Pages

Friday 3 April 2015

நன்னூல் எழுத்திகாரம் வினாவிடையில் 7


நன்னூல் எழுத்திகாரம் வினாவிடையில்

121. பொருட்புணர்ச்சி என்றால் என்ன?
வேற்றுமை உருபு மறைந்து நிற்க அவ்வுருபின் பொருள் தெரியுமாறு புணரும் புணர்ச்சி (உ.ம்) கல் எறிந்தான்.
122. சிறுகண்+களிறு எவ்வாறு புணரும்?
Image result for யானை சிறுகண்+களிறு=சிறுகட்களிறு
வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ண, ன என்ற நிலைமொழி இறுதிமெய்கள், முறையே ட, ற என்ற மெய்களாகத் திரியும்.
123. சாதி பற்றி வரும் ‘ண’ மெய்யீறு எவ்வாறு புணரும்?
i) சாதி பற்றி வரும் பெயர் குழுஉ (கூட்டம்) பற்றி வரும் பெயர், பரண், கவன் என்னும் பெயர்கள் ஆகியவற்றின் இறுதியில் வரும் ‘ண’கரம் வேற்றுமையின் வல்லினம் வரின் இயல்பாகும்.
Image result for பாணன்(உ.ம்) பாண்+குடி=பாண்குடி
அமண்+சேரி=அமண்சேரி
பரண்+கால்=பரண்கால்
கவண்+கால்=கவண்கால்
ii) உணவுக்கு உரிய எள் என்னும் சொல்லின் திரிபாகிய எண் என்னும் பெயர், சாண் என்னும் அளவுப்பெயர் ஆகியவற்றின் இறுதியில் வரும் ‘ண’கரம் அல்வழியில் வல்லினம் வரின் டகரமாகத் திரியும்.
(உ.ம்) எண்+கடிது=எட்கடிது
சாண்+கோல்=சாட்கோல்
124. தேக்குடம், தேங்குடம் எது சரி? ஏன்?
தேக்குடம், தேங்குடம் இரண்டும் சரி. ஏனெனில், தேன் என்னும் சொல்லின் இறுதி னகர மெய் அல்வழி வேற்றுமை ஆகிய இருவழியிலும் வல்லினம் வரின் னகர மெய் கெட, வந்த வல்லினமே அதற்கு இனமான மெல்லினமோ மிகும்.
(உ.ம்) தேன்+குடம்=தேன் குடம், தேக்குடம், தேங்குடம்
125. வல்லுநாய், வல்ல நாய் எது சரி?
வல்லுநாய் வல்லநாய் இரண்டும் சரி. வல் என்பதன் முன் பலகை, நாய் என்னும் பெயர்கள் வரினும் பிற பெயர்கள் வரினும் வேற்றுமையில் உகரச் சாரியையும், அகரச் சாரியையும் பெறும். (வருமொழியில் வல்லினம் வராததால் ஒற்று மிகவில்லை.)
126. னகரம் முன் நகரம் வரின்?
நிலைமொழி இறுதியில் ‘ன’கரம் வரின் வருமொழி முதலில் உள்ள நகரத்தின் நகரமெய் கெட்டு னகரமாக திரியும். (உ.ம்) அரசன்+நன்மை= அரசனன்மை
அரசன்+ந்+அன்மை=அரசனன்மை
127. கண்ணன் 8 வேற்றுமை உருபுகளை எழுதுக?
கண்ணன் - பெயர்
கண்ணனை- ஐ
கண்ணனால்  ஆல்
கண்ணனுக்கு  கு
கண்ணனின் - இன்
கண்ணனது  அது
கண்ணன் கண்- கண்
கண்ணா  விளி
128. ஐ, கண் போன்ற வேற்றுமை உருபுகள் பெயருடன் எவ்வாறு புணரும்?
கண்ணன்+ஐ = கண்ணனை
கண்ணன்+கண் = கண்ணன் கண்
129. புளியங்காய் சாரியை கண்டுபிடி?
Image result for புளியங்காய்புளியங்காய் = புளி+அம்+காய்,  அம் சாரியை பெற்றது.
130. எல்லாம் உயர்தினை சாரியை கூறுக?
எல்லாம் என்னும் சொல் உயர்திணையில் வரும்போத இடையில் நம் சாரியையும் உருபுக்குப் பின் முற்றும்மையும் பெறும். எல்லாம்+நம்+ஐ+உம் = எல்லாநம்மையும்.
131. கோ வேற்றுமை உருபுடன் எவ்வாறு கூடும்?
ஆ.மா.கோ. என்னும் மூன்று சொற்களும் உருபுகளோடு புணரும் போது னகரச் சாரியை பெறும் கோ+ஐ=கோனை உகரச் சாரியை பெறும்.
