Pages

Tuesday 14 April 2015

அணியிலக்கணம்



அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
1.        ன்மை அணி
2.        உவமையணி
3.        உருவக அணி
4.        பின்வருநிலையணி
5.        தற்குறிப்பேற்ற அணி
6.        வஞ்சப் புகழ்ச்சியணி
7.        வேற்றுமை அணி
8.        இல்பொருள் உவமையணி
9.        எடுத்துக்காட்டு உவமையணி
10.     இரட்டுறமொழிதலணி
 
1.உவமையணி பற்றிஒரு கட்டுரை வரைக.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது.
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது.
தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது
உவமையணி மூன்று வகைப்படும்.
அவையாவன: பண்பு உவமையணி
, தொழில் உவமையணி, பயன் உவமையணி
 
பண்பு உவமையணி
உதாரணம்: குத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
 தொழில் உவமையணி
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம்
, தாவும் மனம்.
 பயன் உவமையணி
உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
·         உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
 
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
 உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
 உவமை உருபுகள்
உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
 பொதுத்தன்மை
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)
சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
 உவமைத்தொகை
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.

இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் - மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:

1- எடுத்துக்காட்டு உவமையணி
2- இல்பொருள் உவமையணி
 எடுத்துக்காட்டு உவமையணி
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு

மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
 இல்பொருள் உவமையணி
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.
 
2. உருவக அணி பற்றி ஒரு கட்டுரை வரைக.

உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை.

எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்.
·         பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
·         மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.

எடுத்துக் காட்டுகள்
·         உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
·         உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
·         உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
·         உருவக அணி - புலி வந்தான்
·         உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
·         உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
·         உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
·         உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
 
 3. தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன? விளக்குக.
 
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
 
எ.கா:
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட                                        சிலப்பதிகாரம்
 விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

No comments:

Post a Comment