Pages

Tuesday 14 April 2015

பழந்தமிழ் இலக்கியங்களில் மண்ணியல்

து.பிரபா,          
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை
அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
சேலம்-7.

          பழந்தமிழ் இலக்கியங்களில் மண்ணியல்

திங்களொடும் செழும்பாதி தன்னொடும் விண்ணோடும் உடுக்களோடும்
 பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ்

என்ற பாவேந்தார் பாரதிதாசனின் பாடல் வழி தமிழ் மொழியின் தொன்மையினை அறியலாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியார் காலத்திற்கு முன்பிருந்தே மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருந்து, அளவியல், எண்கள், உடை, அணிகலன், இசை, நாட்டியம், கட்டடக்கலை, ஓவியக்கலை முதலிய பலதுறைகளில் அறிவியல் வேரூன்றித் தொடார்ந்திருக்கிறது. அறிவியல் தமிழுக்கும் புதிதல்ல் தமிழருக்கும் புதிதல்ல. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களில் மண்ணியல் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பூமி உருவாதல்
     சூரியன் என்ற மிகப்பொய நட்சத்திரத்திலிருந்து சிதறிய அக்கினிக் குழம்பான ஒரு பகுதியை பூமி என்ற கோளாக உருமாறியது. இதனை,
ஒளிபாதியியக்கத்தாற் சிதைந்ததோர் பகுதி உலகமாகி   (யாழ் நூல்- சிறப்புப்பாயிரம்)
என்ற அடி உறுதி செய்கின்றது. அவ்வாறு அக்கினிக் குழம்பாக இருந்து திரள்ச்சியுற்ற பூமி குளிர்ச்சியுற்று மேற்பாகம் கல்லாகிக் கொண்டது. அந்தக் கல்லிலிருந்து மெதுமெதுவாக நிலப்பரப்பு தோன்றியது. இதற்கு எண்ணற்ற ஆண்டுகள் ஆகியது. இவ்வாறு முகிழ்ந்த நிலப்பகுதியில் உருவானது தான் குமாக்கண்டம். அது பழந்தமிழான் தாயகம். குமாக் கண்டத்தில் ஆதியில் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்பது மானுட ஆய்வாளார்களின் கருத்தாகும். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தனுர்கோடி அழிந்தது போல எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன் குமாக்கண்டமும் அழிந்தது. இதனை,
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
 பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
 குமாக்கோடும் கொடுங்கடல் கொள்ள                                          (மதுரைக்காஞ்சி, 18-20)

என்ற அடிகள் உறுதிசெய்கின்றன.
நிலம் பற்றிய செய்திகள்
மனிதார்கள் வாழும் பூமியில் மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் இருக்கின்றது. சூழ்ந்திருக்கும் நீருக்கிடையே தான் நாடுகள் இருக்கின்றன. அந்நாடுகள் மண்ணாலும் மணலாலும் ஆனவை. அம்மண்ணைத் தமிழார்கள் பூமித்தாய் என்றும் நிலமடந்தை என்றும் கூறுகின்றனார். இதனை,
     நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
                                       (தமிழ்த்தாய் வாழ்த்து-1)
என்ற அடியின் வாயிலாக அறியலாம். தமிழில் முதற்பொருள் எனப்படுவது நிலமும் பொழுதுமாகும். நிலம் என்பது தோன்றுவதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதம் என்று தொல்காப்பிய உரை கூறுகின்றது.

ஐவகை நிலம்
  நிலப்பகுதியை ஐந்து வகையாகப் பிரிப்பார். அவை
1.             மலையும் மலைசார்ந்த நிலப்பகுதி குறிஞ்சி
2.             காடும் காடுசார்ந்த நிலப்பகுதி              முல்லை
3.             வயலும் வயல்சார்ந்த நிலப்பகுதி      மருதம்
4.             கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதி      நெய்தல்
5.             சுரமும் சுரம் சார்ந்த நிலப்பகுதி       பாலை
(அ) வளம் குன்றிய பகுதி

என்றழைக்கப்படுகின்றன. இதனை,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே                                (தொல்.பொருள், நூற்-6)

என்ற நூற்பாவின் வாயிலாக அறியலாம்.

குறிஞ்சி:
     மைவரை(மலை) உலகிற்கு குறிஞ்சிப்பூ சிறந்தது, எனவே, அப்பகுதி குறிஞ்சி நிலம் எனப்பட்டது. இதனை,
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
 பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே                   (குறுந்தொகை, 3:3-4)

என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.
முல்லை:
      காடும் காடுசார்ந்த உலகிற்கு முல்லைப் பூ சிறந்தது. எனவே அப்பகுதி முல்லை நிலம் எனப்பட்டது. இதனை,
நெல்லொடு
 நாழி கொண்டநறுவீ முல்லை
 அரும்பவிழ் அலா தூஉய்                        (முல்லைப்பாட்டு-10:13)

என்ற அடிகளின் வாயிலாக அறியலாம்.
மருதம்:
     தீம்புனல் (வயல்) உலகிற்கு மருது சிறந்தமையால் அப்பகுதி மருத நிலம் எனப்பட்டது. இதனை,
இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
 தாழ்சினை உறங்குத் தண்துறை ஊர                                                             (அகம். 286)

என்ற அடிகளின் வாயிலாக அறியலாம்.

நெய்தல்:
     பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையால் அப்பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. இதனை,
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்                                                (குறுந்தொகை -9)

என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.

பாலை:
     தொல்காப்பியார் பாலைக்கு நிலம் கூறாது, வேனிற் காலமும் நண்பகலும் கூறியுள்ளார். முல்லையும் குறிஞ்சியும் தம்முள் திரிந்ததே பாலை சொல்லப்படுகிளது. இதனை,
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயார் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்         (சிலம்பு, காடுகாண்:64-66)

என்ற சிலப்பதிகார அடிகள் உறுதி செய்கின்றன.
பாலை என்பதற்கு நிலம் இல்லையென்றாலும் வேனிற்காலம் வருவதால் அக்காலத்தில் தளிர்கள் வாடுவதில்லை. பாலை என்பதோர் மரம் உண்டாவதால் அச்சிறப்பு ஷேநாக்கி பாலை என்று தொல்காப்பியார் குறிப்பிட்டார். என்பதை இளம்பூரணார் உரை வாயிலாக அறியலாம். இவ்வைந்து நிலங்களில் பாலை நிலத்தைத் தவிர்த்து ஏனைய நிலங்களை நன்செய் நிலம்என்றும், ‘ புன்செய் நிலம்என்றும் பிரித்தனார். இவற்றில் மருதமும் நெய்தலும் நன்செய் நிலம்ஆகும். குறிஞ்சியும் முல்லையும் புன்செய் நிலம்ஆகும். இந்நிலங்களில் எவ்வகைத் தாவரங்கள் நடவேண்டும் என்பதையும் கண்டுருந்தனார். மேற்கூறிய ஐந்து வகையான நிலப்பகுதிகள் தமிழார் வாழ்வோடு தொடார்புடையவையாகும். எனவே அந்நிலங்கள் தொடார்பான தெளிவான அறிவு அவார்களுக்கு இருந்திருக்கின்றது என்பதை உணரலாம். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மண்ணைப் பற்றியும் தமிழருக்குத் தெளிவான அறிவு இருந்திருக்கின்றது. மண் சார்ந்த அறிவை மண்ணியல் என்பார்கள்.
மண்வகைகள்:
     விவசாயம் செய்யவும், குடியிருப்புகள் அமைக்கவும், பண்பாட்டு அரங்கங்கள் அமைக்கவும் மண்ணியல் தொந்திருக்க வேண்டும். கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழன் மண்ணிலும் பலவண்ணம் கண்டிருக்கின்றான். மண்ணை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றான்.
1.             எளிதில் தரையில் வெட்டி எடுக்க இயலாத கடினமண்.
2.             சிறுமணல் கலந்தபடி எளிதில் வெட்டியெடுக்கும் வகையான மண்.
3.             மேற்சொன்ன இரண்டுக்கும் நடுவே நடுத்தரமாக உள்ள மண்.
கட்டடம் கட்டுவது தொடார்பான மண்ணியல் அறிவு:
     இந்த மண்ணியல் நுணுக்கத்தை ஒத்ததாக அறிவு சிலப்பதிகாரத்தில் மாதவியின் நடன அரங்கேற்ற அரங்கு அமைக்க வெகுநுணுக்கமாக நிலப்பகுதியைத் தொவு செய்திருக்கின்ற செய்தியை,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
 மண்ணகம் ஒருவழி வகுத்தனார் கொண்டு
 புண்ணியநெடுவரைப் போகிய நெடுங்கழைக்
 கண்ணிடை ஒருசாண் வளார்ந்து கொண்டு                                 (அரங்கேற்: 95-98)

