Pages

Friday 3 April 2015

நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில் 5



நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்
81. மீ என்ற சொல் எவ்வாறு புணரும்?
மீ என்னும் சொல்லின் முன் வல்லினம் வரின் வல்லினமும் மிகும் மெல்லினம் மிகும்.
i)மீ+கூற்று= மீக்கூற்று  வல்லினம் மிகுந்தது
ii)மீ+தோல்= மீந்தோல்  மெல்லினம் மிகுந்தது
82.மலையாட்டி பெயர் இடைநிலைக் காண்?
மலையாட்டி = மலையாள்+த்+இ, த் - இடைநிலை
83. தொகைநிலைத் தொடர் மூன்று கூறுக?
வினைத்தொகை, அன்மொழித்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை இவை ஐந்தும் தொகைநிலைத் தொகை ஆகும்.
(உ.ம்) கொல்யானை, கருங்குவளை, மதிமுகம்
84. சுரையாழ அம்மி மிதப்ப எத்தொடருக்கு உ.ம்?
Image result for சுரை குடுவைImage result for அம்மி
சுரையாழ அம்மி மிதப்ப தழா தொடருக்கு உதாரணம் ஆகும்.
85. குறுக்கல் விகாரம் என்றால் என்ன?
நெடில் எழுத்துக்களை குறிலெழுத்துக்களாக பயன்படுத்துவது குறுக்கல் விகாரம் எனப்படும்.
(உ.ம்) தீயேன்-தியேன், தீயேன் என்னும் சொல் தியேன் எனக் குறுகி நின்றது.
86. மரப்பெயர்கள் எவ்வாறு புணரும்?
உயிரை இறுதியாக உடைய சில மரப்பெயர்களின் முன் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழியில் வல்லினம் வந்தால் பொது விதிப்படி வல்லினம் மிகாமல் மெல்லினம் மிகும்.
Image result for விளங்காய்Image result for மாங்காய்
(உ.ம்) விள+காய்  விளங்காய்
மா+பழம் - மாம்பழம்
87. வினாசுட்டின் முன் நாற்கணம் புணரும் முறை பற்றி எழுதுக?
(i) ‘எ’ என்னும் வினா முன் அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்துக்களின் முன்னும் உயிரும் யகரமும் வரின் வகரமெய் தோன்றும்.
(ii) யகரம் அல்லாத மெய்கள் வரின் அவ்வாறு வந்த மெய்கள் மிகும்.
(iii) செய்யுளில் சுட்டெழுத்து நீண்ட விடத்து யகரம் தோன்றும்.
(உ.ம்) (i) எ+அணி = எவ்வணி (வினா முன் உயிரும் யகரமும் வரவ கரம் தோன்றியது)
எ+யானை = எவ்யானை
(ii) எ+குதிரை=எக்குதிரை (வினாவின் முன்னும் சுட்டின் முன்னும் பிற மெய்கண் வர அவ்வந்த மெய் தோன்றின)
எ+சிங்கம் = எச்சிங்கம்
(iii) அ+இடை = ஆயிடை (செய்யுளில் சுட்டு நீண்டு யகரம் தோன்றியது)
88. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் விளக்குக?
Image result for குற்றியலுகரம் Image result for குற்றியலுகரம்Image result for குற்றியலுகரம்Image result for குற்றியலுகரம்
குற்றியலுகரத்தின் முன் வருமொழி முதலில் உயிர் வந்தால் குற்றியலுகரம், தான் ஏறிய மெய்யை விட்டுக் கெடும்.
(உ.ம்) நாகு+அரிது = நாகரிது
89. பலசில சொற்கள் புணரும் முறை யாது?
பலசில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வருமாயின் i) இயல்பாதலும் ii) மிகுதலும் iii) நிலைமொழி இறுதி அகரம் கெட லகம் றகரமாக திரியும் iஎ) அகரம் நிற்றலும் நீங்கலும் உளவாம்.
(உ.ம்)
(i) பல+பல=பலபல   சில+சில=சிலசில (வல்லினம் இயல்பாயிற்று)
(ii) பல+பல=பலப்பல  சில+சில=சிலச்சில (வல்லினம் மிகுந்தது)
(iii) பல+பல=பற்பல   சில+சில=சிற்சில (அகரம் கெட லகரம் றகரமாயிற்று)
(iஎ) பலகலை=பல்கலை (அகரம் நிற்றலும் நீக்கலும் வளவாம்)
90. புளி என்ற சொல் எவ்வாறு புணரும்?
Image result for உயிர்எழுத்து
Image result for குற்றியலுகரம்
புளி என்னும் சொல் புளிய மரம், புளியம் பழம், புளி சுவை ஆகிய மூன்று பொருளை தரும். இவற்றுள் சுவையை உணர்த்தும் புளி என்னும் சொல்லுக்கு முன் வல்லினம் மிகுதலே அன்றி அதற்கினமான மெல்லினமும் மிகும்.
(உ.ம்) புளி+கறி=புளிங்கறி
புளி+சோறு=புளிஞ்சோறு
புளி+தயிர்=புளிந்தயிர்
91. சோறு+வளம் எவ்வாறு புணரும்?
ட, ற வரும் குற்றியலுகரங்கள் வருமொழி எதுவரினும் வந்தமெய் மிகும்.
சோறு+வளம்= சோற்றுவளம்
92. ஒன்று+ஆயிரம் எவ்வாறு புணரும்?
ஒன்று+ஆயிரம்= ஓராயிரம்.இறுதியில் நின்ற உயிர்மெய் கெட்டு நின்ற ஒன்று என்னும் எண்ணிக்கை னகரம், ரகர மெய்யாகித் திரியும்.
93. ‘நான்கு’ புணர்ச்சி விதி கூறு?
இறுதி உயிர்மெய் ‘கு’ கெட்டு விடும் னகர மெய்யானது. றகரமாகவும், லகரமாகவும் மாறும்.
(உ.ம்)நான்கு+அடி=நாலடிநான்கு+பத்து=நாற்பது
94. ஒன்று முதல் எட்டு நிலைமொழியாக பத்து வருமொழி வரிண் புணரும் முறை யாது?
ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களின் முன்வரும் பத்து என்னும் எண்ணின் நடுவில் நின்ற i) தகரமெய் கெடுதலும், ii) தகரம் கெட்ட இடத்தில் ஆய்தம் தோன்றலும் எனும் இரு விதிகளையும் பத்து என்பது பொருந்தும் என்று சொல்லுவர்.
ஒன்று+பத்து =ஒருபது    ஒருபஃது
இரண்டு+பத்து = இருபது    இருபஃது
மூன்று+பத்து = முப்பது   முப்பஃது
நான்கு+பத்து = நாற்பது  நாற்பஃது
ஐந்து+பத்து = ஐம்பது   ஐம்பஃது
ஆறு+பத்து = அறுபது  அறுபஃது
ஏழு+பத்து = எழுபது    எழுபஃது
எட்டு+பத்து = எண்பது  எண்பஃது
95. வண்டுகால், வட்டுக்கால்  எது சரி?
Image result for வண்டு கால்
வண்டுகால், வட்டுக்கால் இரண்டுமே சரி. வண்டுகால் என்பதில் ‘ட’ வின் இனமெய் மிகும். வட்டுக்கால் என்பதில் ‘க’வின் மெய் மிகும். எனவே இரண்டும் சரி.
96. பண்டு+காலம் எவ்வாறு புணரும்?
பண்டு+காலம் = பண்டைக்காலம்.ஐகாரச்சாரியை இறுதியில் பெற்று வருகின்ற குற்றியலுகரச் சொற்களும் வருவன மென்றொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும்.
97. மேற்கு+திசை எவ்வாறு புணரும்?
மேற்கு+திசை = மேல்திசை
உயிர்மெய் கெட, றகரம் லகரமாய்த் திரிந்தது.
98. தெரிநிலை வினைப்பெயரெச்ச விகுதிகள் எத்தனை சில கூறு?
உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டு தெரிநிலை வினைப்பெயரெச்ச விகுதிகள் உள்ளன.
99. மூன்று, ஆறு, ஏழு எவ்வகையில் ஒற்றுமையுடையன?
மூன்று, ஆறு, ஏழு ஆகியவை அனைத்தும் முதல் குறையும் பெற்று வருகிறது. மூன்று+கண்=முக்கண்
100. ஐந்து+எடை எவ்வாறு புணரும்?
Image result for புணர்ச்சி விதி
ஐந்து+எடை= ஐந் எடை (உயிர்மெய் கெட்டது)
ஐந்எடை = ஐ+எடை (ஒற்று கெட்டது)
= ஐ+ய்+எடை
=ஐயெடை (உடம்படுமெய் வந்தது)



1 comment: