Pages

Sunday 1 November 2015

சிற்றிலக்கிய உரை வரலாறு



சிற்றிலக்கிய உரை வரலாறு

                                 முனைவர்.சி.வீரமணி,
                    உதவிப்பராசிரிர்,  விவேகானந்தர் கல்லுhரி, சென்னை-4.

     தமிழிலக்கிய வரலாற்றில் சிற்றிலியக்கியங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகின்றது. இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டு மனிதனின் சிந்தனைக்கும், உணார்வுக்கும், கற்ர்பனைக்கும் விருந்தாக அமையும். மனித மொழியோடு தொடார்பு கொண்டு சொற் கோலமாகவும், ஒரு குறிப்பிட்ட வடிவினை செய்யுளாலோ உரைநடையாலோ கொண்டு விளங்கும். கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், மலார்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாயந்தது.  இலக்கியம் இன்புறுவதோடு இல்லாமல் அறிவுறுத்தும் ஆற்றல் வாய்ததாகவும் விளங்குகிறது.
     சிற்றிலக்கியங்கள் பொருளமைதியால் மாறுபட்டவையாயிருப்பினும் சுவை தருவதில் வேறுபட்டவையல்ல. சிற்றிலக்கயங்கள் தரும் சுவை பாலொடு
தேன் கலந்ததுப் போன்று இனிக்கும். இந்நுல் கற்போர்க்கு கழிப்பேருவகைதரும.ர் 
சிற்றிலக்கியங்கள்
     தொல்காப்பியார் காலத்தில் வித்திடப்பெற்ற இச்சிற்றிலக்கியங்கள் நுhற்றாண்டுத்தோறும் சீராக வளார்ந்து, கி.பி.5-ஆம் நுhற்றாண்டில் அந்தாதியாக அரும்பி, கி.பி. 8-ஆம் நுhற்றாண்டில் கோவையாகவும், கிர்.பி. 9-ஆம் நுhற்றாண்டில் கலம்பகமாகவும், கி.பி.11-ஆம் நுhற்றாண்டில் சதகமாகவும், கி.பி. 14-ஆம் நுhற்றாண்டில் துரிதாகவும் மலர்ந்தது. அன்று முதல் இன்று வரை எண்ணிலடங்கா கிளைகள் விட்டு சிற்றிலக்கியப் பெருமரம் சிறந்து விளங்குகின்றது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களைப் படித்தால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் இன்பம் தருவதாக அமையும். இச்சிற்றிலக்கியங்களை தொல்காப்பியார்,
       விருந்தே தானும்
       புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொ.நுh.239). 
என்று விளக்குவாhர். இந்நுhற்பா பல்வேறு வகையான இலக்கியங்களின் தோற்றத்தை எதிhர்நோக்கி அமைந்துள்ளது. இதற்கு பொருள் கூறும் இளம்பு+ரணார், விருந்தாவது முன்புள்ளார்சொன்ன நெறிப்போய் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு. புதிதாக புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல் வழியின்றித் தானே தோற்றிவித்தல். இது பெருபான்மையும் ஆசிரியப்பாவை குறித்து வருவதாகச் சொல்லுகின்றாhர். இதற்குப் பேராசிரியார் புதிதாகத் தாம் வேண்டியவாற்றார்பல செய்யுளுந் தொடார்ந்து வரச் செய்வது என்பாhர். இலக்கண நெறியைப் போன்று பள்ளு, குறம், துhது, உலா, கலம்பகம் போன்றச் செய்யுள்களும் புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்ற அடிப்படையின் கீழ் அமைவதாகும். நச்சினாhர்க்கினியாரும் தம் உரையில் இத்தகைய கருத்தினையே பதிவு செய்துள்ளாhர்.
சிற்றிலக்கியத்தின் இலக்கணம்ர்
         பிரபந்தம் என்னும் வடமொழிச் சொல்லே இன்று சிற்றிலக்கியம் என்ற பொருளில் வழங்கப்படுகின்றன. பிரபந்தம் என்பதற்கு தொண்ணுற்றாறு வகைப்பட்ட நுhல், இசையுறு கட்டுரை எனப் பொருள் கூறுகிறது தமிழ்ப் பேரகராதி. சிற்றிலக்கிய வகைகளை கூறுவதில் பாட்டியல் நுhலாரிடையே ஒரு சீhர்மையினைக் காணமுடியவில்லை. எனவே முதலில் தோன்றியதாகக் கருதப்படும் பன்னிருபாட்டியல் 65 சிற்றிலக்களுக்கு இலக்கணம் உரைக்க பின்னார் எழுந்த வெண்பா பாட்டியல் 54 சிற்றிலக்கியங்களுக்கும,ர் நவநீதப் பாட்டியல் 63 சிற்றிலக்கியங்களுக்கும், சிதம்பரப் பாட்டியல் 62 சிற்றிலக்கியங்களுக்கும், பிரபந்தத்தீபிகை 80 சிற்றிலக்கியங்களுக்கும் விளக்கம் உரைக்கின்றன. 
     16-ஆம் நுhற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்ததாகக் கருதப்படும் பிரபந்த மரபியலில் தொண்ணுற்றாறு என்னும் எண் வரையறைக் கொடுக்கப்பட்டுள்ளது. 17-ஆம் நுhற்றாண்டில் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட தொன்னுhல் விளக்கத்தில் 89 சிற்றிலக்கியங்களின் பெயார்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. 18-ஆம் நுhற்றாண்டில் எழுந்த   சதுரகராதியில் 96 சிற்றிலக்கியங்களின் பெயார்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் அக்காலத்தில் எழுந்த குறவஞ்சி, பள்ளு ஆகிய இலக்கியங்களை அவ்வவ் பெயார்களில் வழங்காது பன்னிருப் பாட்டியல் குறிப்பிடுவது போல் குறத்திப்பாட்டு, உழத்திப்பாட்டு என்றே வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், குறவஞ்சி, பள்ளு ஆகிய நுhல்களில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் அவற்றின் இலக்கணமாகச் சதுரகராதியில் குறிப்பட்டுள்ளதை அறியலாம்.  இவற்றுள் தனிச் சிற்றிலக்கிய வகைகளான ஆற்றுப்படை, உலா, பிள்ளைத்தமிழ், கோவை, துhது, பரணி, கலப்பகம், பள்ளு, குறவஞ்சி முதலானவையாகும். இங்கு முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, நந்திக்கலம்பகம் இவைகளின் உரை வரைவுகளைக் காணலாம்.
பள்ளு இலக்கிய வகைகள்  
   கி.பி 1650-ல் தான் முதல் பள்ளு நுhல் இயற்றப்பட்டது என்றும், அதனைத் தொடார்ந்து கி.பி 1900 வரை பல பள்ளு நுhல் இயற்றப்பட்டன. இவ்வகையில் 70-80 நுhல்களே தற்போது கிடைக்கப் பெறுகின்றன. பள்ளு நுhல்கள் அனைத்தும் ஒரே கதையமைப்பைNர்ய கொண்டிருக்கும். அவ்வாறு இயற்றப்படும் நுhல்களின் இடம், காலம், கதை நாயக- நாயகியார்களும், பாட்டுடை கடவுளும், பாடும் புலவனும், புரவலனும் வேறுபடுவர். இதனோடு பாடப்படும் தலம்(இடம்) இவற்றையும் சோர்த்துப் பள்ளு இலக்கியத்தின் பெயார்கள் அமைகின்றன. அவை
1.திருவாரூhர்ப்பள்ளு
2.முக்கூடற் பள்ளு
3.செங்கோட்டுப் பள்ளு
4.பொய்கைப் பள்ளு
5.செண்பகராமன் பள்ளு
6.மாந்தைப் பள்ளு
7.திருமலை முருகன் பள்ளு
8.திருவேட்டைநல்லுhர்அய்யனார்பள்ளு
9.தண்டிகைக் கனகராயன் பள்ளு
10.சீhர்காழிப் பள்ளு. முதலியனவாகும்.
முக்கூடற்பள்ளு
     முக்கூடற்பள்ளுவில் பாடலுக்கு முன்பு  இயலைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. இதனைத் தொடர்ந்து பாடல் அதற்கான பொழிப்புரை மற்றும் சில இடங்களில் நயவுரை, விளக்கவுரை முதலானவை இடம் பெற்றுள்ளன.
     இந்நுhல் இயல் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலிலும் உட்தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். பண்ணையார் வருகையின் வர்ணிப்பில் எதுகை, மோனை, உருவகம் போன்ற இலக்கண நெறிமுறைகள் சுட்டப்பெற்றுள்ளன. மேலும் அந்தந்த பகுதியில் பயன்படுத்தப்பட்டு வரும் வட்டார வழக்குச் சொற்கள் இந்நுhலில் இடம் பெற்றுள்ளன. அவை சொக்காரி-சொந்தக்காரி, இலாப நட்டத்திற்குப் பாத்தியம் உடையவள், வக்கனை-வாய்சாலப் பேச்சு, கச்சற்காய்-கழற்சிர்க்காய் என்பனவாகும்.
     சிற்றிலக்கியங்களில் பொதுவாக புராணச் செய்திகள் இடம் பெறும். அந்தவகையில் முக்கூடற்பள்ளு இலக்கியத்திலும் புராணச் செய்தி குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெற்றுள்ளன. நம்நாட்டில் வேளாண்தொழிலுக்கென்று ஒரு தனிச் சிறப்பானதோர்இடம் உண்டு அதைக் கூறுமிடத்து தாம் பயன்படுத்திய நெல்லு வகையான மணல்வாரி, பு+ம்பாளை, மங்கையாழ்வான், மச்சுமுறித்தான், பெருவௌர்ளை, மறுவல்லி, நீலம், வில்லுhன்றி, பாரக்கடுக்கன், இராசவாணன் முதலானவற்றையும், விவசாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட மாட்டு வகைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.  

