Pages

Sunday 1 November 2015

பள்ளு இலக்கியமும் பின்நவீனத் தத்துவமும்



                  
      

பள்ளு இலக்கியமும் பின்நவீனத் தத்துவமும்

முனைவர் ரெ.மல்லிகா () அரங்கமல்லிகா,
இணைப்பேராசிரியர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சென்னை-8.
வேந்தன்மேய தீம்புனல் உலகம் என்று தொல்காப்பியத்தில் கூறும் தீம்புனல் உலகத்தை மருதநிலம் என்று கூறுகின்றனர்.  மருதநில மக்கள் மள்ளர் எனவும் பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.  நிலத்தைப் பண்படுத்தி, நீர் தேக்கி, பயிர் வளர்த்து உழவுத் தொழில் செய்து வருபவர்கள் மள்ளர்கள் என்பதைத் தமிழ் இலக்கியத்தில் மருதநிலம் சார்ந்த மக்களின் பண்பாட்டிலிருந்தும் சங்க இலக்கியத்திலிருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றன.  அதன் தொடர்ச்சியாக பள்ளர்களின் வாழ்க்கையை விரிவாகப் பள்ளு இலக்கியம் பேசுகிறது.  பள்ளு இலக்கியத்தின் கட்டமைப்பைப் பின்நவீனத்துவக் கோட்பாடு சார்ந்து மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய கால அவசியம் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.


ஏர்மங்கலம் தொடங்கி, நாற்றுநடுதல், அறுவடை செய்தல், போர்க்களத்தில் பாடும் பாடல் எல்லாம் பள்ளர்களின் வாழ்வியலோடு பொருந்தியிருப்பதை, உழத்திப்பாட்டு அல்லது பள்ளிசை எனப் பெயரிட்டுப் பிள்ளைக் கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்கள் ஒன்றாக்கினர் என்கிறார் தே.ஞானசேகரன்.
பள்ளு உறுப்புகளை நாற்பது என வகைப்படுத்தப்படுகின்றனர்.  இதில் பள்ளனின் வாழ்வு, பெருமை இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது.  சிந்து, கலிப்பா விருத்தம், தரு ஆகிய பாவினங்களால் விரவி நாடகக் கூறு நிறையப்பட்டது. பள்ளேசல் என்ற மறுபெயரும் இதற்கு உண்டு. இப்பள்ளு இலக்கியம் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். இசையோடு அமைவது. நாடகதொல்காப்பியரின புறத்திணையியல் வாகைத் திணையின் உட்துறைகளில் ஒன்றாகக் கூறியுள்ள ஏரோர் களவழிதான் பள்ளுவின் முதல் வித்தாக நாம் காணும் நான்று.

ஏரோர் களவழி அன்றி களவழித்
 தேரோர் தோற்றிய வென்றியும்
தொல் : புறத்திணையியல் – 4

என்ற நூட்பாவிற்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் ஏரோர் களவழி என்பதற்கு ஏர் உழவர்களவழிபாடுவது போல அதாவது வேளாண்மைச் செயல்களை விரித்துப் பாடுவது போல என்று உரை எழுதுகிறார்.

(தே.ஞானசேகரன்,பள்ளு இலக்கியத் திரட்டு,புது தில்லி,2013,பக்.11;12)
வேட்டைச்சமூகம் தொடங்கி நிலத்தோடு வாழ்ந்த மள்ளர்கள் பயிர்த்தொழில் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் வளமைக்குரியவர்களாக இருந்துள்ளனர். கலாச்சார நிறுவனமும், சமூக வேறுபாடுகளும்,         பெருங்கதையாடல்களும்,ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள சமுகத்தை பிரதிபலிக்கின்றன.நவீனமயமாக்கமும்,பின்நவீனத்துவச்
சொல்லாடல்களும்  ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள  அதிகாரம் நிறைந்த பிரதிகளை மறுவாசிப்புக்குரியதாக்குகிறது.பின்நவீனத்துவக் கோட்பாட்டு அடிப்படையில் சமூகவியற்கோட்பாட்டைச் சிந்திக்கும்போது

              1.யதார்த்தத்தோடு சமூகத்தைச் சிந்திப்பது
              2.நிறுவனங்களின் மீதான அதிகாரத்தைச் சிந்திப்பது
3.சமூகப்பெருங்கதையாடல்களையும் அதன் மீதான மொழியாக்கத்தையும்  
 கவனப்படுத்த வேண்டியுள்ளது.

