்கியமே சதக இலக்கியங்களில் காலத்தால் மூத்த நூல் ஆகும். ஆறைக்கிழார் கொங்குநாட்டு அவினாசியைச் சோ;ந்த ஆறை நாட்டினா;. இவா; இயற்பெயா; மறைந்து ஆறைக்கிழார் என சிறப்புப்பெயரே இவருக்கு நிலைபெற்றுள்ளது. இவரது காலம் கி.பி.பதினோறாம் நூற்றாண்டு கார் மண்டல சதகத்திற்குப் பின் சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம் முதலிய மண்டல சதக நூல்கள் எழுந்துள்ளன. இவை கார் மண்டல சதகம் வரையறுத்த பொருளமைதியை ஏற்று அதனைப் பின்பற்றியே அமைந்துள்ளன. இதுதவிர, சதக இலக்கியங்களுக்கு வெவ்வேறு பொருளமைதியை அறிமுகப்படுத்தவும் பின்வந்த ஆசிரியாக்ள முயன்றனா;. எனவே,அம்முறையிலும் பல்வேறு சதக இலக்கியங்கள் தமிழில் பெருகின. பொருள் வரையறை இல்லாத நிலையில்தான், யாதேனும் ஒரு பொருள் மீது என்னும் விதி சதகத்துக்கு உருவானது.
சதக இலக்கியம் ஒருபொருள் கருதி வருதல் வேண்டும். வெண்பா அல்லது கலித்துறை செய்யுளால் இயற்றப்பெற வேண்டும். அகப்பொருள் புறப்பொருள் பற்றி அமையவேண்டும் நூல் முழுதும் ஒரே செய்யுள் வகையால் பாடப்படுதல் வேண்டும் என்பன சதக இலக்கிய இலக்கண விதிகளாகக் கூறப்பட்டுள்ளன.
அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள்
ஒன்றன் தேலாதல் கற்பித்து ஒரு நூறு
செய்யுள் உரைப்பது சதகமாம் என்ப  முத்துவீரியம்
பிற்காலத்தில்  எழுந்த  சதக  நூல்கள்  நன்னூலாரின் புதியன புகுதல் என்னும் விதிபடி
அகப்பொருள் புறப்பொருள் பற்றிப் பாடாமல் பக்தி, வாழ்வியல் என்ற பொருள்களைப் பற்றியே பெரும்பாலும் தோன்றியது. பக்தி சதகங்கள் தெய்வீகம் அல்லது தெய்வீக தலங்கள் பற்றி அமைந்தன. வாழ்வியல் சதகங்கள் பெரும்பாலும் நீதி சதகங்களாகத் தோன்றின.
சதக இலக்கியங்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்.

1.வரலாற்று சதகங்கள்
2.நீதி சதகங்கள்
3.துதி சதகங்கள்
மண்டல சதகங்கள் வரலாற்று அடிப்படையில் எழுந்தது துதி சதகங்கள் போற்றி வகையில் அமைந்தது நீதி சதகங்கள். மனித வாழ்வியல் அடிப்படையில் அமைந்தவை. எடுத்துக்காட்டாக தண்டளையார் சதகம், குமரேசசதகம் போன்றவை வாழ்வியல் நீதிகளை எடுத்துக்கூறுவன. அதேசமயத்தில் சதகங்கள் சமய தத்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ள மொழியின் சிறப்பு கல்வியின் பெருமை சமுதாய சீர்திருத்தம் உடல்நலம் பேணுதல் முன்னோர் மொழியைப் போற்றுதல் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைப்பதே சதக இலக்கிங்களின் நோக்கங்கள்.
நோக்கங்கள்

1.நாட்டுப்பெருமை
2.சமய மறுப்பு
3.கதை கூறும் பாங்கு
4.சமய பரப்பு
5.சமுதாய நீதி
6.வாழ்வியல் நடைமுறை
7.சமய தத்துவம்
8.உடல்நலம் பேணல்
9.சமுதாய சீர்திருத்தம்
10.முன்னோர் மொழியைப் போற்றுதல்
11.மொழிக்கல்வி

மனித வாழ்வில் நம்பிக்கை என்பது மிக முக்கியமான வாழ்வியல் கூறு அதைப்பற்றி தண்டளையார் சதகத்தின் முதற்பாடலே திருவிளக்கு இடுதலில் தொடங்குகிறது.
வரமளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
உட்புகுந்து வலமாய வந்து
ஒரு விளக்கு ஆகிலும் பசுவின் நெய்யுடன்
தாரை நூலின் ஒளிர வைத்தாய்
கரு விளக்கும் பிறப்புமில்லை இறப்புமில்லை
கைலாசம் காணியாகும்
திரு விளக்கு இட்டார் தமையே தெய்வம் அறிந்திடும்
வினையும் தீரும் தானே!
இந்த பாடல் வழி அறியப்படுவது தாமரை தண்டில் இருந்து எடுக்கப்பட்ட நூலைத் திரியாக்கி நெய் ஊற்றி விளக்கு எரித்தனா; என்ற செய்தி தெளிவாகிறது.
கைலாசம் காணியாகும் எனும்போது கைலாசம் உரிமையாகும் என்பதாய் காணி எனும் சொல், ரிமைப்பட நிலம் எனும் பொருள் தருவது  மஞ்சட் காணி என்பது மனைpவ வழியில் வந்த நிலம் என்னும் பொருள் ஆகும். பேச்சு வழக்கில் உங்க அப்பன் காணியா? எனும் சொல்லை வசவாகச் சிறுவயதில் பல முறை கேட்டவன் நான் பராசக்தியிடம் பாரதி உரிமையுடன் கேட்டுப்பாடியது தான் காணி நிலம் வேண்டும். பராசக்தி காணி நிலம் வேண்டும் என்ற பாடல். காணிநிலம் இல்லாதவனுக்கே அந்த ஏக்கம் புரியும். இன்றைக்கு அந்த காணி நிலத்தை இழந்த அந்த காணி நிலத்திலேயே ராஷபட்சே போன்ற வஞ்சனை கயவா;களால் கொல்லப்பட்ட ஈழத்து தமிழின் இழப்பு இன்னும் நமக்கு அர்த்தமாக இல்லை.
இல்லறமே பொpது என்ற பழமொழியை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். நீதி நூலான கொன்றை வேந்தனில் இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்று படிக்கிறோம். இதனையே சதகத்தில்,
புல்லறிவுக் கொட்டாத தண்டலையார் வளம்தழைத்த
பொன்னி நாட்டில்
சொல்லறமா தவம்புரியும் சௌபாpயும் துறவறத்தைத் துறந்து
மீண்டான்
நல்லறமாம் வள்ளுவா; போல் குடிவாழ்க்கை மனைவியுடன்
நடத்தி நின்றால்
இல்லறமே பொpதாகும் துறவறமும் பழிப்பின்றேல் இயற்கை
தானே
என இல்லறத்தைப்போற்றிப் பாடுகிறார்.
வாழ்வியல் உண்மைகளின் நன்றி உடமை மிகப்பொpதாகும். நன்றி உடைமைப்பற்றித் தண்டளையார் கூறும் பாடல்.
நன்றிதரும் பிள்ளையொன்று பெற்றாலும் குலமுழுதும்
நன்மை உண்டாம்
அன்றியறி(வு) இல்லாத பிள்ளையொரு நூறு பெற்றும்
ஆவதுண்டோ
மன்றில்நடம் புரிவாரே தண்டலையா ரேசொன்னேன்
வருடந்தோறும்
என்ற பாடல் பன்றிபலகுட்டிப் போட்டால் என்ன யானையின் ஒரு குட்டிக்கு இணையாமோ என்ற பழமொழி இன்றைக்கு மக்களுடைய வாழ்வியலில் இணைந்துள்ளது என்பதை அறியலாம். விருந்தில்லாத சோறும் மருந்து என்ற வாழ்வியல் மொழிக்கு தண்டலையார் பாடுகிறார்.
திருவிருந் தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை
செலுத்து நாலோர்
ஒருவிருந்தா கிலுமின்றி உண்டபகல் பகலாமோ உறவாய்
வந்த
பெருவிருந்துக் குபசாரஞ் செய்தனுப்பி இன்னமெங்கே
பொpயோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா(து) உணுஞ்சோறு
மருந்துதானே
என்று பாடுகிறார். இதனையே திருவள்ளுவரும் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் மோப்பக்குழையும் அணிச்சம். என்று விருந்து பற்றிக் குறிப்பிடுகிறார். தமிழா; வாழ்வியலில் விருந்தோம்பல் சிறப்பாக சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. அதனால் தான் பழமொழியும் விருந்தில்லாதசோறு மருந்து என்று எடுத்துரைக்கிறது.மேலும் பல்வேறு வாழ்வியல் உண்மைகளைப் பழமொழிகள் வழி சதகம் எடுத்துரைக்கிறது.
1.பன்றி பல ஈன்றும் என்ன, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன்உண்டாமே! குஞ்சரம் - யானை.
2.கங்கையிலே படா;ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல் சுரைக்காய் ஆகாதே!
3.விடியல் மட்டும் மழை பெயினும் அதில் ஒட்டாம் கிளிஞ்சல் முளைவிடாதே!
4.ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னுடனே ஆகும்தானே!
5.எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்னுண்டாமே?
6.துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே!
7.பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போசனம் நடத்தும் பெருமைதானே!
8.அன்னை நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்ட வகை ஆகும்தானே!
9.வழுவழுத்த உறவுகளில் வயிரம் பற்றிப் பகை பன்மையாகும்!
10.இளைத்தவன் பெண்டிர் என்றால் எல்லார்க்கும் மச்சினியாய் இயம்புவாரே!
11.நாழி நெல்லுக்கு ஒரு புடவையை விற்றாலும் திருமணம் நாய்க்குத் தானே!
12.
இப்படி பல்வேறு வாழ்வியல் உண்மைகளைச் சதகப்பாடல்கள் எடுத்துரைப்பதை அறியலாம்.
அறப்பளீசுர சதகத்தில் ஒரு நல்ல ஆசிரியா; எப்படி இருக்க வேண்டும், சிறந்த மாணவன் எப்படி திகழ்தல் வேண்டும், ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும், நல்ல அரசும் அதற்கு ஆலோசனை வழங்குபவா;களும் எவ்வாறு இருக்க வேண்டும், பொருள் சோ;க்கும் வழி முறையானது எப்படி நல்வழியில் அமைதல் வேண்டும். தீவினை செய்தோர் குறித்தும் சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் அறப்பளீசுர சதகம் எடுத்து இயம்புகிறது. மேற்படியானவற்றிற்கு சில தண்டனைகளையும் எடுத்து கூறுகிறது. முறைகேடாக சம்பாதிக்கும் என்னும் கொண்டவா;களை உயிருடன் அலைந்து திரியும் பேய் என்று சாடுகிறார் அம்பலவான கவிராயா;. எனவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை எடுத்துரைப்பதாக சதக இலக்கியங்கள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment