Pages

Sunday 1 November 2015

சிற்றிலக்கிய உரை வரலாறு



சிற்றிலக்கிய உரை வரலாறு

                                 முனைவர்.சி.வீரமணி,
                    உதவிப்பராசிரிர்,  விவேகானந்தர் கல்லுhரி, சென்னை-4.

     தமிழிலக்கிய வரலாற்றில் சிற்றிலியக்கியங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகின்றது. இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டு மனிதனின் சிந்தனைக்கும், உணார்வுக்கும், கற்ர்பனைக்கும் விருந்தாக அமையும். மனித மொழியோடு தொடார்பு கொண்டு சொற் கோலமாகவும், ஒரு குறிப்பிட்ட வடிவினை செய்யுளாலோ உரைநடையாலோ கொண்டு விளங்கும். கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், மலார்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாயந்தது.  இலக்கியம் இன்புறுவதோடு இல்லாமல் அறிவுறுத்தும் ஆற்றல் வாய்ததாகவும் விளங்குகிறது.
     சிற்றிலக்கியங்கள் பொருளமைதியால் மாறுபட்டவையாயிருப்பினும் சுவை தருவதில் வேறுபட்டவையல்ல. சிற்றிலக்கயங்கள் தரும் சுவை பாலொடு

சிற்றிலக்கிய பதிப்பு வரலாறு



சிற்றிலக்கிய பதிப்பு வரலாறு

 

                                 முனைவர்.சி.வீரமணி,  உதவிப்பேராசிரிர்
                                  தமிழ்த்துறை சென்னை.4.

     தமிழ் சமூகத்தின் தலைமை சான்ற இலக்கண இலக்கிங்கள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உயிர்புடனும் துடிப்புடனும் தமிழார் தம் மனதைக் கவர்ந்துள்ளன. அவ் இலக்கியங்களை தொடார்ந்து நீதி நுhல்கள், காப்பியங்கள், பக்கி இலக்கியங்கள் முதலானவை பல்கிப் பெருகின. இக்காலத்தில் தமிழர் தம் ஆட்சி சிறப்புற்று விளங்கிய போதும் தமிழ் அரசர்களுக்குள் பகைமை உணர்வு மேலேங்கி தங்களுக்குள்ளே போரிட்டு கொண்டனர். இச்சமயத்தில் தமிழ் அரசார்களுக்கு உதவும் பெருட்டாக தமிழகத்துள் உட்புகுந்த வேற்று அரசர்கள் ஆட்சி அதிகாரங்களை தமதாக்கிக் கொண்டனர். அவர் தம் காலங்களில் அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு சிற்றிலிக்கியங்கள் தோன்றலாயின. அதனால் என்னவோ நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது, என்பன போன்ற பழமொழிகள் தோன்றலாயின. இவற்றுள் பள்ளு, குறம் போன்ற இலக்கியங்கள் தெருக்கூத்தாகவும் மேடை நாடகங்களாகவும் நடிக்கப் பெற்று மக்கள் மத்தியில் பரவலாயின.

புறநானூற்று வழி பரணி



புறநானூற்று வழி பரணி

முனைவர் நா.செண்பகலெட்சுமி
துறைத்தலைவர் இணைப்பேராசிரியார்,
தமிழ்த்துறை,
அரசினர் மகளிர்கலைக்கல்லூரி,
சேலம்-8.

இலக்கியம் என்பது மனிதார்களின் வாழ்விலிருந்து எழுந்து அவ்வாழ்வியலை விளக்குவதோடு அதனைச் செழிப்புறச் செய்வது. இலக்கியத் தோற்றமும், அதன் வாழ்வும் இடையீடு இன்றி இயங்கி வருவதால் தான் இலக்கியத்துறை உயிhர்ப்புடன் உள்ளது. இத்தகைய இலக்கியங்கள் பலவாக இருந்தாலும், அவற்றின் பாடுபொருள் மானுட வாழ்வின்  தேடலாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பற்றியே அமைகின்றது. இந்நாற் பொருள்களும் எக்காலத்திற்கும் பொதுவானவையே ஆகும். பாடுபொருள் நான்காக இருப்பினும், அவற்றைப் பாடும் இலக்கியங்கள் பல்கிப் பெருகிக் காணப்படுகிறது. அதன் காரணம், படைப்பாளியின் புதுமை படைக்கும் விழைவேயாகும். இப்புதுமை என்பது பாடுபொருளில் நிகழாது. அவற்றின் வடிவங்களில் நிகழக் கூடியது. வடிவம் என்பது செய்யுள், உரைநடை என்கின்ற மொழி வடிவங்களை மட்டுமல்லாமல், அவற்றின் உறுப்புகளையும் சோர்த்துரைப்பதாகும். அதாவது, சொல்நயம், பொருள்நயம், உத்தி, கற்பனை, அணி, கூறும் திறன் முதலானவற்றையும் இணைத்துக் கூறப்படுவது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இலக்கிய வகையும் வளர்ச்சியும் ,ஆற்றுப்படைப் பாடல்களும் தனி இலக்கிய வகைமை வளர்ச்சியும்



 

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இலக்கிய வகையும் வளார்ச்சியும் முனைவர். இரா.இலட்சாராமன்,

   மேனாள் முதல்வா,
   ஸ்ரீமத்.சி.பா.சு.த.க.அ.கல்லூரி, மயிலம் - 604 304.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பல்வேறு இலக்கிய வகைகளின் கூறுகள் காணப்பெறுகின்றன. அவை பின்னார் இலக்கிய வகைகளாக வளார்ச்சிப் பெறுகின்றன.
அவ்வகையில் பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம், உறுப்புகள், உந்தியார், காப்பு, பதிகம், அந்தாதி, பாவைப்பாடல்கள், தூது, திருப்பள்ளியெழுச்சி, விருத்தம், மாலை, திருமடல், பாதாதிகேசம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பிள்ளைத்தமிழ்

சதக இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கூறுகள்




 சதக இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கூறுகள் 


அரங்க.சீனிவாசன், உதவிப்பேராசிரியா;,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.


எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு  திருவள்ளுவா;
மானமும் அறிவும் மனிதற்கு அழகு  தந்தை பொpயார்
அழகான பொன்னுதான் அதற்குஏற்ற கன்னுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் மட்டும் தான்
 திரைப்படப்பாடல்
இந்த வாpகளோடு சதக இலக்கியங்களின் வாழ்வியல் கூறுகள் என்னும் கட்டுரையை எடுத்து விழம்ப கடமைப்படுகிறேன். சதகம் என்பது தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று இந்த சிற்றிலக்கியத்தின் வித்து தொல்காப்பியா; காலத்திலே தொடங்கிவிட்டது. அதனை,

திருவாசகத்தில் நாட்டிய அகப் பாடல்களில் பாடல்கள்


திருவாசகத்தில் நாட்டிய அகப் பாடல்களில் பாடல்கள்


முனைவர். சண்முக செல்வகணபதி
மேனாள் முதல்வர்
அரசுக் கல்லூரி, திருவையாறு
சைவக்திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியதாகும். வாதவூரர் என்ற பெயரில் பிறந்த ஊரின் பெயரால் அழைக்கப்பட்டார். மணிமணியான வாசகங்களைக் கூறியமையால் மணிவாசகர் என்றும் பின்பு மாணிக்கவாசகர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திருவாசகத்தோடு திருச்சிற்றம்பலக் கோவை என்கிற கோவை நுhலொன்றும் பாடியுள்ளார். இந்நுhலும் கோவை என்று கூறப்படுகிறது.
திருவாசகம் 51 தலைப்புகளையும் 656 பாடல்களையும் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள 263 பாடல்கள் மகளிர் விளையாட்டின் பெயரால் அழைக்கப்படுகின்றன. 1. திருவெம்பாவை, 2. திருவம்மானை, 3. திருப்பொற்சுண்ணம், 4. திருத்தெள்ளேணம், 5. திருச்சாழல், 6. திருப்பூவல்லி, 7. திருவுந்தியார், 8. திருத்தோணோக்கம், 9. திருப்பொன்னூல், 10. குயில்பத்து இவை அனைத்தும் நாட்டுப்புற நாட்டியப் பாடல்களாக உள்ளன. அடியார்க்கு நல்லார் இளமகளிர் இசையுடன் பாடடியாடும் பல்வரிக் கூத்துக்களாக இவற்றைக் குறிப்பிடுகிறார். அம்மானை, நல்லார் தோள்வீச்சு (தோணோக்கம்) சாழல், உந்தி, அவலிடி (பொற்சுண்ணம்) கொய்யுமுள்ளிப்பூ (பூவல்லி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.
1.1 பாவை
சங்க இலக்கியங்களில் கூறப்படும் தை நீராடல், தெய்வத்தமிழ் காலத்தில் மார்கழி நீராடலாகி பின்பு பாவை நோன்பாயிற்று. பாவை நோன்பை முன்னிட்டு இளம் கன்னிப் பெண்கள் மார்கழித் திங்களில் விடியல் காலையில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்று, ஆற்றில் நீராடி, மணலால் பாவை உருவம் செய்து வழிபடுவர். நாடு நலம் பெற மழைவளம் சுரக்க வேண்டுமென்றும், மன்னவன் கோல்முறை தவறாது ஆட்சி செய்யவேண்டுமென்றும், தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டுமென்றும் கருதி நோன்பிருப்பர். நோன்பு நாட்களில் நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், தங்களை வெகுவாக ஒப்பனை செய்து கொள்ளாமல் இருப்பர். இத்தகைய நோன்பு கார்த்தியாயனி விரதமாகவும் கருதப்பட்டது. இதனை ""அம்பா ஆடல்"" என்பர். ‘அம்பா ஆடலின் ஆய்தொழக் கன்னியர்’ என்று நல்லந்துவனார் குறிப்பிடுவார். ""எம்பாவாய்"" என விளித்துக் கொண்டு ஆடுவர்.

சிற்றிலக்கிய ஆய்வுகள்





சிற்றிலக்கிய ஆய்வுகள்


முனைவர் ஜ.பிரேமலதா
தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம்-7

முன்னுரை
96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளதாகப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு மேலும் சிற்றிலக்கிய நூல்கள் உள்ளன. அப்பட்டியலையும் அவை தொடர்பாக வந்துள்ள ஆய்வுகளையும் இனி வர வேண்டிய ஆய்வுகளையும் குறித்து இக்கட்டுரை  ஆராய்கிறது.

.சங்க இலக்கிய இலக்கணங்களின் வழி அந்தாதி சிற்றிலக்கியம்



.சங்க இலக்கிய இலக்கணங்களின் வழி அந்தாதி சிற்றிலக்கியம்



Nguh.Kidth;. if.rq;fh;
muR fiyf;fy;Y}hp> ee;jdk;> nrd;id.


}  விருந்து
விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே

சங்க இலக்கிய இலக்கணங்கள் வழி கோவை சிற்றிலக்கியம்

சங்க இலக்கிய இலக்கணங்கள் வழி கோவை சிற்றிலக்கியம்

முனைவர் கை. சங்கர்
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி(தன்னாட்சி) நந்தனம், சென்னை 35
    கோவை இலக்கணம்
    பன்னிரு பாட்டியல்
கோவை என்பது கூறுங்காலை
மேவிய களவு கற்பு எனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப ………137
இலக்கண விளக்கம்
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்பெனும் வரைவு உடைத்தாகி
நலனுறு கலித்துறை நானூறு ஆக
ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி விளங்கக்
கூறுவது அகப்பொருட் கோவையாகும்……..816

வைணவச் சிற்றிலக்கியங்களில் தொன்மைக்கூறுகள்




வைணவச் சிற்றிலக்கியங்களில் தொன்மைக்கூறுகள்


முனைவர் ஜ.பிரேமலதா தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம்-7

முன்னுரை
      தொல்காப்பியர் செய்யுளியலின் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான வனப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வனப்புகள் எட்டு என்று குறிப்பிடப்படுகிறது. அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை. இவற்றுள் தொன்மை என்பதற்கு,
""""தொன்மை தானே சொல்லுங்காலை
உரையொடு  புணர்ந்த யாப்பின் மேற்றே "" (தொல்-செய்-229) 

என்ற நூற்பாவில் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

குழவி மருங்கினும் கிழவதாகும்,வைணவச் சிற்றிலக்கியங்கள்



குழவி மருங்கினும் கிளவதாகும் - .பிள்ளைத்தமிழ்


பேரா. ந. சேஷாத்திரி, த.து.தலைவர்
அ.ஆ.க.க. நந்தனம்
வழி பிள்ளைத்தமிழ்""
பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியாழ்வார், பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து தன்னை யசோதையாக மாற்றி ஆண்பிள்ளைக்குரிய 10 பருவங்களை உள்ளடக்கி பனுவல் செய்கிறார்.
செங்கீரை, சப்பாணி, தாலாட்டு, அம்புலி, சிறுதேர் உருட்டல், காப்பு, நீராட்டம் என்று பல்லகை பருவச் செயல்பாட்டில் பனுவலை விரித்துக் காட்டுகிறார். இவர்தம் மகளாகிய ஆண்டாளோ, கூடிடுகூடல, சிற்றில்வந்து சிதையலே, ஏர்தழுவல், பிருந்தாவனத்து நிலை, குடமாடிக் கூத்தம் என்று விவரித்துக் கண்ணனின் அனுபவத்தைப் பெறுகிறார். இறைவனை முன்னிட்டு வந்த பிள்ளைத்தமிழ் பிற்காலத்தில் இறையடியாளர்களை முன்னிட்டு தோன்றலாயிற்று. அதனடிப்படையில் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இராமனுஞ்சர் பிள்ளைத்தமிழ், வடக்கு திருவீதிப் பிள்ளைத்தமிழ், திருவாய்மொழி பிள்ளைத் தமிழ் தேசிகர். பிள்ளைத்தமிழ் என்று பல்வேறு இலக்கிய வடிவங்கள் வைணவ அடியாளர்களால் படைக்கப்பட்டுள்ளது.
திருப்பள்ளியெழுச்சி

சங்க இலக்கியத்தில் பிரபந்தமரபு-



சங்க இலக்கியத்தில் பிரபந்தமரபு-

  முனைவர்.த.விஷ்ணுகுமாரன். தமிழ்த்துறை, திராவிடப்பல்கலைக்கழகம்.

   எந்தவொரு இலக்கிய வகையாயினும் திடீரென உருகொள்வதில்லை, அதற்கென  வரலாற்று, சமூகப் பின்புலம் இருக்கும் என்பதுடன் , அது தான் தோன்றிய காலகட்டத்திலுள்ள புதுமையையும் உள்கொண்டிருக்கும். இதன் மூலம் ஒரு  இலக்கியவடிவம் அது எழுந்த காலகட்டத்திற்கேற்ற புதுமைகளைக் கொண்டிருந்தாலும் அதன் இன்றியமையாத கூறுகள் அம்மொழியிலுள்ள பழமரபுகளைக் கொண்டிருக்கும் என்பது புலனாகும். எடுத்துக்காட்டாக, தற்கால திரையிசைப் பாடல்களில் சங்கஇலக்கியப் பாடல்களின் கருத்துக்கள் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைச் சுட்டலாம். இன்னும் ஓர் உதாரணமாக அண்ணாப் பிள்ளைத்தமிழ் என்ற இருபதாம் நூற்றாண்டு இலக்கியப்படைப்பினையும் கூறலாம். இது  அறிஞர் அண்ணாவைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றுவதாக இருந்தாலும் கூட அதன் அடிப்படை  அமைப்பு பிள்ளைத்தமிழ் எனும் பழமையான இலக்கியவடிவம் அல்லது பிரபந்தவகையைச் சார்ந்ததாகும். 

கலம்பம் - சொற்பொருள்

கலம்பம் - சொற்பொருள் : 


முனைவர் ப. தாமரைக்கண்ணன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி, சென்னை-600 005.

கலம்+அகம் எனப் பகுத்துக் கலம் என்பது 12 என்றும் பகம் என்று பாதியாகிய ஆறு (6) என்றும் இரண்டும் கூட்டினால் 18 உறுப்புகள் என்றும், ஆக 18 உறுப்புகளைக் கொண்டது கலம்பகம் எனப் பொருள் உரைப்பர். அஃது ஆய்வுக்குரியது.

சங்க இலக்கிய அக, புற மரபும் அந்தாதி இலக்கியமும்

சங்க இலக்கிய அக, புற மரபும் அந்தாதி இலக்கியமும்


முனைவர் ப. தாமரைக்கண்ணன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி, சென்னை-600 005.

தமிழ் மொழியானது, தமக்கெனத் தனித்த மரபினைக் கொண்டு தொல்பழங்காலந்தொட்டே இலக்கிய இலக்கண நுhல்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தித் தம் புகழினை நிலைக்காட்டி வருகின்றது.

பள்ளு இலக்கியம் , அகப்பொருள் மரபும் கோவை இலக்கியமும்

பள்ளு இலக்கியம்

சி.மா. இரவிச்சந்திரன்
பேராசிரியர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

தமிழில் தோன்றிய சிற்றிலக்கியங்களில் பள்ளு இலக்கியம் ஒரு வகையாகும். ‘நெல்வகையை எண்ணினாலும் பள்ளுவகையை எண்ண முடியாது’ என்பது முதுமொழி. தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ், தூது, உலா, கோவை போன்ற இலக்கிய வகைகளின் தோற்றத்திற்கு உரிய மூல வேர்களை பழந்தமிழ் இலக்கிய இலக்கண நுhல்களில் கண்டறிய முடிகிறது.
‘குழவி மருங்கினும் கிழவ தாகும்’ என்ற தொல்காப்பிய நுhற்பா பிள்ளைத்தமிழுக்குரிய அடையாளமாகத் திகழ்கிறது. பெரியாழ்வார், குலசேகராழ்வார் பாடிய தாலப் பருவப் பாடல்களில் பிள்ளைத்தமிழின் மூலத்தைக் கண்டறிய வியலுகிறது. சங்க அகப்பாடல்களே கோவை இலக்கியத்தின் மூலமாகும்.

அருள் நெறி நோக்கில் சங்க இலக்கிய, சிற்றிலக்கிய ஒப்பீடு



அருள் நெறி நோக்கில் சங்க இலக்கிய, சிற்றிலக்கிய ஒப்பீடு


முனைவர் அர.ஜெயச்சந்திரன்,
இணைப்பேராசிரியர், மற்றும் துறைத் தலைவர்
தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி,
சென்னை  600 005.

முன்னுரை

அருள் நெறி என்னும் சொற்றொடார் வள்ளலாரால் உருவாக்கப் பட்டது எனினும் அதற்கான கருத்தோட்டம் தொல்காப்பியத்திலேயே தொடங்குகிறது. அருள் நெறி என்றால் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து வாழ்தல் எனப்பொருள்படும். இக்கட்டுரையில் அருள்நெறி என்பது நான்கு அணுகு முறைகளைக் கொண்டு அமைகிறது.

தொல்காப்பியப் பாடாண்திணையும் நால்வர் நான்மணிமாலையும்

தொல்காப்பியப் பாடாண்திணையும் நால்வர் நான்மணிமாலையும்

பேராசிரியர் அ. அறிவுநம்பி
புதுவைப்பல்கலைக்கழகம்

தமிழின் இலக்கண, இலக்கியங்கள் வளமை நிறைந்தவை. வாழ்வியல் செய்திகளை அவை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன. உலக மொழிகள் யாவும் எழுத்து, சொல் பற்றிய இலக்கண நுhல்களைப் பெற்றுள்ளன. ஆனால் தமிழின் தொல்காப்பியம் மட்டும் அவற்றுக்கப்பால் அகம், புறம் என அமையும் மக்கள் வாழ்வையும் முன்நிறுத்தும். சங்கப் பனுவல்கள் உட்படத் தமிழ் இலக்கியங்கள் யாவும் பெரும்பாலும் தொல்காப்பிய நெறிகளைப் பின்பற்றியுள்ளன. அவ்வழியில் தொல்காப்பியம் புறத்திணையில் பேசும் பாடாண்திணைக் கூறுகளைப் பிற்கால நுhலான நால்வர் நான்மணி மாலை என்ற நுhலில் பொருத்திக் காணும் முயற்சியே இந்த எழுத்துமுறை.
நால்வர் நான்மணிமாலை என்ற செய்யுள் நுhலை யாத்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். சோணசைலமாலை உட்படப் பல நுhல்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்ற பெயர் சிற்றிலக்கியவுலகம் போற்றும் ஒரு பெயராகும். சைவ சமய நுhல்கள் பலவற்றை எழுதியுள்ளது இவரின் எழுதுகோல். உதடுகள் ஒட்டாப் பாடலாக நிரோட்டகயமகம் பாடிய சிறப்பைப் பெற்றவர்.

2.குழவி மருங்கினும் கிழவ தாகும் பிள்ளைத் தமிழ்





குழவி மருங்கினும் கிழவ தாகும்  பிள்ளைத் தமிழ்

முனைவர் மா.கோவிந்தராசு,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி,
தஞ்சாவூர் - 613005.
முன்னுரை
தொல்காப்பியம் ஐவகை இலக்கணங்களைக் கூறுவதோடு, பல்வேறு இலக்கிய வகைகளையும் சுட்டிச் செல்கின்றது. பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த பிள்ளைத்தமிழ், தூது, உலா, அந்தாதி, பள்ளு முதலான பலவகை இலக்கியங்களையும் தொல்காப்பியர் கோடிட்டுக் காட்டுகின்றார். அங்ஙனம் சுட்டிக் காட்டுவதில் ஒன்று பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும். குழவி, பிள்ளை, குழந்தை என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஆகும். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் குழவி மருங்கினும் கிழவதாகும் என்னும் நூற்பாவோடு பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியத்தினை ஒப்பிட்டு இக்கட்டுரை ஆராய்கின்றது.

தொல்காப்பியரின் புலனும் பள்ளு இலக்கியங்களும்



1.தொல்காப்பியரின் புலனும் பள்ளு இலக்கியங்களும்


முனைவர் மா.கோவிந்தராசு
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி,
தஞ்சாவூர் - 613005.
முன்னுரை

செம்மொழித் தமிழ் நூல்களுள் காலத்தால் முந்தியதும் முதன்மையானதுமாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும். இஃது இலக்கண நூல் ஆகும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபு. தொல்காப்பியத்திற்கும் முன்பே பல இலக்கியங்கள் தோன்றியிருந்தன. ஆனால் அவை இன்றைக்குக் கிடைக்கவில்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களையும் இலக்கியக் கொள்கைகளையும் செய்யுள் வழக்கு, பேச்சு வழக்கு நெறிகளையும் தாவரம், விலங்கு, பறவை, மக்கள் முதலான உயிரினங்கள் தொடர்பான மரபுப் பெயர்களையும் தொல்காப்பியம் விளக்குகின்றது.

பள்ளு இலக்கியமும் பின்நவீனத் தத்துவமும்



                  
      

பள்ளு இலக்கியமும் பின்நவீனத் தத்துவமும்

முனைவர் ரெ.மல்லிகா () அரங்கமல்லிகா,
இணைப்பேராசிரியர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சென்னை-8.
வேந்தன்மேய தீம்புனல் உலகம் என்று தொல்காப்பியத்தில் கூறும் தீம்புனல் உலகத்தை மருதநிலம் என்று கூறுகின்றனர்.  மருதநில மக்கள் மள்ளர் எனவும் பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.  நிலத்தைப் பண்படுத்தி, நீர் தேக்கி, பயிர் வளர்த்து உழவுத் தொழில் செய்து வருபவர்கள் மள்ளர்கள் என்பதைத் தமிழ் இலக்கியத்தில் மருதநிலம் சார்ந்த மக்களின் பண்பாட்டிலிருந்தும் சங்க இலக்கியத்திலிருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றன.  அதன் தொடர்ச்சியாக பள்ளர்களின் வாழ்க்கையை விரிவாகப் பள்ளு இலக்கியம் பேசுகிறது.  பள்ளு இலக்கியத்தின் கட்டமைப்பைப் பின்நவீனத்துவக் கோட்பாடு சார்ந்து மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய கால அவசியம் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.