Pages

Friday 3 April 2015

நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில் 6


நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்
101. ல, ர, ய ஆரிய எழுத்துக்கள் தமிழில் எவ்வாறு புணரும்?
ர, ல, ய என்னும்  மெய்கள் முதலிற்கொண்ட ஆரிய மொழிகள் தமிழில் வரும்போது பின்வருமாறு திரியும்.
ஆரிய எழுத்துதமிழ் எழுத்து(உ.ம்)
ர  முன்அ, இ, உ வரும்இராமன், உரோமம், அரங்கம்
ல- முன்இ, உ வரும்இலாபம், உலோபம்
ய-முன் இ,கரம் வரும்இயக்கன்

102. மூன்றாம் வேற்றுமை உருபு, ஆறாம் வேற்றுமை உருபு முன் வல்லினம் வரின் என்ன நிகழும்?

மூன்றாம் வேற்றுமை உருவு முன் வல்லினம் வரின் இயல்பாகும். (உ.ம்) கண்ணன்
ஆறாம் வேற்றுமை உருபு முன் வல்லினம் இயல்பாக வந்தது
(உ.ம்) தனகைகள் தன செவிகள்

103.  ட, ற ஒற்றுக்கள் எவ்வாறு புணரும்?

ட, ற ஒற்றுக்கள் (அ) குற்றியலுகரங்கள் வருமொழி எதுவரினும் வந்தமெய்யே மிகும்.
(உ.ம்) ஆடு+கால் = ஆட்டுக்கால்
சோறு+வளம்=சோற்றுவளம்

104. குற்றியலிகரத்தின் முன் வல்லினம் வரின் என்ன நிகழும்?

Image result for குற்றியலிகரம்குற்றியலுகரத்தின்
 முன் வல்லினம் வரின் இயல்பாகும்.
(உ.ம்) ஆறு+தலை=ஆறுதலை
எஃகு+பெரிது = எஃகு பெரிது

105. எண்ணுப்பெயர் முன் இற்று, இன் சாரியை வரின் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்?

106. முல்லை+புறவம் விதி யாது?
முல்லை+புறவம்=முல்லையம்புறவம்
ஐகார ஈற்றுச் சொற்கள் வேற்றுமையில் வருமாயின் ஈற்று ஐகாரங்கெடுதலுடன் ‘அம்’ சாரியை பெற்று முடியும். சில சொற்கள் ஐகாரம் கெடாமல் வரும்.

107. தோன்றல், கெடுதல், விகாரம் என்றால் என்ன? உ.ம்?

Image result for தோன்றல் திரிதல்
தோன்றல்
வாழை+பழம்=வாழைப்பழம்.
இச்சொற்கள் இரு சொற்களின் இடையில் புதிதாக ஒற்று தோன்றியுள்ளதால் இது தோன்றல் விகாரம் ஆகும்.

திரிதல்
பல்+பொடி=பற்பொடி
இச்சொற்களில் உள்ள ‘ல்’ திரிந்து ‘ற்’ ஆக மாறியுள்ளது. எனவே இது திரிதல் விகாரம் ஆகும்.
கெடுதல்
மரம்+நாய்= மரநாய்
இதில் உள்ள ஒற்று கெட்டு விட்டதால் இது கெடுதல் விகாரம் எனப்படும்.

108. மெய்முன் உயிர் வருவது இயல்பா? விகாரமா?

மெய்முன் உயிர் வருவது இயல்பாகும்.
தோன்றல்+அழகன்= தோன்றலழகன்
நிலைமொழியின் இறுதியில் நின்ற மெய்யின் மேல் வருமொழி முதலிலுள்ள உயிரெழுத்து வந்து ஒற்றுபட்டு நிற்பது இயல்பு புணர்ச்சியாகும்.

109. ண முன் நகரம் வரின்?

நிலைமொழி இறுதியில் ‘ண’கரம் வரின், வருமொழி முதலில் உள்ள நகரத்தின் நகரமெய் கெட்டு ‘ண’கரமாக திரியும். (உ.ம்) துண்+நன்று=தூணன்று
தூண்+ந்+அன்று = தூணன்று

110. மீன், தேன், குயின் புணரும் முறை யாது?
மீன்
மீன் என்னும் சொல்லின் இறுதி னகர மெய், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வரின் றகர மெய்யாகத் திரிந்தும் திரியாதும் வரும்.
தேன்
மீன்+கண்=மீற்கண்
i)வருமொழியில் மூவினம் வந்தால் இயல்பாகும். (உ.ம்) தேன்+கடிது=தேன்கடிது
Image result for உயிர்எழுத்துii)மெல்லினம் வந்தால் னகர மெய் இரு வழியிலும் கெடும். (உ.ம்) தேன்+மொழி= தேன் மொழி, தேமொழி
iii)வல்லினம் வந்தால் னகர மெய் கெட, வந்த வல்லினமோ அதற்கு இனமான மெல்லினமோ மிகும். (உ.ம்) தேன்+குடம்=தேன்குடம், தேக்குடம், தேங்கும்
குயின்
குயின் என்னும் பெயரும், ஊன் என்னும் பெயரும் வேற்றுமை புணர்ச்சியில் இயல்பாக வரும்.
(உ.ம்) குயின்+கடுமை=குயின்கடுமை
ஊன்+கடுமை=ஊன் கடுமை

111. மகரமெய் முன் ங, ஞ வரின்?
நுந்தம்
எம் தம் ஈறாம் மவ்வரு ஞநவே
நும், தம், எம், நம் என்னும் சொற்களின் இறுதியில் உள்ள மகர மெய் வருமொழி முதலில் வருகின்ற ஞகர, நகரங்களாகத் திரியும்.
(உ.ம்) நும்+ஞாண்= நுஞ்ஞாண்  நும்+நுhல் = நுந்நுhல்
தம்+ஞாண் =தஞ்ஞாண்   தம்+நுhல் = தந்நுhல்
எம்+ஞாண்= எஞ்ஞாண்  எம்+நுhல் = எந்நுhல்
நம்+ஞாண்= நஞ்ஞாண்  நம்+நுhல் = நந்நுhல்

112. கீழ் முன் வல்லினம் வரின்?
கீழ் என்னும் சொல்லின் முன் வல்லினம் வரின் ஒருகால் இயல்பாகியும், ஒருகால் மிக்கும் வருகின்ற விகற்பத்தைப் பொருந்தும்.
(உ.ம்) கீழ்+குலம்=கீழ்குலம், கீழ்க்குலம்
கீழ்+படி=கீழ்படி, கீழ்ப்படி
113. வல்லுக்குதிரை, வல்லக்குதிரை எது சரி?
வல்லுக்குதிரை, வல்லக்குதிரை இரண்டுமே சரி. வல் என்னும் சொல்லின் முன் பலகை, நாய் என்னும் பெயர்கள் வரினும் பிற பெயர்கள் வரினும் வேற்றுமையில் உகரச் சாரியையேயன்றி அகரச் சாரியையும் பெறும் வல் என்னும் சொல்லின் முன் வல்லினம் வரின் ஒற்று மிகும்.
114. இலக்கணப்போலி என்றால் என்ன?
சொற்கள் முன்பின்னாக புணர்ந்திருப்பதை இலக்கணப்போலி என்று கூறுவர்.
(உ.ம்) முன்+இல் என்பதை முன்றில் என பயன்படுத்துகிறோம். ஆனால் இது இல்+முன் என்பதன் சேர்க்கை.
115. ல, ள முன் தகரம் வரின்?
தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வராத ல, ள மெய்கள் அவ்வழியில் வருமொழிக்கு முதலில் வந்த தகரம் திரிந்த இடத்தில் கெடும்.
1.வேல்+தீது=வேறீதுவாள்+தீது=வாடீது
அல்வழியல் வருமொழித் தகரம் திரிந்த இடத்தில் ல, ள, கெட்டன.

116. மகா+ஈசன் எவ்வகைப் புணர்ச்சி கூறு?
குணசந்தி
அ, ஆ முன் இ, ஈ என்னும் எழுத்துக்களுள் ஒன்று வரின் அவ்விரண்டும் கெட ஓர் ஏகாரம் தோன்றும்.
(உ.ம்) மாக+ஈசன்=மகேசன்
117. சாரியை என்றால் என்ன?
சாரியை என்பது ஒரு பதத்தின் முன் அன், ஆன் முதலிய விகுதிகளோ, த், ட் முதலிய பதங்களோ ஐ, ஆல், கு முதலிய வேற்றுமை உருபுகளை வந்து சேரும்போது பொருள் முற்றுப் பெருவதற்கு இடையே சில சொற்கள் வந்து சேருவதுண்டு. இவற்றுக்கு சாரியை என்று பெயர். சில சமயம் சாரியை வரும் புணர்ச்சிகளும் உண்டு. வந்த சாரியை திரிதலும் உண்டு.
(உ.ம்)
பாடுகின்றான் - (சாரியை வரவில்லை)
படுகின்றனன் - (சாரியை பெற்றது)
மரத்தினை  (2 சாரியை பெற்றது)
(மரம்+அத்து+இன்+உ+கு)
118 ஒன்று என்பதன் வேற்றுமைகள் எட்டு கூறுக?
ஒன்று  பெயர்
ஒன்றை  ஐ
ஒன்றால்  ஆல்
ஒன்றுக்கு  கு
ஒன்றின் - இன்
ஒன்றது  அது
ஒன்றின் கண் - கண்
ஒன்று  விளி
119. வேற்றுமை உருபுகள் யாவை?
Image result for வேற்றுமை உருபு
வேற்றுமை உருபுகள் 8 ஆகும். அவை, பெயர், ஐ, ஆல் (ஓடு), கு, இன், அது, கண், விளி
120. உருபு புணர்ச்சி என்றால் என்ன?
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக தெரியுமாறு புணரும் புணர்ச்சி ஆகும்.
(உ.ம்) கல்லால் எரிந்தான்.

No comments:

Post a Comment