  திருக்குற்றாலக்குறவஞ்சி
      திருக்குற்றாலக்குறவஞ்சிர் குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானைப் பாடுவதாக தலப் புராணவரலாறு குறிப்பிடுகிறது. இந்நுhல் இனிய சந்த அமைப்புகளோடு, எளிய சொற்களால் எழுதப்பட்ட அரிய நுhல். இதில் வரும் கண்ணிகள் முதலியன கருத்தை உருக்கும் மோனை, எதுகை நயங்களோடு நுண்ணிய பொருட் செறிவு கொண்டு விளங்குகின்றன. கற்பனை, உயார்வு நவிற்ச்சி, தற்குறிப்பேற்றம் இவைகளை அமைப்பதில் ஆசிரியார் மிகச் சிறந்து விளங்கியுள்ளாhர். சொற்கள் தட்டு தடையின்றிப் பாடல்களில் அமைத்துள்ளாh.ர் இந்நுhலில் உள்ள பாடல்களுக்கு அமைந்துள்ள உரை இயல்புகளைக் கீழ் வருமாறு காணலாம்.
1.பொழிப்புரை
2.விளக்கவுரை
3.நயவுரை
4.வடமொழி சொல்லுக்கு தமிழ் விளக்கம் தருதல்
5.மக்கள் வழக்குச் சொற்களை உரைக்குள் வருவித்தல்
6.புராண விளக்கம் தருதல்
7.தருவித்து உரை கூறுதல்
8. பொருள்கோடலில் முறண்பாடு
9.மேற்கோள் பாடல் காட்டுதல்
10.பாடவேறுபாடு காட்டுதல்
11.கருத்துச் செறிவுகள்
12.உவமை நயங்கள்
13.ஓசை நயங்கள்
14.சோp மொழிச்சிறப்புகள்
15.இறைவனைப் பற்றியக் கருத்துக்கள்

     பொழிப்புரையில் பாடல்களுக்குரிய பொதுவான விளக்கமும், விளக்கவுரையில் சொல்லுக்குச் சொல் பொருள் கொடுக்கப்பட்டுள்ளதும், நயவுரையில் பாடல் முழுவதுக்கும் தொகுத்துப் பொருள் தருவது சாலச் சிறந்ததாகும்.