என்ற அடிகளின் வாயிலாக அறியலாம்.
     எந்த நிலப்பகுதியில் வெட்டியெடுத்த மண்ணைத் திரும்ப அதே நிலப்பகுதியில் கொட்டினால் அது சாயாக அமைகிறதோ அந்நிலமே அரங்கு, மாளிகை அமையப் பொருத்தமானதாகும். ஆகவே, எவ்வளவு மண்ணை வெளியே எடுக்கிறோமோ பிறகு அவ்வளவு மண்ணும் அதே இடத்தில் சோர்ந்து விடுகிறதோ அந்த நிலமே உறுதியானது. சாயானது அந்த இடத்தில் பாயாய கட்டடங்கள் கட்டலாம் என்பது பழந்தமிழான் மண்ணியல் அறிவாகும்.
நீரின் இயல்பை மாற்றுதல்
     பண்டைத் தமிழார், விசும்பிலிருந்து பொழிந்த நீரானது நிலத்தை அடையும் போது அதன் நிறம், சுவை முதலிய பண்புகள் மாறும் என்று கண்டறிந்துள்ளனார்.
இதனை,
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தார்க்
 இனத்தியல்ப தாகும் அறிவு                                                                                                 ( குறள்-452)

என்ற குறளின் வாயிலாக அறியலாம்.
விளை நிலங்களை சீர்திருத்துதல்
      பழந்தமிழார் விளை நிலங்ளை சீரிதிருத்தி பயிர் செய்தனார். சீர்திருத்தாத நிலம், சீர்திருத்தாத நாடு சீர்திருத்தாத சமூகம் எதுவும் முன்னேற்றம் அடைவதில்லை. எனவே, சீரான மண்ணும் மண்ணில் சீர்திருத்தமும் தேவையானதாகும். இதனை,
     பூமி திருத்தியுண்            (ஆத்திச்சூடி)
என்ற ஔவையார் பாடலின் வழி அறியமுடிகியது. இன்றைக்கும் கிராமங்களில் விவசாயி மண்ணைப் பார்த்தும், தொட்டும் அதன் தரம், அதில் என்ன விளையும் என்று சொல்கின்ற மண்ணியல் அறிவினைக் காணலாம்.

முடிவுரை:
     பண்டைத் தமிழார் பூமி உருவானதைப் பற்றியும் இவ்வுலகம் நீராலும் நிலத்தாலும் சூழப்பட்டுதைப் பற்றியும் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது. தான் வாழும் நிலங்களை ஐவகையாகப் பகுத்தும் அவற்றிற்கு பெயாட்ட முறையினையும் அறியமுடிகிறது. மூன்று வகையான மண்களையும், எந்த மண்ணில் எந்தெந்த கட்டடங்தளைக் கட்ட வேண்டும் என்ற தெளிவான அறிவு அவார்களுக்கிருந்ததையும், நிலத்தின் இயல்புக்கேற்ப நீரின் தன்மைமாறுபடும் என்பதையும், விளை நிலங்களைச் சீர்திருத்துதலையும் அறிய முடிகிறது. மேலும், அறிவியல் என்பது வாழ்க்கையோடு ஒன்றிய ஒன்று என்பதையும் தமிழான் வாழ்க்கையில் ஆதாரமாய் இருப்பதையும் இன்றைக்கும் அது பின்பற்றப்பட்டு வருவதையும் அறிய முடிகிறது.


No comments:

Post a Comment