           பின்நவீனத்துவ வாதிகள் நிறுவனங்களின் அதிகாரத்தை மக்களின் மீது செலுத்தி மக்களையும்  நிறுவனத்தையும் பிரிக்கிறது எனக்கூறுகின்றனர்.

  ஓர் அதிகார மையம் அரசு சார்பானதாக இருப்பதை மேல்*கீழ் கட்டமைப்புச்  செயல்படுவதை, ஆதிக்கம்*அடிமை வர்க்கச்சிந்தனையைக் காப்பாற்றி வருவதைத் தகர்க்கிறது பின்நவீனத்துவம்.

        குறிப்பாகச் சொல்வதென்றால் மக்களை அமைதிபடுத்திவிட்டு இயங்கவிடாமல் ,எதிர்வினைத் தொடுக்காமல் குரலற்றவர்களாக வாழ்வதைக் கலகக்குரலற்றவர்களாக்குகிறது.

        உலகளாவியக் கொள்கைகளை,நெறிப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களை,நிலைத்த வேறுபாட்டை,வேர்றுமைகளை மக்கள் உணர்ந்திருக்கின்றனர் .இவை சார்ந்த பெருங்கதையாடல்களை பின்நவீனத்துவம்  மறுக்கிறது.
இது மொழிவழியே அடக்கப்படுகின்றது,ஏனெனில் மொழி அதிகாரம் சார்ந்தது. இது வரலாற்றுடனே பயணப்படுகின்றது. எனினும் அது காலத்திற்கேற்றவாறு மாற்றத்திற்குரியதாகிறது. இதனால் வழக்கமாகக் கதையாடிய சில சொல்லாடல்கள் கட்டுடைகின்றன.

          அகஸ்த் காம்தே (Agaste comte)  தனிமனிதர்கள் தங்களின் அறிவார்ந்த தேடலால்   சமூகத்தை நேர்கோட்டில் புரிந்துகொள்கிறார்கள்.  உண்மையான சமூகக்காரணங்களைக் கண்டறிந்து கொ.ள்வதோடு விழுமியங்களைப் பின்பற்றுவதும், விழுமியத்திற்கு  வெளியில்றுந்து தன் எழுச்சியாக ஒரு கருத்தியலைக் கட்டியமைத்தும் பின்நவீனத்துவக்கோட்பாட்டில் சாத்தியமாகிறது. சமூகக் காரணங்களை அறிந்துகொள்ளும் உலகளாவிய சமூக விதிகள் அதனுள் அடங்காது  என்று துர்க்கைம்  கூறுகிறார். விழுமியங்களைச் சமப்படுத்தும் அறிவியலைச் சமூகவயப்படுத்துவது மாக்ஸ் வெபெர் கருத்துத் தெரிவிக்கிறார்.

       பள்ளு இலக்கியம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது. இதில்  பேசப்படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள். கடைநிலை மக்கள். இவர்கள் உற்பத்தியோடு தொடர்புடையவர்கள்.  உற்பத்தியாளர்களாகவும் சந்தைப்படுத்துபவர்கஒழில் ளாகவும் உறவுமுறையைப் பேணுபவர்களாகவும் பள்ளு இலக்கியம் அறிமுகப்படுத்துகின்றது.

பண்ணை*விவசாயி என்ற இரு எதிர் இணைகளின் கட்டமைப்பில்  பண்ணையார் விஜயாகரப் பேரரசு காலத்தில் நியமிக்கப்பட்டவர்களாகவும் அவர்களின் கீழ்  உழவுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள் என்பதை வரலாறு அறிவிக்கின்றது.
பண்ணை ஏவலறும் பள்ளியர்,பா.5 முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்,பா.13

என்ற இவர்களின் அறிமுகம் தங்களைத் தாங்களே கீழான தொழில் செய்பவர்களாக  பள்ளு இலக்கியம் கூறுகின்றது.உளவியல் பூர்வமாக இதைப்பார்க்கும்போது காலம் காலமாக அடிமைத்தொழில் செய்யும் மனநிலை மன உணர்வின்  அதாவது பண்ணையாரால்  பள்ளர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்படுவதும், சாகுபடி செய்து அறுவடைய்ல் அவரவர் செலுத்தவேண்டிய பங்கைப் பண்ணையிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கருத்தியலின் பின்னால்  ஆண்டை*அடிமை மனோநிலைதான் இயங்குகின்றது.நிலபிரபுத்துவச் சிந்தனையை இது அடையாளப்படுத்துகின்றது.