     வடமொழிச் சொல்லுக்கு தமிழ் விளக்கம் தருவதைப்பாடல் தோறும் காணமுடிகின்றது. (எ-கா). சநு- என்ற வட சொல்லுக்கு உதவி என்றும், வங்காரம்-பொன் என்றும், பு+ஷணம்-அணி என்றும், திலதம்-பொட்டு என்றும், சிங்காரம்-அழகு என்பன போன்ற வட சொல் பாடல் தோறும் பயின்று வர அதற்கு தமிழ் விளக்கம் கொடுத்துள்ளனார்.

     மக்கள் வழக்குச் சொற்களை உரைக்குள்  வருவித்தல் ஒரு பாடலில் வித்து என்பதற்கு விதை என்றும் மக்கள் வழக்குச் சொல்லான கொட்டை என்பதையும் பயன்படுத்தியிருப்பதை அறியலாம்.     உவமை நயங்கள் மடவார்கண்போல் ஈட்டி கொண்டு என்பன போன்று உவமை நயங்களும் கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே, தாpகொண்டு தில்லை நாp கொண்டுப் போச்சு, அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம் என்ர்பன போன்ற உவமை நயங்களை நிறம்பக் காணலாம்.  

     இறைவனைப் பற்றிய கருத்துக்களில் குறும்பலவின் முளைத்தொழுந்த சிவக் கொழுந்து என்றும் நித்தார்திரி கூடலிங்கார், நன்நகார்ப் பொருமான், ஒரு பெண் முடியில் வைத்தார்போன்ற சொற்கள் இறைவனைப்பற்றிய கருத்தாக அமைந்துள்ளது. மேலும் இவை போன்ற ஏராளமான கருத்துப் பெட்டகமாக திருக்குற்றாலக் குறவஞ்சி விளங்குகின்றன.        

நந்திக்கலம்பகம் 

     கலம்பகங்களுள் காலத்தால் முற்பட்டது நந்திக்கலம்பகமேயாகும். இந்நுhல் கி.பி 9-ஆம் நுhற்றாண்டின் இடையில் பாடப்பட்டதாகும். இக் கலம்பகம் நந்தி மன்னனது போhர், வெற்றி, வீரம், காதல், கொடை, கல்வி, ஆகியவற்றை புகழ்ந்துப் பாடப்பட்டுள்ளது. இந்நுhல் சாpத்திர ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நந்திக்கலம்பகத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்கச் செய்திகள் பொதிந்திருக்கின்றன. மேலும் புராணச் செய்திகளான சிவன் திரிபுரம் எரித்தது, கங்கையை தன் தலைசடை முடியில் அணிந்தது, சக்திக்கு உடம்பில் செம்பாதியை கொடுத்தது, சிவபொருமான் மன்மதனை எரித்த வரலாறு, இராவணன் கைலையை பெயர்த்தது, சிவன் நஞ்சுண்ட வரலாறு, எமனை உதைத்தது போன்ற புராண வரலாற்றுச் செய்திகள் படிக்கும் வாசகருக்கு புரியும் படி விளக்கப்பட்டுள்ளன.
     நந்திக்கலம்பகப் பாடல்களில் இலக்கணக் குறிப்புகளை இடம் பெறச் செய்வதில் இதன் ஆசிரியார் தனிக்கவனம் செலுத்தியிருப்பர் போல,ர் ஏனெனில் பாடல் தோறும் இலக்கணக் குறிப்பும் அதற்கு உரையாசிரியார் முழுமையான இலக்கணம் விளக்கம் கொடுத்திருப்பதும் விரிவாகக் காணமுடிகிறது. (எ-கா) பரடு-இடக்கார் அடக்கல், தொண்டை-ஆகுபெயர், மெல்லியர்-பண்புத்தொகை போன்றவற்றைக் காணமுடிகிறது.
    பாடல்களில் வடசொல் இடம்பெற்றிருப்பதும் அதற்கு உரையாசிரியார் விளக்கம் தருதல் படிப்பவர் எவ்வித ஐய்யமும் இன்றிப் பொருள் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இதனைத் தொடர்ந்து சில ஊர்களின் பெயர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பானதொரு அம்சமாகும்.       நந்திவர்மனின் வரலாற்றைக் கூறும் இந்நுhலின் உரையாசிரியர் போல் கழக உரையாசிரியர்கள் பொழிப்புரை, தெளிவுரை என்ற இரண்டு நிலைகளிலும் சொல்லுக்குச் சொல் பொருள் தரும் விதமும் போற்றுதற்குரியது. இந்நுhலில் சில பாடல்களுக்கு பாடபேதமும,ர் எடுத்துக்காட்டு பால்களுடன் விளக்கப்பட்டு உள்ளதும் கூடுதல் தகவல்களை தொpந்துகொள்வதற்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
உரைகள் தோன்றக் காரணம்
     உரைகள் தோன்றியதற்குக் காரணங்களாக ஆய்வாளர்கள் விளக்குவன இவண் சுட்டத்தக்கன. குறிப்பிட்ட ஒரு காலத்தில் வாழும் மக்களிடையே அறிவுப்பசி தலையெடுக்கின்ற பொழுது, பழம்பெரும் நுhல்களுக்கு அக்கால வாழ்க்கைச் சூழலுக்கேற்ப விளக்கம் தர அறிஞர்கள் முயன்றுள்ளனர். அவர்களுடைய உள்ளத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை மேலோங்கி நிற்கின்ற பொழுதும், பழமையில் புதியன காணவேண்டும் என்ற உணர்ச்சித் துடிப்பு உண்டாகின்ற பொழுதும் பழைய நுhல்களுக்கு உரையெழுதி வந்துள்ளனர் என்பார் கி.ஆதிநாராயணன் (உரையாசிரியர்களும் திறனாய்வுக் கோட்பாடுகளும், ப.33).  தமிழ் இலக்கண இலக்கியங்களின் பொருள் வளத்தையும் மொழி நுட்பத்தையம் அறிந்து கொள்வதற்கு உரைக்கல்வி மிகவும் இன்றியமையாதது. உரையாசிரியர்கள் மூலநுhலை ஆராய்ந்து அதனுல் பொதிந்து கிடக்கும் நயத்தையும் சிறப்புக் கூறுகளையும் சொல்லாட்சித்திறனையும் புலப்படுத்தினர். ஒரு இலக்கிய படைப்பின் கண் இலக்கியச் சிறப்புக்களையொல்லாம் கலை நுணுக்கத்தின் உதவியால் வெளிப்படுத்துவதே சிறந்த உரையாகக் கருதுவர். பண்டைய உரையசிரியர்களும் தாம் உரை எழுதிய இலக்கியங்களின் பல்வேறு சிறப்புக் கூறுகளையும் தம் உரைமூலம் வெளிக்கொணர்ந்து புலப்படுத்தினர்.  வளம் நிறைந்த வற்றாத இலக்கிய மரபும் புலமை மரபும் கொண்டு இலக்கண இலக்கியங்களைக் கூர்ந்து ஆராய்ந்து தெளிவுறுத்தினர்.      சிற்றிலக்கியங்கள் காலம் தோறும் படிப்பவர் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமாக அதற்கு உரை வகுத்த உரையாசிரிகள் வாசிப்பவாpன் உள்ளக்கிடக்கையின் வெளிப்படாக தம் உரைகளை வகுத்துரைத்திருப்பது அவ்விலக்கியங்களின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளன. 


No comments:

Post a Comment