132. அஃது வேற்றுமை உருபுடன் எவ்வாறு கூடும்?
Image result for உயிர்எழுத்து
அஃது என்னும் சுட்டுப் பெயர்களில்  சுட்டெழுத்தின் முன் உள்ள ஆய்தம், ஆறு வேற்றுமை உருபுகளோடும் புணரும் போது அன் சாரியை வரின் கெடும்.
அஃது+ஐ= அதனை
வரின் என்றமையால் உருபேற்கும்போது அன் சாரியை வராமலும் இருக்கும். அப்போதும் ஆய்தம் கெடாது.
அஃது+ஐ= அஃதை
133. நிலைமொழி அகரம் இருப்பின் அத்துச் சாரியை எவ்வாறு புணரும்?
அத்துச் சாரியையின் முதலில் உள்ள அகரம், அகர ஈற்றுச் சொல்லுக்கு முன் வந்தால் கெடும்.
1)மக+அத்து+கை
ம+க்+அ+அத்து+கை
மகத்துக்கை  இயல்பு ஈறு
2)மர+அத்து+நிழல்
மர்+அ+அத்து+நிழல்
மரத்து நிழல்  விதி ஈறு.
134. சாரியை வகைகள் கூறுக?
சாரியை மூன்று வகைப்படும். அவை,
i)எழுத்துச் சாரியை  அகரம், ஏகாரம் முதலியன
ii)பதச் சாரியை  அன், ஆன் முதலியன
iii)இயல்பு சாரியை  தன்+கை=தன்கை
135. ஆள் விகுதி ஆண்பால் பெயர்களுக்கு வரும் சொல்லை கூறுக?
(உ.ம்) பெருமாள்  ‘ஆள்’ விகுதி
பெருமாள் என்பதில் உள்ள ‘ஆள்’ விகுதி ஆண்பாலைக் காட்டுகின்றன. எனவே ‘ஆன்’ விகுதி, ஆள் விகுதி எனத் திரிந்து ஆண்பாலை உயர்த்தியது எனக் கொள்க.
136. ண, ன ஈற்று சொற்கள் புணரும் வகையை ஒரு கட்டுரை வரைக?
ணகர னகர ஈறு கெடுதல்
குறில் அணைவு இல்லா ணனக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடே.
தனிக் குற்றெழுத்தை அடுத்து வராமல் ஒருமொழி, தொடர் மொழிகளைச் சார்ந்து வரும் ணகர, னகர மெய்கள், வருமொழிக்கு முதலில் வந்த நகரம் திரிந்த இடத்தில் கெடுதலைப் பொருந்தும்.
(உ.ம்) i) தூண்+நன்று ii) அரசன்+நல்லன் =
தூண்+ந்+அன்றுஅரசன்+ந்+அல்லன்
தூணன்றுஅரசனல்லன்
தூண்+நன்று=தூணன்றுஅரசன்+நல்லன்=அரசனல்லன்
ணகர ஈற்றுப் பெயர்களுக்கு சிறப்பு விதி
சாதி குழுஉப் பரண் கவன் பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு என் சாண் பிற
டவ்வா கனும் ஆம் அல்வழி யும்மே.
1.சாதி பற்றி வரும் பெயர், குழுஉ பற்றி வரும் பெயர் வேற்றுமையில் ணகரம் இயல்பாயிற்று
உம். பாண்+குடி= பாண்குடி
அமண்+சேரி= அமண் சேரி
2.பரண், கவண் என்னும் பெயர்கள் ஆகியவற்றின் இறுதியில் வரும் னகரம் வேற்றுமையில் வல்லினம் வரின் இயல்பாகும்.
உம். பரண்+கால்= பரண்கால்
கவண்+கால் = கவண்கால்
3.உணவுக்கு உரிய எள் என்னும் சொல்லின் திரிபாகிய எண், என்னும் பெயர், சாண் என்னும் அளவுப் பெயர் ஆகியவற்றின் இறுதியில் வரும் ணகரம் அல்வழியில் வல்லினம் வரின் டகரமாகத் திரியும்.
உம். எண்+கடிது= எட்கடிது
Image result for உயிர்எழுத்து
சாண்+கோல்= சாட்கோல்
னகர ஈற்று சாதிப் பெயர்
னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான்
அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
1)னகரத்தை இறுதியாக உடைய சாதிப் பெயர் வேற்றுமையில் வல்லினம் வரின் ஈறு திரியாமல் இயல்பாகும்.
உ.ம். எயின்+குடி= எயின் குடி

2)னகரத்தை இறுதியாக உடைய சாதிப்பெயர் வேற்றுமையில் வல்லினம் வரின் அகரச் சாரியையும் பெறும்.
உம். எயின்+சேரி= எயினச் சேரி

137. பதவியில் என்னும் இயலில் வரும் செய்திகளைத் தொகுத்துரைக்க?
பதவியலில் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் பகுபத உறுப்புகளின் மூன்று உறுப்புகளைக் காண்கிறோம்.
பதம்
நுhற்பா
எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் அதுபகாப் பதம் பகுபதம் என
இருபா லாகி இயலும் என்ப.
எழுத்துக்கள் ஒவ்வொன்றாகத் தனித்தோ (அ) இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளை தருமானால் அது பதம் எனப்படும்.
பதத்தின் வகை
1)பகுபதம்
2)பகா பதம்

1)பகுபதம்
நுhற்பா பொருள் இடம் காலம சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறும் காரணமாக வருகின்ற சொற்கள் தெரிநிலையாகவும், குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும் வினைச் சொற்கள் பகுபதங்கள் ஆகும்.

உ.ம். தொடரெழுத்து ஒருமொழிகள். (கூனி, குழையன்)

2)பகா பதம்

நுhற்பா பகுப்பால் பயனற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்.
பெயர்ச் சொல்லும், வினைச்சொல்லும் இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆகிய நான்கும் பகாப்பதங்கள் ஆகும்.
உ.ம். ஓரெழுத்து ஒருமொழிகள் (கோ, வா, பை)
ஓரெழுத்தொருமொழி
எழுத்துக்கள் தனித்து நின்றுப் பொருளைத் தருபவை ஓரெழுத்தொரு மொழி ஆகும். ஆவ்வாறான எழுத்துக்கள் 42 ஆகும்.
உ.ம் ஆ=பசு ஐ= தலைவன் கோ=அரசன் மா=பெரிய
தொடரெழுத்தொருமொழி
பகாப்பதங்கள் இரண்டெழுத்து முதல் ஏழெழுத்து ஈறாகவும் பகுபதங்கள் இரண்டெழுத்து முதல் ஒன்பதெழுத்து ஈறாகவும் வரும்.
உ.ம். பகா பதம் = அணி, அறம், உத்திரட்டாதி
பகுபதம்= கூனி, உத்திரட்டாதியன்
பகுபத உறுப்புகள்
நுhற்பா
பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.
(உ.ம்) நடந்தனன்=நட+த்(ந்)+த்+அன்+அன்
நட-பகுதி, த்-சந்தி, (ந்) ஆனது விகாரம், த்-இடைநிலை, அன்-சாரியை, அன்-விகுதி.
பகுதி
தத்தம்
நுhற்பா
பகாப்ப தங்களே பகுதியாகும்.
பெயர்ப் பகாபதம், வினைப் பகாபதம் ஆகியவற்றில் அவற்றின் முதலில் நிற்கும் பகாப்பதங்களே பகுதிகள் ஆகும். (உ.ம்) பொன்னன்=பொன்-பகுதி,
அ) பண்புப் பகுதி
செம்மை முதலாகக் கூறப்பட்ட பதினொன்றும் இவற்றுக்கு எதிர்மறையாக வருகின்ற வெண்மை முதலியனவைகளும் இவை போன்ற பிறவும் பண்புப் பொருளில் இருந்து வேறுபொருள் பகுக்க முடியாத தன்மை வாய்ந்த பதங்கள் ஆகும்.
(உ.ம்)
செம்மை ஒ வெண்மை
தீமை ஒ நன்மை
பண்புக்குரிய இயல்கள்
நுhற்பா
ஈறுபோதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடிஅகரம் ஐ ஆதல்
தன்ஒற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல்
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
i)ஈறுபோதல்
ii)இடை உகரம் இய்யாதல் (கரியன்)
iii)ஆதிநீடல் (பாசி)
iஎ)அடி அகரம் ஐ ஆதல் (பைந்தார்)
எ)தன்ஒற்று இரட்டல் (வெற்றிலை)
எi)முன்னின்று மெய்திரிதல் (சேதாம்பல்) இவை ஆறும் பண்புக்குரிய இயல்களாகும்.
ஆ) ஏவல் வினைப் பகாபதம்
நுட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்ற 23ம் செய் எனும் ஏவல் வினை பகாபதங்கள் ஆகும்.
விகுதி
விகுதி என்பது பகுபத உறுப்புகளில் ஒன்று. இது இறுதியில் இருப்பது எனவே இறுதிநிலை எனப்படும். இவை 2 வகைப்படும்.
i)வினை விகுதி  ii) பெயர் விகுதி
அ) வினை விகுதி
வினையின் இறுதியில் வரும் விகுதிகள் 37 ஆகும். வினை விகுதிகள் தெரிநிலை வினை விகுதி, குறிப்பு வினை விகுதி என இருவகைப்படும். அவை இரண்டும் 37க்குள் அடங்கும். வினை விகுதி வினைமுற்று என்றும் அழைக்கப்படும்.

i)ஆண்பால் படர்கை வினைமுற்று விகுதி=அன், ஆன்
ii)பெண்பால் படர்கை வினைமுற்று விகுதி=அள், ஆள்
iii)பலர்பால் படர்கை வினைமுற்று விகுதி=அர், ஆர், ப, மார்
iஎ)பலவின்பால் படர்கை வினை விகுதிகள்=அ, ஆ
எ)ஒன்றன்பால் படர்கை வினை விகுதி=து,டு,று
எi)தன்மை ஒருமை வினை விகுதி= து,டு, று, கு, என், ஏன், அல், அன்
எii)தன்மை பன்மை வினை விகுதி=அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டும், தும், றும்
எiii)முன்னிலை ஒருமை வினை விகுதி=ஐ, ஆய், இ
iஒ)முன்னிலை பன்மை வினை விகுதி=மின், இர், ஈர்
ஒ)வியங்கோள் வினை விகுதி=க, ய, ஈயர்
ஒi)செய்யுள் எனும் வினைமுற்று=உம்
ஆ) பெயர்விகுதி
ஆன், இ, மார், தை, மான் ஆகியவை பெயர் விகுதிகள் ஆகும்.
இடைநிலை
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் இருப்பது இடைநிலை எனப்படும்.
நுhற்பா
இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனலே.
இடைநிலை வகைகள்
இடைநிலை மூன்று வகைப்படும். அவை i) இறந்த கால இடைநிலை ii) எதிர்கால இடைநிலை iii) நிகழ்கால இடைநிலை ஆகியவை ஆகும்.
அ) இறந்த கால இடைநிலை
நுhற்பா
தடற ஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை
த், ட், ற், ன் என்பன இறந்த கால இடைநிலை எனப்படும். இவை ஐம்பால், மூவிடங்களிலும் வரும்.
உ.ம் படித்தான்-த், உறங்கினான்- இன்
ஆ) நிகழ்கால இடைநிலை
நுhற்பா
ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை
கிறு, கின்று, ஆநின்று என்னும் மூன்றும்,  மூன்று இடங்களிலும் ஐம்பாலிலும் நிகழ்காலத்தை காட்டுகின்ற இடைநிலைகள் ஆகும்.
(உ.ம்)நடக்கிறான்-கிறு, நடவானின்றான்-ஆநின்று
இ) எதிர்கால இடைநிலை
நுhற்பா
பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை யாம்இவை சிலசில.
ப், வ் என்னும் மெய்கள் மூன்று இடங்களிலும் ஐம்பால்களிலும் எதிர்காலத்தை காட்டுகின்ற இடைநிலைகள் ஆகும். (உ.ம்) நடப்பான்-ப், செல்வான்-வ்
முடிவுரை
ழுதவியல் என்னும் இயலானது பகுபத உறுப்பு பற்றி கூறினாலும், பகுதி, விகுதி, இடைநிலை என்ற மூன்று பற்றியே கூறுகிறது.

138.அல்வழி புணர்ச்சி பற்றி எழுதுக?
வேற்றுமை ஐம்முதல் ஆறாம் அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளிஈ ரெச்சம் முற்று இடைஉரி
தழுவு தொடர்அடுக்கு எனஈரேழே.
ஆல்வழி புணர்ச்சி
வேற்றுமையுருபு அல்லாத வழியில் புணர்வது அல்வழிப்புணர்சி எனப்படும். இது இரண்டு வகைப்படும்.
i)தொகைநிலை தொடர்
ii)தொகாநிலைத் தொடர்
அ) தொகைநிலை தொடர்
தொகை என்றால் மறைந்து வருவது என்றுப் பொருள். வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என தொகைநிலை 5 வகைப்படும்.
(உம்) 1. கொல்யானை-வினைத்தொகை
2.கருங்குவளை-பண்புத்தொகை
3.மதிமுகம்-உவமைத்தொகை
4.இராப்பகல்-உம்மைத்தொகை
5.பொற்றொடி-அன்மொழித் தொகை
ஆ) தொகாநிலைத் தொடர்
தொகாநிலைத்தொடர்கள் எட்டு வகைப்படும். அவை பின்வருமாறு
(உ.ம்)
1) வேலன் வந்தான்-எழுவாய்த்தொடர்
2) வேலா வா- விளித்தொடர்
3) வந்து போனான்-பெயரெச்சத் தொடர்
4) வந்தான் வேலன்-தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
5) பெரியன் வேலன்- குறிப்பு வினைமுற்றுத் தொடர்
6) மற்றொன்று- இடைச்சொற்றொடர்
7) நனிபேதை- உரிச் சொற்றொடர்
8) பாம்பு பாம்பு  அடுக்குத் தொடர்
இவை தொகா நிலை தொடர்கள் ஆகும்.
தழுவு தொடர்
நிலைமொழியானது வருமொழியோடு பொருள் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு தொடர் எனப்படும்.
உ.ம்
கண்ணன் வந்தான்.
தழா தொடர்
நிலைமொழியானது வருமொழியோடு பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் தழாதொடர் எனப்படும்.
(உ.ம்) சுரையாழ அம்மி மிதப்ப
சுரையாழ அம்மி மிதப்ப என்பது, சுரை மிதப்ப, அம்மி ஆழ எனக் கூட்டப்படுதலால் சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் தழுவாது தொடர்ந்தன.
இது தழா தொடராகிய அல்வழிப் புணர்சி ஆகும்.

139.எண்கள் புணரும் முறையை விளக்குக?
Image result for எண்கள்
ஒன்று, இரண்டு என்ற இரு எண்களோடு வருமொழி முதலில் உயிர்வரின் ஓர், ஈர் என திரியும். வருமொழி முதலில் மெய்வரின் ஒரு இரு எனத் திரியும்.
(உ.ம்) ஒன்று+ஆயிரம்= ஓராயிரம் (ஒன்று என்பது முதல்)
ஒன்று+கழஞ்சு=ஒருகழஞ்சு (நீளாமல் ரகர மெய்)
இரண்டு+ஆயிரம்=ஈராயிரம் (இரண்டு என்பது முதல்)
இரண்டு+கழஞ்சு=இருகழஞ்சு (நீளாமல் ஈற்று உயிர்மெய்)
மூன்று என்பதற்கு சிறப்பு விதி
இறுதி உயிர்மெய் கெட்டு நின்ற மூன்று என்னும் எண்ணினது னகர மெய் கெடுதலும், வருமொழி முதலில் வரும் மெய்யாகத் திரிதலும் ஏற்குமிடங்களில் ஆகும்.
(உ.ம்) மூன்று+ஆயிரம்=மூவாயிரம் (உயிர்வர குறுகாமல்)
மூன்று+நூறு=முந்நூறு (வருமொழி மெய்யாகத் திரிந்தது)
நான்கு என்பதற்கு சிறப்பு விதி
நான்கன் மெய்யே லறஆ கும்மே
நான்கு என்பதில் இறுதி உயிர்மெய் கெட்டு நின்ற நான்கு என்னும் எண்ணினது னகரம், லகரமாகவும், றகரமாகவும் திரியும்.
கு கெட்டு விடும். ன்-ற் ல் ஆக மாறிவிடும்
(உ.ம்) நான்கு+அடி=நாலடி
நான்கு+கழஞ்சு=நாற்கழஞ்சு
ஐந்து என்பதற்குச் சிறப்பு விதி
ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும்.
""து"" கெட்டுவிடும். அதே எழுத்தோ அல்லது அதன் இனவெழுத்து வரும்.
(உ.ம்) ஐந்து+மூன்று=ஐம்மூன்று
ஐந்து+கலம்=ஐ+கலம்=ஐங்கலம்
ஐந்து+வகை=ஐவகை
ஆறு, ஏழு தவிர்த்த பிற எண்களின் ஈற்று உயிர் கெடும்.
(உ.ம்) ஒன்று+ஆடு=ஓர் ஆடு (று கெட்டது)
மூன்று+தமிழ்=முத்தமிழ்
ஐந்து+வகை=ஐவகை
ஏழு என்பதின் ஈற்றுயிர் சில சமயம் கெடும்.
(உ.ம்) ஏழு+கடல்=ஏழ்கடல்
எட்டு என்பதற்கு சிறப்பு விதி
எட்டன் உடம்பு ணவ் வாகும் என்ப.
""டு"" என்னும் உயிர்மெய் கெட்டு ட், ண் ஆக மாறும்.
(உ.ம்) எட்டு+ஆயிரம்=எண்ணாயிரம்
எட்டு+வகை=எண்வகை
ஒன்பது என்னும் எண்ணுக்கான புணர்ச்சி விதி
தொண்ணூறு என்பது ஒன்பது+பத்து என்பதன் சேர்க்கை.
தொள்ளாயிரம் என்பது ஒன்பது+நூறு என்பதின் சேர்க்கை.
9+10 (பத்து என்பதை 100 என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.)
9+100 ஒகாரத்தோடு தகரம் சேர்க்க வேண்டும். பத்து என்பதை நீக்க வேண்டும்.
தொண்ணூறு என்பதில் ன கரத்தை ண கரமாக மாற்ற வேண்டும்.
தொ+ண்+நூறு
Image result for எண்கள்
ஆ) தொள்ளாயிரம்
100யை 1000 ஆக்க வேண்டும்.
ஓகாரத்தோடு தகரம் சேர்க்க வேண்டும். பத்து என்பதை நீக்க வேண்டும். ன் என்பதை ல கரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
(உ.ம்) தொள்+ஆயிரம்= தொள்ளாயிரம்
பத்து, ஒன்பது என்பனவற்றின் முன் பிற எண்கள்
ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம்கோடி
எண், நிறை, அளவும், பிறவரின் பத்தின்
ஈற்று உயிர் மெய்கெடுத்து இன்னும் இற்றும்
ஏற்பது ஏற்கும், ஒன்பதும் இணைத்தே.
பத்து என்பது நிலைமொழியாக வருமிடத்து வருமொழியில் எந்த எண்ணுடன் சேரும்போதும் இரண்டு வகையான மாற்றங்களை பெறும்.
i)இன் சாரியை பெறும்
ii)இற்றுச் சாரியை பெறும்
அ) இன் சாரியை பெறும்
(உ.ம்) அ) பத்து+ஒன்று=பதினொன்று
பத்+ஒன்று (து கெட்டது), பத்+இன்+ஒன்று
(இன் சாரியை தோன்றியது.) = பதினொன்று என புணர்ந்தது. இதுபோல், பதிமூன்று, பதினொன்று, பதிநாயிரம், பதின்கலம், பதின்மடங்கு போன்றவை புணரும்.
ஆ) இற்றுச் சாரியை
அ) பத்து+மூன்று=பதிற்று மூன்று
(உ.ம்) பத்+மூன்று (துகரம் கெட்டது) பத்+ற்+மூன்று (ற் சாரியை தோன்றியது)=பதிற்றுமூன்று என புணர்ந்தது.
பதிமூன்று= பத்து+மூன்று= பதிமூன்று என வரும்.
பதிற்று மூன்று= பத்து ஒ மூன்று= முப்பது என வரும்.
பத்து முன் இரண்டு
இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஏற்று னவ்வாகும் என்ப.
பத்தின்முன் இரண்டு வரின் இரண்டு மாற்றங்கள் நிகழும்.
அ) தீ கெடும்  ஆ) த்-ன் ஆகும்.
(உ.ம்) பத்து+இரண்டு=பத்+இரண்டு=பன்னிரண்டு

No comments:

Post a Comment