 ஆனால் நிகண்டுகள் பள்ளர்களை வளமையாளர்களாகவும், வீரர்களாகவும்,காட்டுகின்றது.நானில மக்களை அடக்கி ஆண்டவர்கள் என்று கூறுகின்றது, நவீன பின்நவீனத்துவக் கருத்தியலோடு இதைப்பார்க்கும்போது வரலாற்றில்  பள்ளர்கள்    சமூகத்  தகுதி  நிலை குறைத்து மதிப்பிடப்படுகின்றது. வலிமை, வளமை மறைக்கப்பட்டு சமூகத்தின் விளிம்பிற்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

       வஞ்சின வீரராக, வாழ்த்தும் மரபின் தோற்றுநராக,வல்லேர் உழவராக வாழ்ந்த சமூகத்தைக் கூலித் தொழிலாளியாக்கி ஊருக்கு வெளியில் தள்ளியுள்ளது சிந்தித்தற்குரியது.அடிமையாக்கி மூத்தப் பள்ளி ,இளைய பள்ளி சண்டையை வரலாறாக்கியுள்ளது ஆய்வுக்குரியது,

       இப்படி பள்ளியரின் ஏசல் அவ்விலக்கியத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படும் அதே வேளையில்  இக்கதையாடலின் பின்னால் உள்ள சமூக இருத்தல் மறுவாசிப்புக்குரியதாகிறது.இதனை  குருசாம்ய் சித்தர்,தே.ஞானசேகரன் டி..தர்மராஜ் ஆகியோர் மள்ளரியம் என்ற ஒரு வகைமையை உருவாக்கி மிகப்பெரிய மாற்றுக் கதையாடலை அரசியல்ஆக்கிஉள்ளனர்.

       பள்ளர்கள் மீதான சமூகக்கொடுமைகள்,கருத்தியல் தளத்தில் எதிர்  கொள்ளப்பட்டுள்ளன.அதன் மூலம் ஒரு பண்பாட்டு மீளாய்வு நிகழ்த்தி உள்ளனர்.பண்பாட்டு விடுதலையை வென்றெடுக்க பழைய  வரலாறுகள் மறுவாசிப்புக்குரியதாக, அதன்  பயணத்தில் புது வரலாறு நேரிடையாகப் புரிந்துகொள்ளும் நோக்கிலெழுதப்படுகின்றன.
         ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள பண்பாட்டைச் சிதைத்து இருக்குமிருக்கும் பண்பாட்டிலிருந்து புதிய சமூக்ம் மதிக்கத்தக்கப் பண்பாட்டைக் கட்டிஎழுப்ப பள்ளு இலக்கியத்திலிருந்தே தொடங்கலாம்.
முடிவாக உழுபவரின் வாழ்வியல் :பள்என்றும், பள்ளேசல் என்றும் பள்ளு இலக்கியம்  என்றும்,பள்ளுப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது.

மள்ளரின் பெருமைப்பேசுகிறது. ஆனால் அவர்களின் பெருமையை அரசியலாக்கவில்லை.

மருத நிலத்து மள்ளர் மக்களின் ஆற்றங்கரை நாகரிகத்தில் ஊர், பேரூர்,நகரம், நாடு,பன்னாடு, தென் குமரிகண்டம், ஞாலம், மாஞாலம், என்று விரிந்து ஒரு குடையின் கீழ் மல்லன் மாஞாலமாக பன்நெடுங்காலம் வாழ்ந்திருக்கிறான்.என்ற வரலாற்று உண்மையை பொதுபுத்திக்கு அறிவுறுத்த வேண்டியிருக்கிறது.

13ஆம் நூ.டு தொடங்கி வேற்றுமொழியினர் தமிழக எல்லையைக் கைப்பற்றி தேவேந்திரர்களை வீழ்த்தி உள்ளனர் என்ற வரலாற்றை அவதானிக்க வேண்டும்.

No comments:

Post a Comment