Pages

Friday 3 April 2015

நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில் 4

நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்

71.விகுதி பற்றிய சூத்திரத்தில் ‘அன்’ விகுதி இரண்டு முறை வருவது ஏன்?
Image result for ஆண்பால்
‘அன்’ என்னும் விகுதி (i) ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதிகள் (ii) தன்மை ஒருமை வினை விகுதிகள் ஆகிய இரண்டு இடங்களில்  வெவ்வேறு பொருளை உணர்த்தி வருகிறது. எனவே சூத்திரத்தில் இவற்றை வேறுபடுத்த 2 முறை வந்தது.
72.து, டு, று எவ்வெவ் வினைகளுக்கு வினையாகும்?
து, டு, று என்னும் விகுதிகள் இரண்டு வினைகளுக்கு வரும். அவை,i)    ஒன்றன்பால் படர்கை வினை விகுதிகள்                                                                               ii)  தன்மை ஒருமை வினை விகுதிகள். ஆகிய இரு வினைகளில் வரும்.
73.பெயர் இடைநிலை காணும் முறை யாது?
பெயரிலுள்ள பகுதியையும், விகுதியையும் பிரித்து இடையில் நின்றதை வினையாலனையும் பெயர்  அல்லாத பெயர்களுக்கு இடைநிலை என்று சொல்லுவர். (உ.ம்) அறிஞன்-அறி+ஞ்+அன் (ஞ்-இடைநிலை)
‘இன்’ இடைநிலை எவ்வெவ்வாறு வரும்?
இடைநிலை
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் புணர்வது இடைநிலை எனப்படும்.
த், ட், ற், இன் ஆகிய இடைநிலைகள் இறந்த கால இடைநிலை ஆகும்.
‘இன்’ இடைநிலை கடை குறைந்து வரும் (எ.கா) எஞ்சியது
‘இன்’ இடைநிலை முதல் குறைந்து வரும் (எ.கா) போனது.
74. நடவான், படித்தான் பகுபத உறுப்பு காண்க?
நடவான்=நட+வ்+ஆன்
நட  பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆன் -  ஆண்பால் படர்க்கை வினை விகுதி
படித்தான்= படி+த்+த்+ஆன்
படி பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் படர்க்கை வினை விகுதி
75. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் காணப்படும் பொது எழுத்துக்கள் யாவை?
உயிர் எழுத்துக்கள் பத்தும் மெய்யெழுத்து பதினைந்து ஆகிய இருபத்தைந்து எழுத்துக்களும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும்.பொது எழுத்துக்கள். (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க, ச, ட, த, ப, ங , ஞ, ண, ந, ம, ய, ர, ல, வ, ள) ஆகியவை.

76. ‘கு’ என்னும் சொல் புணரும் வகை யாது?
வேற்றுமைப் புணர்ச்சியான ‘கு’ என்னும் உருபு ஆனது மறைந்தோ அல்து விரிந்தோ புணரும்.
(உ.ம்) கொற்றன் மகன் + (கு) = கொற்றனுக்கு மகன்
77. உடம்படு மெய் என்றால் என்ன?
நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும்  உயிரெழுத்துக்கள் இருப்பின் இவை புணரும் புணர்ச்சிக்கு உயிர்முன் உயிர் புணர்ச்சி எனப் பெயர். பொதுவாக உயிரும் உயிரும் இணைவது இல்லை. உடன்படாத இவற்றை உடன்படுத்தியதால் அம்மெய்களுக்கு உடன்படுமெய் எனப் பெயர். இம் மெய் அவ்வுயிர்களுக்கு உடம்பாக இருந்து பொருள் தருவதால் இச்சேர்க்கையை உடம்படுமெய் என்கிறோம். உடம்படு மெய்களாக யகரமும், வகரமும் தோன்றும்.
78. தொழிற்பெயர் விகுதிகள் யாவை?
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் பத்தொன்பதும் பிறவும் ஆகும்.
(உ.ம்.) எடுத்தல், காணல், நடவாமை, வாராணை
10. பெயர் விகுதிகள் யாவை?
அன், இ, மார், தை, மான் ஆகியவை பெயர் விகுதிகள் ஆகும்.
(உ.ம்) அன்-முருகன்
இ-பொன்னி
மார்-தேவிமார்
தை-தந்தை
மான்-கோமான்
உறங்கினான், நடக்கின்றான் பகுபத உறுப்புகள் யாவை?
உறங்கினான் உற+க்(ங்)+இன்+ஆன்
உற-பகுதி
க்-சந்தி
ங்-ஆனது விகாரம்
இன்-இறந்தகால இடைநிலை
ஆன்-ஆன்பால் படர்க்கை வினைவிகுதி
நடக்கின்றான் நட+க்+கின்று+ஆன்
நட-பகுதி
க்-சந்தி
கின்று-நிகழ்கால இடைநிலை
ஆன்-ஆண்பால் படர்கை வினை விகுதி

79தமிழில் திரிந்த சில சமஸ்கிருத எழுத்து எழுதுக?
Image result for உயிர்எழுத்து
Image result for சமஸ்கிருதம்
1)ரிஷிபம்
2)ஷங்கரா
3)விஷம்
4)காவ்யம்
5)பக்கஜம்
6)ஸ்தூலம்
7)தேசம்
8)மாலா
9)ஹோமம்
10)ஹரண்
11)மருக
12)பத்மம்

80. அ+அணி, அ+இடை எவ்வாறு புணரும்?
அ+அணி = அவ்வணி.
அ, இ, உ என்னும் சுட்டின் முன் உயிரும் யகரமும் வர ‘வகரம்’ தோன்றும்.
அ+இடை = ஆயிடை
செய்யுளில் சுட்டு நீண்டு ‘யகரம்’ தோன்றியது.

No comments:

Post a Comment