Pages

Tuesday 14 April 2015

சேதுபதி தென்னரசு, சின்னயன் கவிதைகளில் சமூக விழிப்புணர்வு

ஆ.சித்ரா.முனைவர் பட்ட ஆய்வாளர்,சேலம்-7

சேதுபதி தென்னரசு, சின்னயன் கவிதைகளில் சமூக விழிப்புணர்வு

முன்னுரை

ஒரு நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் இலட்சக்கணக்கான இலக்கியங்கள் அவை உள்ளத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை தரவல்லன. அதனோடு மக்களின் வாழ்வையும், உணர்வுகளையும் தெளிவாகக் காட்டவல்லன இலக்கியங்கள். அருந்தமிழ் இலக்கியத்துறையில் வளர்ந்து வரும் துறைகளில் புதுக்கவிதை மிகச்சிறந்த துறையாக வளர்ந்து வருகிறது. வாழையடி வாழையாக வளர்ந்து வருகின்ற இத்துறை மக்களின் வாழ்வையும், வாழ்க்கைக் கூறுகளையும் யதார்த்தத்தோடும், நேர்முகத் தன்மையோடும் விளக்குவது இக்கவிதைத் துறையாகும். இங்கு சேதுபதி சின்னயன், தென்னரசு ஆகியோரின் கவிதைகள் கட்டுரையின் எல்லையாக அமைந்துள்ளது.

இலக்கியங்களின் குறிக்கோள்

மனிதர்கள் பற்றிய வரலாறு, புரிதல்கள் பலவற்றையும் பல கதை, கவிதைகளை விளக்குவதும் சிந்தனையைத் தூண்டுவதும் சங்க காலம் தொட்டு இக்காலம் வரை நமக்குப் பல இலக்கியங்கள் தூண்டுகோளாக உள்ளன. அதில் மனிதனுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைவது கவிதை இலக்கியம் ஆகும். இது பொழுதுபோக்கிற்காகவும், கவிதையைப் படிப்போன் அதனைப் படைக்கும் படைப்போன், ஆகிய இருவருக்கும் படைக்கும் செயல் படைக்கப்பட்ட பொருள் ஆகியன பொதுவாக அமையும் கருத்துக்களே இலக்கியத்தின் குறிக்கோளாகும். ஓர் இலக்கியத்தின் பண்பு பயன் ஆகியன அதன் உள்ளடக்கமாக அமைகின்றது எனின் அதுவே அதன் குறிக்கோள் ஆகும்.

இலக்கியத்தில் மனித உரிமை

இக்கால இலக்கியங்கள் மனிதநேய தன்மைகளை விளக்குபவையாகவும், கவிஞனின் தன் அனுபவ நோக்காகவும் அமைகின்றன. அவ்வகையில் சிறந்து விளங்கும் மனிதாபிமானம் எல்லோரிடமும் உருவானால் சண்டை சச்சரவுகள் அல்லாத சமாதான இராஜ்ஜியம் உருவாகும் என
மனிதா!
உன் விஞ்ஞானம் விண்வெளிக்குப் போகப் போக உன் மனிதாபிமானம் மண்குழிக்குப் போகிறதோ! என மனிதர்களைப் பார்த்துப் புலம்புகின்றார் ஒரு கவிஞர்.
பெண் சமுதாயத்தை பெருமைப்படுத்த வேண்டும் என பல கவிஞர்கள் நினைத்தாலும் அன்று முதல் இன்று வரை பெண்கள் தன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இழந்தவர்களாகவே வாழ்கின்றனர் என

""இன்றல்ல
நேற்றல்ல
நெருப்புக்குள் அவள்
அவளுக்கு நெருப்பு
அவனால் எரிகிறாள்!""
என்று மனித உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் துன்பத்தில் எரிந்து போவதாகக் கவிஞர் காட்டுகின்றார்.

சமூகத்தில் சிறியோர் நிலை

இன்றையக் குழந்தைகள் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும், லாட்டரி சீட்டு விற்பவர்களாகவும், காகிதம் பொறுக்குபவர்களாகவும் பிச்சை எடுப்பவர்களாகவும் இருக்கின்ற பிஞ்சு உள்ளங்களை மீட்டு கல்வியால் அறிவுக் கண்களை திறக்கவும் விரும்புகின்றார் ஒரு கவிஞர்

""குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகின்றவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டுவிட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?""
எனக் கேட்கின்றார். குழந்தைகளைக் காப்போம் அடிமைகள் இல்லா மனித சமுதாயத்தை உருவாக்குவோம் எனக் கூறுகின்றார்.
அந்நிலை மாறி தற்போது பல அரசுக் காப்பகங்கள், தொட்டில் குழந்தை திட்டம், அனைவருக்கும் கல்வி என்ற நிலை, சமச்சீர் கல்வி, அரசுப் பள்ளிகளில் புத்தகம், உணவு, உடை, போக்குவரத்துச் சலுகை எனப் பல உதவிகளையும் சிறந்த மாணவர்களுக்கு கல்விச் சலுகை, ஊக்கத் தொகை அதனோடு மட்டுமல்லாமல் சிறந்த மாணவர்களை உருவாக்கி நல்ல வேலைவாய்ப்பையும் கூரைகளே இல்லாத கிராமமாக மாற்றுவோம் என அனைவருக்கும் நல்ல வீடுகளைக் கட்டச் சலுகைகளையும் அதனோடு மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தி ஒரு சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குகின்றது.

இன்றைய பெண்கள் நிலை

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ந்து வருகின்றனர். அரசியல் துறையில் 33ரூ ஒதுக்கீடு பெற்று உள்ளனர். கல்வித் துறையில் பெண்களே முதன்மை பெறுகின்றனர். விளையாட்டுத்துறை, விஞ்ஞானத்துறை இதில் பெண்களே அதிகம் வளர்ந்து வருவதால் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது. பல புதிய கருவிகளை பயன்படுத்தி உணவு முறைகளையும், புதிய கருவிகளையும் பயன்படுத்தி உயர்ந்து விளங்குகின்றனர். அது மட்டுமல்லாமல்

மனைவியும் இழந்துவிட்டால்
மறுமணமும் செய்து கொண்டார்
துணைவரும் இழந்துவிட்டால்
துணிவுடன் வாழணும் அம்மா!
எனப் பெண்களை தன் முனைப்போடு வாழ வகை செய்கின்றார். ஒரு கவிஞர்,

""வீட்டில் நுழைய படியால் இரு
விண்ணில் பறக்க ஏணியாய் இரு""
எனப் பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகின்றார் ஆ. சின்னப்பன்

வாழ்வியல் சமூக விழிப்புணர்வு

வள்ளலார் வகுத்த வாழ்க்கை முறையானது நித்திய ஒழுக்கம், கருணை உள்ளம், சன்மார்க்கம், ஜீவகாருண்யம், ஆன்மநேயம் அனைத்தையும் உடையதே வாழ்க்கை ஆகும். ஒழுக்கமில்லாத வாழ்வு காவலில்லாத ஊரைப் போன்றதாகும். மனித வாழ்க்கை என்னும் பாய்ந்தோடும் பெருநதிக்கு ஒழுக்கமே இருகரை போன்றதாகும். எனவே நல்லொழுக்கம் பெற, மனப்பக்குவம் அடைய, உடலைப் பக்குவப்படுத்த வேண்டும்.
அதனோடு சாதி சமய வேற்றுமைகளைக் களைய வேண்டும். அதற்கு அரசும் பல விதங்களில் உதவி செய்து வருகின்றது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு உதவித்தொகை வழங்குகின்றது. ஏழைப் பெண்களுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் உதவித்தொகை வழங்குகின்றது.

இலக்கியச் சமன்பாட்டில்
கவிதை உருக்கழிய
விடையை மட்டுமே
சரிபார்க்கும் வாழ்க்கை!
என வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்குகின்றார்.

முடிவுரை

இவ்வாறு இக்கால இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை சிக்கல்களையும் பெண்களையும் அவர்களின் உயர் மதிப்பினையும் மதப்பற்று மிக்கவர்களாகவும், கல்வி அறிவு மிக்கவர்களாகவும் ""ஆணுக்குப் பெண் இங்கு அடிமை இல்லை"" என்னும் கூற்றிற்கு இணங்க இக்கால இலக்கியங்கள் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

துணை நுhல்கள்

1.முனைவர் த. தென்னரசு: இலக்கியமும் வாழ்வியலும், செல்வி பப்ளிகேசன்ஸ், சேலம்-7       முதல் பதிப்பு-2008
2.சேதுபதி: குடைமறந்த நாளின் மழை. ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-18, முதல் பதிப்பு-1999
3.அரங்க. சுப்பையா: இலக்கிய திறனாய்வு: இசங்கள்-
கொள்கைகள்: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, ஐந்தாம் பதிப்பு  2007
4.கவிஞர். சின்னப்பன்: துணிவுடன் வாழனும் அம்மா! : ஸ்ரீவிக்னேஸ்வரா கிராஃபிக்ஸ், சென்னை-14, முதல் பதிப்பு : 2011

No comments:

Post a Comment