Pages

Tuesday 14 April 2015

தமிழ் உச்சரிப்பு


Image result for தமிழ் உச்சரிப்பு முறை
Image result for தமிழ் உச்சரிப்பு முறைImage result for தமிழ் உச்சரிப்பு முறைImage result for தமிழ் உச்சரிப்பு முறை

Image result for உயிர்எழுத்து




Image result for தமிழ் உச்சரிப்பு முறைImage result for தமிழ் உச்சரிப்பு முறை




சேதுபதி தென்னரசு, சின்னயன் கவிதைகளில் சமூக விழிப்புணர்வு

ஆ.சித்ரா.முனைவர் பட்ட ஆய்வாளர்,சேலம்-7

சேதுபதி தென்னரசு, சின்னயன் கவிதைகளில் சமூக விழிப்புணர்வு

முன்னுரை

ஒரு நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் இலட்சக்கணக்கான இலக்கியங்கள் அவை உள்ளத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை தரவல்லன. அதனோடு மக்களின் வாழ்வையும், உணர்வுகளையும் தெளிவாகக் காட்டவல்லன இலக்கியங்கள். அருந்தமிழ் இலக்கியத்துறையில் வளர்ந்து வரும் துறைகளில் புதுக்கவிதை மிகச்சிறந்த துறையாக வளர்ந்து வருகிறது. வாழையடி வாழையாக வளர்ந்து வருகின்ற இத்துறை மக்களின் வாழ்வையும், வாழ்க்கைக் கூறுகளையும் யதார்த்தத்தோடும், நேர்முகத் தன்மையோடும் விளக்குவது இக்கவிதைத் துறையாகும். இங்கு சேதுபதி சின்னயன், தென்னரசு ஆகியோரின் கவிதைகள் கட்டுரையின் எல்லையாக அமைந்துள்ளது.

இலக்கியங்களின் குறிக்கோள்

மனிதர்கள் பற்றிய வரலாறு, புரிதல்கள் பலவற்றையும் பல கதை, கவிதைகளை விளக்குவதும் சிந்தனையைத் தூண்டுவதும் சங்க காலம் தொட்டு இக்காலம் வரை நமக்குப் பல இலக்கியங்கள் தூண்டுகோளாக உள்ளன. அதில் மனிதனுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைவது கவிதை இலக்கியம் ஆகும். இது பொழுதுபோக்கிற்காகவும், கவிதையைப் படிப்போன் அதனைப் படைக்கும் படைப்போன், ஆகிய இருவருக்கும் படைக்கும் செயல் படைக்கப்பட்ட பொருள் ஆகியன பொதுவாக அமையும் கருத்துக்களே இலக்கியத்தின் குறிக்கோளாகும். ஓர் இலக்கியத்தின் பண்பு பயன் ஆகியன அதன் உள்ளடக்கமாக அமைகின்றது எனின் அதுவே அதன் குறிக்கோள் ஆகும்.

இலக்கியத்தில் மனித உரிமை

இக்கால இலக்கியங்கள் மனிதநேய தன்மைகளை விளக்குபவையாகவும், கவிஞனின் தன் அனுபவ நோக்காகவும் அமைகின்றன. அவ்வகையில் சிறந்து விளங்கும் மனிதாபிமானம் எல்லோரிடமும் உருவானால் சண்டை சச்சரவுகள் அல்லாத சமாதான இராஜ்ஜியம் உருவாகும் என
மனிதா!
உன் விஞ்ஞானம் விண்வெளிக்குப் போகப் போக உன் மனிதாபிமானம் மண்குழிக்குப் போகிறதோ! என மனிதர்களைப் பார்த்துப் புலம்புகின்றார் ஒரு கவிஞர்.
பெண் சமுதாயத்தை பெருமைப்படுத்த வேண்டும் என பல கவிஞர்கள் நினைத்தாலும் அன்று முதல் இன்று வரை பெண்கள் தன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இழந்தவர்களாகவே வாழ்கின்றனர் என

""இன்றல்ல
நேற்றல்ல
நெருப்புக்குள் அவள்
அவளுக்கு நெருப்பு
அவனால் எரிகிறாள்!""
என்று மனித உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் துன்பத்தில் எரிந்து போவதாகக் கவிஞர் காட்டுகின்றார்.

சமூகத்தில் சிறியோர் நிலை

இன்றையக் குழந்தைகள் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும், லாட்டரி சீட்டு விற்பவர்களாகவும், காகிதம் பொறுக்குபவர்களாகவும் பிச்சை எடுப்பவர்களாகவும் இருக்கின்ற பிஞ்சு உள்ளங்களை மீட்டு கல்வியால் அறிவுக் கண்களை திறக்கவும் விரும்புகின்றார் ஒரு கவிஞர்

""குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகின்றவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டுவிட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?""
எனக் கேட்கின்றார். குழந்தைகளைக் காப்போம் அடிமைகள் இல்லா மனித சமுதாயத்தை உருவாக்குவோம் எனக் கூறுகின்றார்.
அந்நிலை மாறி தற்போது பல அரசுக் காப்பகங்கள், தொட்டில் குழந்தை திட்டம், அனைவருக்கும் கல்வி என்ற நிலை, சமச்சீர் கல்வி, அரசுப் பள்ளிகளில் புத்தகம், உணவு, உடை, போக்குவரத்துச் சலுகை எனப் பல உதவிகளையும் சிறந்த மாணவர்களுக்கு கல்விச் சலுகை, ஊக்கத் தொகை அதனோடு மட்டுமல்லாமல் சிறந்த மாணவர்களை உருவாக்கி நல்ல வேலைவாய்ப்பையும் கூரைகளே இல்லாத கிராமமாக மாற்றுவோம் என அனைவருக்கும் நல்ல வீடுகளைக் கட்டச் சலுகைகளையும் அதனோடு மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தி ஒரு சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குகின்றது.

இன்றைய பெண்கள் நிலை

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ந்து வருகின்றனர். அரசியல் துறையில் 33ரூ ஒதுக்கீடு பெற்று உள்ளனர். கல்வித் துறையில் பெண்களே முதன்மை பெறுகின்றனர். விளையாட்டுத்துறை, விஞ்ஞானத்துறை இதில் பெண்களே அதிகம் வளர்ந்து வருவதால் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது. பல புதிய கருவிகளை பயன்படுத்தி உணவு முறைகளையும், புதிய கருவிகளையும் பயன்படுத்தி உயர்ந்து விளங்குகின்றனர். அது மட்டுமல்லாமல்

மனைவியும் இழந்துவிட்டால்
மறுமணமும் செய்து கொண்டார்
துணைவரும் இழந்துவிட்டால்
துணிவுடன் வாழணும் அம்மா!
எனப் பெண்களை தன் முனைப்போடு வாழ வகை செய்கின்றார். ஒரு கவிஞர்,

""வீட்டில் நுழைய படியால் இரு
விண்ணில் பறக்க ஏணியாய் இரு""
எனப் பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகின்றார் ஆ. சின்னப்பன்

வாழ்வியல் சமூக விழிப்புணர்வு

வள்ளலார் வகுத்த வாழ்க்கை முறையானது நித்திய ஒழுக்கம், கருணை உள்ளம், சன்மார்க்கம், ஜீவகாருண்யம், ஆன்மநேயம் அனைத்தையும் உடையதே வாழ்க்கை ஆகும். ஒழுக்கமில்லாத வாழ்வு காவலில்லாத ஊரைப் போன்றதாகும். மனித வாழ்க்கை என்னும் பாய்ந்தோடும் பெருநதிக்கு ஒழுக்கமே இருகரை போன்றதாகும். எனவே நல்லொழுக்கம் பெற, மனப்பக்குவம் அடைய, உடலைப் பக்குவப்படுத்த வேண்டும்.
அதனோடு சாதி சமய வேற்றுமைகளைக் களைய வேண்டும். அதற்கு அரசும் பல விதங்களில் உதவி செய்து வருகின்றது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு உதவித்தொகை வழங்குகின்றது. ஏழைப் பெண்களுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் உதவித்தொகை வழங்குகின்றது.

இலக்கியச் சமன்பாட்டில்
கவிதை உருக்கழிய
விடையை மட்டுமே
சரிபார்க்கும் வாழ்க்கை!
என வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்குகின்றார்.

முடிவுரை

இவ்வாறு இக்கால இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை சிக்கல்களையும் பெண்களையும் அவர்களின் உயர் மதிப்பினையும் மதப்பற்று மிக்கவர்களாகவும், கல்வி அறிவு மிக்கவர்களாகவும் ""ஆணுக்குப் பெண் இங்கு அடிமை இல்லை"" என்னும் கூற்றிற்கு இணங்க இக்கால இலக்கியங்கள் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

துணை நுhல்கள்

1.முனைவர் த. தென்னரசு: இலக்கியமும் வாழ்வியலும், செல்வி பப்ளிகேசன்ஸ், சேலம்-7       முதல் பதிப்பு-2008
2.சேதுபதி: குடைமறந்த நாளின் மழை. ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-18, முதல் பதிப்பு-1999
3.அரங்க. சுப்பையா: இலக்கிய திறனாய்வு: இசங்கள்-
கொள்கைகள்: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, ஐந்தாம் பதிப்பு  2007
4.கவிஞர். சின்னப்பன்: துணிவுடன் வாழனும் அம்மா! : ஸ்ரீவிக்னேஸ்வரா கிராஃபிக்ஸ், சென்னை-14, முதல் பதிப்பு : 2011

திருக்குறள் வெளிப்படுத்தும் உணவே மருந்து

பா. மணிவண்ணன்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.

திருக்குறள் வெளிப்படுத்தும் உணவே மருந்து


மனிதன் பிறக்கின்ற பொழுதே நோய்களுடன் பிறக்கின்றான் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்பது அனுபவத்தின் மொழி.  எவ்வளவு செல்வங்கள் மனிதனுக்கு இருந்த பொழுதிலும் நோயின்மையே மிகப்பெரிய செல்வமாகக் கருதப்பட்டது.  இத்தகு நோயின்மை வாழ்வுக்கு முதற்காரணமாக அமைவது உணவாகும்.  உணவே மனிதன் உயிர்வாழ அடிப்படையாக அமைகிறது.

உடம்பு செயல்பட வேண்டிய சக்தியை உணவு தருகின்றது.  நமக்குப் பல்வேறு பணிகளைச் செய்ய சக்தி தேவை.  இந்த இயக்குச் சக்தியை நாம் உண்ணும் உணவு வழங்குகின்றது.  நாம் விழித்திருக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும் நமது உள்ளுறுப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன.  அவை செயல்படுவதால் தான் நாம் உயிர் வாழ்கின்றோம்.  நமது இரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற இருதயம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.  நாம் பிராண வாயுவை உட்கொண்டு, கரியமிலவாயுவை வெளியிட சுவாசப் பைகள் செயல்படுகின்றன.  உண்ட உணவை வயிறும் குடல்களும் செரிக்கச் செய்கின்றன.  செரித்த உணவின் சாரம் உடம்பின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.  நமது உடம்பின் கழிவுப் பொருட்களை வெளியேற்ற குடலும், சிறுநீரகமும் பணி செய்கின்றது.  மூளை எண்ணத்தின் மூலமாகி உடம்பினை இயக்குகின்றது.  இத்தகைய அக உறுப்புகளின் பணிகள் முறையாக நடைபெறவேண்டிய சக்தியினை உணவே தருகிறது.  சரியான உணவு முறையை ஒருவன் கடைப்பிடிப்பானேயானால் அவன் நோயற்ற வாழ்வை வாழத் தகுதியுடையவனாகிறான்.  இத்தகு உணவு மருத்துவத்தின் சிறப்பை வள்ளுவத்தின் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

செரிமானம்

செரிமானம் என்பது உண்ட உணவு முழுமையாக நமது உடம்பில் சக்தியாகவும்,
சிதைகளாகவும் மாறுகின்ற நிலையாகும்.  உண்ட உணவு செரித்தப் பின்பு அடுத்தவேளை உணவை மேற்கொள்ளும் போது ஆரோக்கியமான வார்வை வாழ முடியும் என்பது அறிஞர்களின் கருத்து.  ஆதலால்தான் வள்ளலார் பசித்திரு தனித்திரு விழித்திரு என்றார்.  செரிமானம் சரியான முறையில் நிகழ வேண்டுமென்றால் வயிற்றை முக்கால் பாகம் உணவாலும் கால்பாகம் நீராலும் நிரப்ப வேண்டும்.  உணவு நிரம்பியது போது வயிற்றில் வெற்றிடம் இருக்க வேண்டும்.  அப்போது செரிமானம் சிறந்து முறையில் நிகழும்.  மிகுதியாக உண்ணுவதால் பல்வேறு நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றன.  உணவு செரிமான நிகழ்வில் கல்லீரம், சிறுகுடல் போன்ற பகுதிகள் செயல்படுகின்றன.
""""உணவை வாயில் இட்டதும் முதலில் உமிழ்நீர் செரிமானத்தைத் துவக்குகிறது.  பின்னர் அந்த உணவு சிறிது சிறிதாக இரப்பைக்குள் தள்ளப்படுகிறது.  இரப்பை நீரிலுள்ள நொதிகள் உணவைச் செரிக்க உதவுகின்றன.  அதன் பிறகு சிறுகுடலில் சுரக்கும் நீர்களால் செரிமானம் நிறைவடைகிறது. சுரக்கும் நீரின் அளவு சற்று கூடினாலும், குறைந்தாலும் செரிமானம் கெடும்.  இதேபோல், இரைப்பைக்குள் சுரக்கும் ஹைடிரோகுளோரிக் அமிலத்தின் அளவில் மாற்றம் ஏற்படினும் செரிமானம் சீர்கெடும்""   (கூ.கு. அருணாச்சலம், அறிவியல் ஆயிரம் - ப. 29)
என்ற கருத்து செரிமானத்தின் தேவையைச் சுட்டுகிறது.  மனிதனுக்கு உண்மையான பசி என்பது செரிமானம் ஆனப் பின்பே ஏற்படும்.  ஆதலால் தான் பசித்துப்புசிஎன்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.  உண்ட உணவு செரித்தப் பின்பும், வேண்டாத கழிவுப் பொருட்கள் வெளியேறிய பின்பும்தான் உண்மையான பசி ஏற்படும்.  அப்போதுதான் அடுத்த வேளை உணவை நாம் உண்ண வேண்டும்.  இதனை,

""""அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
  பெற்றான் நெடிதுய்க்கு மாறு"" (குறள். 943) என்ற குறளும்,  
""""மருந்தென வேண்டவான் யாக்கைக்கு அருந்தியது
  அற்றது போற்றி உணின்""   (குறள். 942)   என்ற குறளும்,

""""அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
  துய்க்க துவரப் பசித்து""  (குறள். 944)   என்ற குறளும்,
""""தீஅளவு அன்றித் தெரியாது பெரிதுண்ணின்
  நோயளவு இன்றிப் படும்""  (குறள். 947)

என்ற குறளும் வெளிப்படுத்தியுள்ளது.  ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்தப் பிறகும், செரிக்கக் கூடிய அளவை அறிந்து கொண்டும் உண்பான் என்றால் நோய் ஏற்படாது; மருந்தும் அவனுக்கு அறவே தேவைப்படாது. நீண்ட ஆரோக்கிய வாழ்வை வாழமுடியும் என்பது வள்ளுவரின் மருத்துவச் சிந்தனையாகும்.
உண்ணா நோன்பு
உண்ணா நோன்பு வாழ்க்கை நெறியாக, உடல் நலம் காக்கப் பின்பற்றும் வழிமுறையாக இருக்கின்றது.  இதன் நோக்கம் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து, அஃது புத்துணர்வும் புத்தாக்கமும் பெறச் செய்வது.  உண்ணாமலிருக்கும் காலத்தில் கழிவுப் பொருட்கள் நீங்குகின்றன.  உடம்பில் தேவைக்கு மேல் தேங்கிக் கிடக்கும் சத்துக்கள் பயன்படுகின்றன.  இஃது மருத்துவ உலகில் உடல் nhநயைப் போக்கும் வழிமுறையாகப் பின்பற்றப்படுகிறது.  உண்ணாநோன்பு உடலிலிருக்கும் நச்சுப் பொருட்களை அகற்றுகின்றது.  உடலில் உள்ள துவாரங்களை அழுக்கு அடைத்துக் கொள்வதாலும், செரிக்க உதவும் குடலை வேண்டாத உணவுப் பொருட்களைக் கொண்டு நிரப்புவதாலும் உடம்பின் சமநிலை கெடுகின்றது.  உண்ணாமலிருக்கின்ற பொழுது குடலில் ஏற்படும் இடைவெளி உடல் நலத்தைச் சமநிலைக்குக் கொண்டு வருகின்றது.  உண்ணாநோன்பு காலத்தில் அகவுறுப்புகள் ஓய்வு பெற்று உடல் புத்தாக்கம் பெறுகின்றது.

""""எல்லோருடைய உடலிலும் புற்று நோய்ச் செல்கள் தங்களைப் பெருக்கிக் கொள்ளும் போதுதான் உடம்பில் கட்டிகள் தோன்றி உயிர்க் கொல்லிகளாக மாறுகின்றன.  உண்ணாவிரதம் இருக்கும் போது உடலில் உள்ள நல்ல  செல்கள் சூழ்நிலைக்கேற்ப தங்களைச் சரி செய்து கொள்கின்றன.  ஆனால், புற்று நோய்ச் செல்கள் எப்போதும் இந்தப் புதிய சூழ்நிலைக்கு ஒத்துப்போகாமல் இறந்து விடுகின்றன""   (க. சுப்ரமணியன், தமிழில் மருந்து,  ப. 24)

என்ற கருத்து உண்ணா நோன்புன் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.
அறிவியல் நுட்பம் வாய்ந்த வள்ளுவப்பெருந்தகை உண்ணா நோன்பின் மூலம் மனிதன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ முடியும் என்று குறிப்பிடுகிறார்.  இதனை,
""""உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
  இன்னாச்சொல் நோற்பானின் பின்"" (குறள்  160)

என்ற குறளின் வழி அறியமுடிகின்றது.  இதன்வழி விரதத்தின் தன்மையையும் அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தையும் அறிந்த பெரியோர்கள் இதனை கடைப்பிடித்து சிறந்து வாழ்ந்தனர் என்பது பெறப்படுகின்றது.

அளவான உணவு

""""அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"" என்பது ஆன்றோர் மொழி.  அளவறிந்து உண்பது அறிவியல் முறை.  தன்னை, தனது உடல்நிலையை, உடலின் தேவையை அறிந்து கொண்டால்தான், தான் உண்ண வேண்டிய உணவின் அளவையும் தீர்மானிக்க முடியும்.  ஒவ்வொருவருக்கும் தேவையான உணவின் அளவும் இயல்பும் வேறுபடும்.  தான் எடுத்துக் கொள்ளும் சத்துணவின் அளவு குறையும் போதும் நோய்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் குறைகின்றது.  அதே சமயம் குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு மீறி உண்ணும் போது இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு, புற்று நோய் போன்ற வியாதிகள் தோன்றுகின்றன.
""""ஒருவர் உட்கொள்ளும் உணவு வகைகள் அவரது உடம்பில் வாதம், பித்தம், கபம் என்ற முத்தாதுக்களைச் சமநிலையில் வைத்திருக்கத் தகுதியுடையவையாகயிருத்தல் வேண்டும்.  இத்தகைய உணவுப் பொருட்களின் சேர்மானம்தான் சமநிலை உணவுஎனப் பழங்கால மருத்துவத்தில் உணர்த்தப்பட்டுள்ளது""   

(இரா. நிரஞ்சனாதேவி, தென்னிந்திய மருத்துவ வரலாறு,  ப.167)

என்ற கருத்தானது சமநிலை உணவைப் பேணவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.  ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவு கலோரி எனும் வெப்ப சக்தியில் அளக்கப்படுகிறது.  கடுமையான வேலை செய்பவர் 1800 கலோரி சத்துள்ள உணவினையும் அதை தவிர்த்த மற்றவர்கள் 1200 கலோரி சத்துள்ள உணவையும் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது.  இத்தகைய நிலை சங்கத் தமிழர்கள் மருத்துவ உலகிற்கு வழங்கினர் என்றால் அஃது மிகையாகாது.  இதனை,

""""இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
  கழிபேர் இரையான்கண் நோய்""(குறள். 946)
என்ற குறளானது பதிவு செய்துள்ளது.   
 இதன்வழி அளவறிந்து உண்ணாதவன் உடலில் நோய் நீங்காது குடியிருக்கும் என்பது பெறப்படுகிறது.  இந்த நிலையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் உடல் எவ்வித நோய்க்கும் ஆட்படாது, ஆரோக்கியமாக இருக்கும்.
பசிநோய்
நோய்களுள் மிகவும் கொடிது பசிநோய்  பசி வந்திட பத்தும் பறந்து போம்என்ற பழமொழி அதனை நிறுவுறுகிறது.  ஒருவனுக்குப் பசி நோய் ஏற்பட்டால் மனதளவில் மட்டுமல்லாது, உடல் அளவிலும் பாதிப்புகளை அடைகிறான்.  பசி உயிர்க்கொல்லி நோயாகவும் செயல்படுகிறது.  உடலில் ஊட்டச் சத்துக்கள் சில பொருள்கள் இரத்தத்தில் இல்லாமல் போகும் பொழுது பசிநோய் ஏற்படுகிறது.  இந்நோய் தொடரும் போது உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்து சோர்வடைந்து உயிரிழக்கும் நிலைக் கூட ஏற்படுகிறது.
""""பசியும் அதனால் ஏற்படும் உடல் மாற்றங்களைக் கொண்டுதான் அதற்குப் பசிப்பிணி என்று பசியைப் பிணியாகக் கொண்டனர்.  உண்ணாமையால் உடல்வாடல், கண்ணில் நீர்வடிதல், அதிகமாக வியர்த்தல், தசை சுருக்கப்படுதல், எலும்புகள் எடுப்பாக தெரிதல் ஆகியவைகள் உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் ஆகும்"" (கண்ணகி கலைவேந்தன் (ப.ஆ), தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,  ப. 345)
என்ற கருத்தானது பசிப்பிணியின் கொடுமையைப் பதிவு செய்துள்ளது.
""""பாத்தூண் மரீஇ அவனைப் பசிஎன்னும்
  தீப்பிணி தீண்டல் அரிது""   (குறள். 227)

என்ற குறளின் வழி, பழந்தமிழர்கள் கொடிய பசிநோயை யாரும் அறியக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தள்ளதை அறியமுடிகிறது.  மேலும்,
""""உண்டிக் கொடுத்தோரோ உயிர்க் கொடுத்தோர்""
""""பசிப்பிணி மருத்துவன் சிறுகுடிகிழான்""
""""வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்""
   (சத்திய தருமசாலை நிறுவிய வள்ளலார்)
""""தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லையேல்
 ஜெகத்தினை அழித்திடுவோம்""  பாரதி
என்பன போன்ற கருத்துக்கள் பசிப்பிணியை விரட்டும் நோக்கில் எழுந்தது என்பது தமிழ் சமூக வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.
முடிவுகள்
சரியான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளும்போது மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களைத் தவிர்த்து நீண்ட நலமான வாழ்வை வாழ முடியும் என்பது அறியப்படுகிறது.
உண்பது செரித்தப் பின்னர் மறுஉணவு உண்ணும் போது நோயற்ற வாழ்வு காக்கப்படுகிறது.
அளவான உணவும், பசித்தப்பின் உண்பதும் நலமான வாழ்வுக்கு அடிப்படை.
பண்டைய தமிழர்கள் உணவை மருந்தாகப் போற்றி உடலைப் பேணிக் காத்ததை அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.கண்ணகி கலைவேந்தன்.,தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,
தமிழய்யா வெளியீட்டகம்,திருவையாறு  04,
முதற்பதிப்பு  2005.
2.குருசாமி.மா.பா.,மருந்தாகும் உணவு,
குரு  தேமொழி,திருச்செந்தூர் - 215,
முதற்பதிப்பு  1999.
3.சுப்ரமணியன்.ச.,தமிழில் மருந்து,
லஷ்மி பதிப்பகம்,வேலூர் - 632 001,முதற்பதிப்பு  2005.
4.நிரஞ்சனா தேவி.இரா.,தென்னிந்திய மருத்துவ வரலாறு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை  600 113,
முதற்பதிப்பு  2004.
5.பாலசிவகடாட்சம்.,தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்,
மணிமேகலைப்பிரசுரம்,சென்னை  600 017, முதற்பதிப்பு  2009.